தன்னன்னே நானா நன்னே............. ஆகா...... தன்னன்னே நானா நன்னே தனே தன்னன்னே............. ஆமா சாமி..... தன்னே நன்னானே..... ஆகா.... தன்னானே......... வடபழனி ஆண்டவனே!... வடபழனி ஆண்டவனே ஐயா வந்த வினை தீர்ப்பவனே ஐயா வந்த வினை தீர்ப்பவனே வண்ணமயில் மீது வந்த வடிவழகா நீ முருகா வயலூரில் வந்துதித்த வேல் முருகா நீ முருகா வையகமும் போற்றுகின்ற மால்மருகா நீ தன்னான்னே...(மறுபடியும்) தெய்வானை மணவாளனே....... ஏ வேலா வேலா வேலா..... (கோரஷ்) தெய்வானை மணவாளனே தேசமெல்லாம் காப்பவனே ஐயா தேசமெல்லாம் காப்பவனே அரோகரா ( கோரஷ்) தெய்வமாய் வந்துதித்தாய் திருமால் மருமகே முருகா வள்ளிய மணமுடிப்பது நியாயம் ஆகுமா முருகா பழத்துக்கு கோவம் கொண்டு போகலாகுமா அவ்வை கிழவிக்கி...... ஏ முருகா முருகா முருகா........ (கோரஷ்) அவ்வை கிழவிக்கி அருகதை சொன்னவனே ஐயா அருகதை சொன்னவனே அரோகரா(கோரஷ்) அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பிரமணியனே முருகா ஐங்கரனின் தம்பியாக வந்து பிறந்தவனே முருகா அருள்புரிய வேண்டுமய்யா பழனி ஆண்டவனே தன்னானே(மறுபடியும்) பழனி மலை ஆண்டவனே....... ஏ வேலா வேலா வேலா........ (கோரஷ்) பழனி மலை ஆண்டவனே ஐயா பண்டாரமாய் போனவனே ஐயா பண்டாரமாய் போனவனே அரோகரா.... (கோரஷ்) தென்பழனி வேலவனே தேடி வறோமே முருகா தெய்வமாய் நிக்கிறாயே பழனி மலையிலே முருகா தேசமெல்லாம் கூடி நாங்க நடந்து வறோமே தன்னானே (மறுபடியும்) வள்ளிய மணமுடித்து (அப்டிஇஇஇ... கோரஷ்) புள்ளிமயில் வேலவனே. (ஆ ஆன் கோரஷ்) சொல்லிய வரம் கொடுக்கும். (ஆ ஆன் கோரஷ்) சுப்பிரமணியமானவனே. (அப்டிஇஇஇ... கோரஷ்) ஆறுபடை வீடு கொண்டு. (ஆமா சாமி கோரஷ்) ஆறுமுகமானவனே. (ஆ ஆன் கோரஷ்) பேறுபெற்ற திருமுருகா. (ஆஹான் கோரஷ்) பிழை பொறுக்க வேண்டுமய்யா. (அப்டிஇஇஇ... கோரஷ்) குன்றிருக்கும் இடமெல்லாம்......... ஏ முருகா முருகா முருகா...... (கோரஷ்) குன்றிருக்கும் இடமெல்லாம் குடி கொண்ட பாலகனே ஐயா குடி கொண்ட பாலகனே (அரோகரா.... கோரஷ்) குறவஞ்சி வள்ளியத்தான் கரம் பிடித்தவனே முருகா கும்பிட வந்தவர்க்கு வரம் கொடுத்தவனே முருகா கும்பிட வந்தவர்க்கு வரம் கொடுத்தவனே தன்னானே (மறுபடியும்) தென்னாட்டு சீமையிலே.. (அப்டிஇஇஇ கோரஷ்) திருச்செந்தூர் காவடியாம். (ஆமா கோரஷ்) வடநாட்டு சீமையிலே. (அப்டி... கோரஷ்) வருவதெல்லாம் காவடியாம். (ஆமாம் கோரஷ்) பரமகுடி பாதையில. (ஆமா சாமி கோரஷ்) பத்துலட்சம் காவடியாம். (அப்டி கோரஷ்) பழனிமலை முருகனுக்கு. (போடு கோரஷ்) பால் குடத்தால் காவடியாம். (போட் போடு கோரஷ்) ஆற்காட்டு தேசத்துல. (ஏ ஏன் கோரஷ்) ஆறுலட்சம் காவடியாம். (ஆ ஆன் கோரஷ்) ஆறுமுகவேலனுக்கு. (ஆமாம் சாமி கோரஷ்) வருவதெல்லாம் காவடியாம். (அரோகரா கோரஷ்) வாழையடி வாழையாக........ ஏ வேலா வேலா வேலா....... (கோரஷ்) வாழையடி வாழையாக வாழவைக்க வந்தவனே ஐயா வாழவைக்க வந்தவனே (அரோகரா கோரஷ்) சஞ்சீவி மலை அடிவாரத்தில் தொட்டியபட்டியிலே முருகா தெய்வமாய் அமைந்திருக்கும் திருமால்மருமகா முருகா தொழுதிட வந்தோமய்யா திருமால் மருமகா தன்னானே (மறுபடியும்)
@vetrimani180211 ай бұрын
அண்ணா PDF anupou அண்ணா
@dioravi232710 ай бұрын
🙏🙏🙏
@-poonjolai8265 Жыл бұрын
அய்யா உங்களை பாராட்ட வயதில்லை நீங்களும் உங்கள் குழுவினற்களும் அய்யன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏
@shunmuga3743 Жыл бұрын
உடலை புல்லரிக்க வைக்கும் வரிகள்.... அருமை.... வாழ்க வளமுடன் அய்யா.....
@sivajay203511 ай бұрын
True
@kummiadigroupmanapparai4009 Жыл бұрын
அருமையான பாடல் ❤ கண்டிப்பாக இந்த பாடல் இந்த வருடம் பஜனையில் பாடனுனு ஆசை முருகா
@ManikandanManikandan-ow6xi8 ай бұрын
இந்த வடபழனி முருகன் பாடலை கேக்குறதுக்கு எத்தனை நாள் தவம் இருந்தோமோ இப்போது கேட்கிறேன் இந்த முருகன் பாடல் மிக அருமையாக இருக்குது ஓம் முருகா வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@pkmovie99 Жыл бұрын
மனவலி போகி பரவசம் உண்டாகும் பாடல் இது இதே போல பல பாடல்கள் பாடுங்கள் ஐயா ஓம் வெற்றி வேல் முருகா
@ramachandran.v3769 Жыл бұрын
❤நான் தினமும் கேட்கும் பாடல் பழனி மாலை ஆண்டாவனை❤❤❤❤
@sundaresang284010 ай бұрын
புத்துணர்ச்சி அளிக்கும் பாடல் ஐயாவுக்கு நன்றி.........🎉🎉🎉