இளையராஜா இசை மட்டும்தான் தமிழ் சினிமாவின் பெருமை இவருக்கு நிகர் யாருமில்லை இனியும் பிறக்க போவதில்லை
@nirmala2716Күн бұрын
1990 - 1991 காலகட்டங்களில் எங்க ஊரு எல்லா கிராமத்து திருவிழாக்களில் இந்த பாடல் ஒலிக்கும் அன்று முதல் இன்று வரை ...மறக்க முடியாத நினைவுகள் 🥹
@xavierpaulraj23148 ай бұрын
மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் பொங்கி வரும் காவேரி 1989
@RaviKumar-yx4fe6 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க்கை நல்ல இருக்கும்
@jayaseelan37663 жыл бұрын
அருண்மொழி, சித்ரா பாடிய பாடல். ராமராஜன், கெளதமி இருவரின் நடிப்பு, நடனம் அருமை. கிராமத்தில் கல்யாண வீடு, காதுகுத்து வீடு, அனைத்து சுபநிகழ்ச்சிகளில் ரேடியோ செட்டுகளில் கேசட் போட்டு கேட்ட பாடல். ஒலித்த பாடல்.
@தமிழ்தமிழினி3 жыл бұрын
அப்படியா
@PS2-60793 жыл бұрын
1989-ம் ஆண்டு TK.போஸ் இயக்கத்தில், நடிகர்கள் மக்கள் நாயகன் ராமராஜன், கௌதமி, மனோரமா, SS.சந்திரன், மலேசியா வாசுதேவன், ஸ்ரீப்ரியா, டிஸ்கோ சாந்தி, ராதாரவி, கோவை சரளா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "பொங்கிவரும் காவேரி" இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக இளையராஜாவின் இசைக்கோர்வைக்கு ஏற்ப கங்கை அமரனின் கற்பனையில் உருவான தேன்தமிழ் வரிகளை அருண்மொழியும், சின்னக்குயில் சித்ராவும் சிறப்பாகப் பாடி கேட்போரை கனா காண வைத்தது தான் மிச்சம்! பாராட்டுகள்! "துள்ளிக் குதிக்கும் பொன்னிநதிதான் மெல்ல மெல்ல வந்து அணைக்கும் மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச கொஞ்சிக் கொஞ்சி அரவணைக்கும்" இப்போது கொட்டித்தீர்க்கும் கனமழையில் கரைபுரண்டோடும் பொன்னி நதியை கண்முன் நிறுத்தியது போன்றதொரு பிரமை! நிற்க. யார் இந்த ராமராஜன்? மதுரை மேலூரை சேர்ந்த நாடக நடிகர் இராமையா - வெள்ளையம்மாளின் மகனாகப் பிறந்த குமரேசன் படித்து முடித்ததும் சினிமா மீதுள்ள மோகம் காரணமாக திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கியதால் அவர் அந்த வேலையை விட்டு சென்னைக்கு வந்து இயக்குனர் இராம நாராயணனிடம் சேர்ந்தார். சுமார் முப்பது படங்களுக்கு அவருக்கு உதவியாக இருந்து நுணுக்கங்களை கற்றறிந்தார். அவரது இயக்கத்தில் உருவான "மீனாட்சி குங்குமம்" திரைப்படத்தில் முதன்முதலாக சிறுவேடத்தில் அரங்கேறினார். இப்படித்தான் குமரேசன் சினிமாவுக்காக ராமராஜன் ஆனார். அவர் இதுவரையில் சுமார் ஐம்பத்திமூன்று படங்களில் நடித்துள்ளார். மேலும் பதினொன்று படங்களை இயக்கியுள்ளாதாகத் தகவல்! இவரது இயக்கத்தில் உருவான முதல் படமே கங்கை அமரன் இசையில் வெளியான "மண்ணுக்கேத்த பொண்ணு" தான்! முன்னணி நடிகர்கள் மோகன், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் போன்றவர்கள் நடித்த படங்களுடன் போட்டியிட்டு இவர் நடித்த / இயக்கிய இருபதுக்கு மேற்பட்ட படங்களை வெற்றி பெற செய்துள்ளார் ராமராஜன். சிறிய தயாரிப்பாளர்கள் குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்க முதலில் செல்வது ராமராஜனிடம் தான்! கிராமத்து சூழல் நிறைந்த கதையும், அதற்கு உயிரூட்டுகின்ற இளையராஜாவின் கிராமிய இசையும் - பாடல்களும், செந்தில்-கவுண்டமணி நகைச்சுவை கதாபாத்திரங்களும் அவரது வெற்றி பயணத்திற்கு துணை நின்றதை மறுக்க முடியாதல்லவா? நடிகர் ராமராஜன் என்றால் முதலில் ஞாபகம் வருவது "கரகாட்டக்காரன்" படமும், அடுத்து கலர் கலராக அவர் அணியும் உடைகளும் தான்! அந்த Dress Code அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்சிப்படுத்த உதவியதோடு மட்டுமல்லாமல் அது அவருக்கு சரியாக பொருந்தவும் செய்தது என்பது தான் நிஜம்! மக்கள் நாயகனின் அரசியல் பிரவேசம், காதல் திருமணம் முறிவு, சாலைவிபத்து ஏற்படுத்திய உடல்நலக்கோளாறு மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவைகளால் திரைஉலக மார்க்கெட் சரியத்தொடங்கியதை அவரால் சரிசெய்ய முடியாமல் போனதும் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான்! சரி... பாடலிற்கு வருவோம்! கிராமங்கள் மட்டுமல்லாது நகர்புற திருமண வீடு, கல்யாண சத்திரம், காதுகுத்து- மஞ்சள் நீராட்டு விழா நடக்கும் இடங்களில் எல்லாம் இந்தப் பாடல் திரும்பத் திரும்ப கூம்பு ஒலிபெருக்கி மூலம் சலிக்காமல் ஒலித்த ஒரு காலமுண்டு... அப்போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் இதுபோன்ற விழா நடக்கும் இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று சவுண்டு சர்வீஸ் நபரிடம் இந்தப் பாட்டை திரும்பவும் போட நம்மில் எத்தனை பேர் கேட்டிருப்போம்? எல்லாம் நினைவிருக்கிறதா? விரும்புவதை கனவு காணும்போது அதை அடைய முயற்சியும் பிறக்கும் என்பது தானே நிதர்சனம்! காலம் மாறினாலும் நினைவுகள் யாவும் வரிசையில் நின்று திரும்பி பார்க்க வைப்பதின் அழகே தனி தான்! நல்லப் பாடல்களை கேட்டுவிட்டு நம் உதடுகள் தானாக முணுமுணுக்கத் தொடங்கினாலே உணர்வுகள் புத்துயிர் பெறும் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை தான்! இனிமையான இப்பாடல் பிறந்து முப்பத்திஇரண்டு வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இன்று கேட்டால்கூட மெல்ல மெல்ல என்னைத்தொட நெருங்கும் பழைய நினைவலைகளை கண்டிப்பாக தவறவிடமாட்டேன். அருமையான, காதிற்கினிய இப்பாடலை வார்த்தெடுத்தவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்.
@arumugam81098 ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@PS2-60798 ай бұрын
@@arumugam8109 பாராட்டுதலுக்கு நன்றி
@abudhahir898425 күн бұрын
அருமையான எடுத்துக்காட்டு மகிழ்ச்சி. சகோதரா
@PS2-607925 күн бұрын
@abudhahir8984 பாராட்டுதலுக்கு நன்றி சகோ...
@velmurugant207Ай бұрын
இந்த பாடலை அடிக்கடி பாடும் எனது நண்பன் தற்போது இல்லை. இந்த பாடலை கேட்கும் போது நண்பன் ஞாபகம் வந்து விடுகிறது.
@kuppusamydevi36467 ай бұрын
மீண்டும் அந்த காலம் வருமா
@kumarkumaran24852 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா
@DharaneeshDharaneesh-t7f10 ай бұрын
Hi
@DharaneeshDharaneesh-t7f10 ай бұрын
😮😮😮
@arikrishnan2883 ай бұрын
வடமலைப்பட்டி சிவசக்தி திரையரங்கத்தில் பார்த்த அருமையான திரைப்படம்
My Priyanka ramakrishnan elina songlike super Priyanka elina face looks good like like KZbin channel name Priyanka ramakrishnan elina love 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 you love you