Рет қаралды 425
விடுமுறை மறைக்கல்வி விளையாட்டு போட்டி, வங்காலை பங்கு- 2024/01/28
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
விடுமுறை மறைக்கல்வி விளையாட்டு போட்டியானது எம் வங்காலை பங்கில் எம் பங்குத்தந்தையும் மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனருமான அருட்கலாநிதி மரியதாசன் குரூஸ் (றொக்சன்) அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் எம் உதவி பங்குத்தந்தை அருட்ப்பணி பியோ தர்சன் மற்றும் அருட்சகோதரர் விமல் றோய் அவர்களின் ஒழுங்கமைப்பில் மறையாசிரியர்கள், எம் பங்கு இளைஞர் யுவதிகள் மற்றும் பங்கு மக்கள் இணைந்து மறைக்கல்வி விளையாட்டு போட்டியானது மிகவும் சிறப்பிப்பாக நடைபெற்றது.
இவ் விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக அருட்ப்பணி டெஸ்மன் அடிகளாரும்(கற்கிடந்தகுள பங்குத்தந்தை ), சிறப்பு விருந்தினர்களாக ஒய்வு நிலை மன்னார் அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லிடிமல் லெம்பேட், எம் வங்காலை புனித ஆனாள் கல்லூரியின் முதல்வர் திரு. மெறில் பிளேவின் குரூஸ் மற்றும் ஆரம்ப பாடசாலை அதிபர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.