Really பொங்கும் பூங்குகளில்லில் நான் கேட்டு இருக்கிறேன்
@meena5993 ай бұрын
Reminds me of my school days...would love and wait to hear the song.
@RadhaKrishnan-bx5whАй бұрын
70. 80. வருட காலங்களில் இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடல் இலங்கை வானொலியல் தினந்தோறும் எதிரொலிக்கும் பாடல் இது சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@senthilkumar-rm4ii3 жыл бұрын
நதி நகரம் எல்லாம் மாறி விட்டது பாட்டும் மாறிவிட்டது கற்பனை கடந்த காலம் மட்டும் நினைவுகளோடு
@punniakoti33883 жыл бұрын
உண்மை ஐயா
@shunmugasundarame70453 жыл бұрын
கால நதியின் ஓட்டத்தில் அதன் கரைகளில் ஒதுக்கப்பட்ட இது போன்ற இசை மலர்கள் இன்றும் என்றும் மணம் வீசி கொண்டிருக்கும்!
@tamilselvi30343 жыл бұрын
Correct
@seshukumar66273 жыл бұрын
@@shunmugasundarame7045 SUper Shanmuga sundaram....Kavithai Kavithai....
@bossraaja12672 жыл бұрын
Enna saivadu kaaalam oooodi கொண்டே ulllla du manidan மனமும் உடலும் change aaaki கொண்டே
@vadivamballohithaasan7081 Жыл бұрын
எனக்கு பிடித்த நடிகை சுஜாதா நான் பாடசாலை போகும் நாட்களிள் இலங்கை வானொலியில் போகும் பாடல்களை ரசித்து கொண்டு போவேன் ❤
@justinprabhakar90493 жыл бұрын
கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது. ஐயா SPB அவர்களின் குரலும் அம்மா P.சுசிலாவின் குரலும் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்துவிடும். இசை அமைத்த ஐயா M.S.V அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். இசைக் கடவுள் ஐயா M.S.V அவர்கள் புகழ் என்றுமே இவ்வுலகில் மறையாது.
@bossraaja12672 жыл бұрын
உண்மை taan dr compose dr taaaaan
@rangasamy67562 жыл бұрын
Music by Msv
@jeyaramg214211 ай бұрын
@darkprince3600I think you need to listen more songs of both MSV and Shankar Ganesh. Extraordinary sangathis esp for SPB is a usual pattern by MSV in such songs. Clear Msv song
@lakshmilakshmip1112Ай бұрын
சுஜாதா எனக்கும் ரொம்ப பிடிக்கும் spb சார் குரலும் குழைவும் ஐயோ....
@dhandapani4266 Жыл бұрын
ஏதோ ஒரு இன்பம் இந்த பாட்ட கேட்டாலே
@tamilarasus85193 жыл бұрын
இலங்கை வானொலியின் இதயகீதம்
@ramaswamyravichandran96053 жыл бұрын
அந்த காலத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம்..இப்போது நரகம்
@pushpakk20493 жыл бұрын
Yes yes yes
@pushpakk20493 жыл бұрын
Yes yes yes
@nkskr77142 жыл бұрын
Yestrue
@chellathuraistalin8132 жыл бұрын
YES CORRECT IAM ALSO ENJOYED THAT DAYS
@chitraayyaru88172 жыл бұрын
Unmai
@Thambimama3 жыл бұрын
படம்:- என்ன தவம் செய்தேன்; (நலந்தா மூவீஸ்); வெளியீடு:- ஜனவரி 14, 1977; இசையமைப்பு:- எம். எஸ். விஸ்வநாதன்; பாடலாசிரியர்:- கண்ணதாசன் பாடகர்கள்:- P.சுசிலா, SPB; நடிப்பு:- சுஜாதா, விஜயகுமார்; தயாரிப்பாளர்கள்:- டி. சுப்பையா , எஸ்.எம். டி. ரங்கநாயகி அம்மாள், ஆர். ஜெயந்த்குமார்; இயக்குனர்கள்:- கிருஷ்ணன் - பஞ்சு.
@mathivanan79973 жыл бұрын
நன்றி. படத்தின் பெயரை பதிவிட்ட மைக்கு.
@murugaiyanramasamy34263 жыл бұрын
தகவல்களுக்கு மிக்க நன்றி அய்யா.
@vengadasalams95852 жыл бұрын
அய்யா நீங்கள் ஓர் அற்புத தகவல் களஞ்சியம் வாழ்த்துக்கள் அய்யா
நீங்கள் பதிவிடும் பாடல்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையில் முடிக்கமுடியாது.
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
லட்சத்தில் ஒருவார்த்தை எல்லோர்மனதினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடு
@pushpakk20493 жыл бұрын
Yes yes yes
@pushpakk20493 жыл бұрын
Yes yes yes true
@thathurajparamasivam77073 жыл бұрын
இந்த அருமையான குரல்களை கேட்டு ரசிக்க நான் என்ன தவம் செய்தேன்.
@sarasaraKngu27048 ай бұрын
உண்மை
@santhoshsk61553 ай бұрын
Indha padal enne thavam seiden padam.
@nagarajanrr56502 жыл бұрын
Balu வின் இளமையான குரலை எம்ஸ்வி மிகவும் அற்புதமாக பல பல பாடல்களில் உபயோக படுத்தியுள்ளார். அருமை அற்புதம் ஆனந்தம்
@thillaisabapathy92493 жыл бұрын
சுசீலாவின் இதழ் இனிமை ... ஆஹா .. எவ்வளவு இனிதாக இருக்கிறது... எவ்வளவோ நாட்களுக்கு முன் கேட்டது... இடையில் கேட்க முடியாமல் போனது... அரிதான பதிவேற்றம் நன்றி...
@rajendrannanappan29782 жыл бұрын
கடவுளின் குரலாக susheela அம்மாவின் குரல் ஒலித்து கொண்டு இருக்கிறது.
@senthurvelanvivek54046 ай бұрын
அந்தத் தாய்க்கு நாமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.வாழ்க சுசீலா அம்மா நலமுடன் 🙏
@jeyanthibose31683 жыл бұрын
சார் என்ன சொல்ல நீங்கள் இப்படி பாடல்கள் போட்டு மனதை உருக்கும் விதமாக செய்கிறிங்க எல்லா பாடல்கள் கொடுப்பதினால் நீங்கள் வரபிரசாதம் சார் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது 💐👏
@gowrisk50243 жыл бұрын
Markamudeyathapadal
@balachandran95282 жыл бұрын
மறைந்து போன மர்ஃபி,ஃபிலிப்ஸ் வானொலியில் கேட்ட பாடல்கள் அனைத்தும் 🍯🍯🍯 தேன்
@sridharkomala69372 жыл бұрын
Delightful song beautiful
@MuruganMurugan-in3fj8 ай бұрын
நான் இலங்கை வானொலியில் கேட்டிருக்கேன் 1980க்கு பிறகு சின்ன பையன் அப்போ.10. வயசு இருக்கும்
@santhoshsk615528 күн бұрын
25 vayadil ketta padal.indrum inimai.
@SRI-cl7go2 жыл бұрын
இநத பாடலுக்கு இனையான பாடலை நான் இன்று வரை கேட்டதே இல்லை .
@Thambimama3 жыл бұрын
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே லல்ல லல்ல லல்லலலலலாஆஆ லல்ல லல்ல லல்லலலலலாஆஆ ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே சிங்கார செம்மாதுளை உந்தன் செந்தூரம் காட்டும்கலை பொழுது செல்ல பொழுது செல்ல கல்யாண பந்தலிடும் கலைச் சோலை . ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே . கண்ணம் சிறு குழி விழ சிரிக்கின்ற வண்ணம் ம்ம்ம்ம்ம்ம் இன்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம் ம்ம்ம்ம்ம்ம் தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம் ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம் என் வீட்டு பச்சைக் கிளி இன்று என் தோளில் தொத்தும் கிளி இடமிருந்து வலமிருந்து என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி . ஏதோ ஒரு நதியில் ஆஆஆஆ நான் இறங்குவதைப் போலேஆஆ ஏதோ ஒரு இன்பம் ஆஆஆஆ நீ அருகில் இருந்தாலே ஆஆஆ மங்கை தினம் கலகலவென வரும் கங்கை ஆஆஆஆ மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன் ம்ம்ம்ம்ம் ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே கல்யாணப் பெண்ணாயிரு அங்கே கண்ணாடி முன்னாளிரு கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும் அன்பு கொண்ட கண்ணாயிரு . ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
@hemalathams4450 Жыл бұрын
❤
@subramanian43218 ай бұрын
ட
@nausathali88063 жыл бұрын
"என்ன தவம் செய்தேன்" இப்படத்தின் பாடல்களை கேட்பதற்கு என்று மட்டுமே சொல்ல முடியும்.,!! சுசீலா அம்மா பாடத் தொடங்கியவுடன் . இடையில் அட்டகாசமான ஹம்மிங்கோடு இணையும். S. P. B. அருமை அருமை.,!! மெல்லிசை மன்னர், நமக்கு தந்த இனிமையான பாடல்களினால் மட்டுமே...இன்றளவும் பேசப்படுகிறது இப்படம். உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!
@lathasuresh46063 жыл бұрын
உடன்குடியாரிடம் உடன் கொடி கொண்ட தமிழ் நல்ல விமர்சனம் பதிவு
@nausathali88063 жыл бұрын
@@lathasuresh4606 நன்றி மக்கள் திலகத்தின் பக்தரே...!
@bossraaja12672 жыл бұрын
Spb iin decoration taaan அற்புதம் ( Spb sir neeengal போய் 2 yrs aaaaga pppogudu suja இல்லை Spb இல்லை msv இல்லை k.டஜன் இல்லை
@muthuvignesh93772 жыл бұрын
யப்பா....!!! என்னமா இருக்கு இந்த பாடல் கேட்க கேட்க தித்திக்கும் தேன் போல் உள்ளது.....
இந்த பாடலில் சுசிலா அம்மா தான் highlight. சுசிம்மா Dominated the picture and music and balu..... HATS OF SUSILA AMMA.... enna oru voice
@Selvi5748 ай бұрын
Naanum Suseelaama voice ku adimai en ninaivu therindha naalil irundhu🎉
@sekarg6885 ай бұрын
ஆஹா ஆஹா ஆஹா ....ஓஹோ ஓஹோ ஓஹோ...என்ன சொல்ல இன்ப தேன் வந்து பாயுது காதினிலே வாழ்க.
@murugansv31622 жыл бұрын
வரவேற்கிறேன்.இந்த மாதிரியான பாட்டுக்காக...உங்களை
@vairavel51366 жыл бұрын
இது போன்ற இனிமையான பாடல்கள் நம்முடய இளமை வயதில் கேட்க நாம் புண்ணியம் செய்திருக்கிறோம்.
@senthisenthil96653 жыл бұрын
Yeah. You are absolutely right. Well said brother. Thanks.
@v.sivakumarveerapan17396 жыл бұрын
இப்படி ஒரு பாடல் இனி வரப்போவதில்லை.....
@SenthilKumar-wo5gg6 жыл бұрын
V.Sivakumar Veerapan ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்.... ஆனால் ஒரே ஒற்றுமை....எல்லாமே கேட்க இனிமையோ இனிமை...... செந்தில்.....9942077997....
@rangasamyk49126 жыл бұрын
V.Sivakumar Veerapan Yes. U R right.
@vasudevancv84706 жыл бұрын
Yes.
@rangasamyk49126 жыл бұрын
@@vasudevancv8470 Thank you sir.
@VijayaAmbal6 жыл бұрын
V.Sivakumar Veerapan
@VenkateshVenkatesh-vk3pd Жыл бұрын
அன்றும், இன்றும், என்றென்றும், நம்ம SPB சார்....... ஒரு சராசரி தமிழனின், உற்சாகமும்,புன்னகையும், கண்ணீரும், அவரின் பாடல்களில், அனுபவிக்கிறோம்..... 🙏🙏🙏🙏Q🙏
@abdulbros2713 жыл бұрын
அருமை.. என் சிறு வயதில் tent கொட்டாய் படம் ஆரம்பிக்கும் முன் இது போன்ற இனிய பாடல்கள் போட்டு மக்களை கவர்ந்து இழுப்பார்கள்
@User-fn5dr7 ай бұрын
சிவாஜி விஜயகுமார் சிவக்குமார் கமல் 1970-1979 Heroes. ரம்மியமான பாடல்கள்.
@anithamyilsamy63213 жыл бұрын
இலங்கை வானொலியின் இனிய ராகங்கள்
@jahanilango2 жыл бұрын
எல்லாம் மாயாஜாலமா இருக்குப்பா.. என்ன அருமையான பாடல்...
@கண்ணன்.க-ர8ல3 жыл бұрын
ஏதாவது ஒரு வகையில் இது போன்ற பாடல்கள் அனைத்தும் காதல் கதை ஆகிறது.
@manivannans91543 жыл бұрын
இசை தெய்வம் நம்மை விட்டு பிரிந்தாலும், நம் மனதினில் நிரந்தரமாக குடி கொண்டு விட்டார். என்ன ஒரு அருமையான பாடல், இதே போல் ஆயிரக்கணக்கான பாடல்களை கேட்டு கேட்டு ரசிக்க பிறந்திருக்கிறோம்.
@thamaraiselvi13953 жыл бұрын
SPB அவர்களை முதன்முதலில் பாடவைத்தவர் MSV. தான் ஆனலும் அந்த பாடல்கள் வெளிவருதற்கு முன்பே ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்துவிட்டது
@m.k.udayasooriyan4111 Жыл бұрын
இலங்கை வானொலி, எனது பாடசாலை காலம், அறியாத வயதில் காதல் என்று நினைத்து கொண்டு இருந்த ஏதோ சில இனம் புரியாத உணர்வுகள், என்னோடு படித்த நண்பர்கள் இவையனைத்தும் மீண்டும் ஒரு முறை என் மனதில் உலாவருகின்றன. பாடும் நிலாவின் இனிமையான குரல், சுசிலா அம்மாவின் மென்மையான குரல், ஐயா எம்.எஸ்.வியின் மெட்டுக்களில் மிக மிக இரசிக்க கூடிய, போற்றத்தக்க இனிமையான ஒரு மெட்டு. ஐயா நீங்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள். நீங்கள் அனைவரும் வாழ்ந்த வாழுகின்ற காலத்தில், எங்களுக்கு வாழ கிடைத்தது, உங்களுடைய எல்லா பாடல்களையும் கேட்டு இரசிக்க கிடைத்தது, நாங்கள் செய்த பாக்கியம், இப்பிறவியில் நாங்கள் செய்த புண்ணியம். இந்த ஜென்மத்தில் உங்களது பாடல்களை கேட்க வைத்த இரசிக்க வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள். உன் பாதம் சரணடைகிறேன் இறைவா.
@m.k.udayasooriyan4111 Жыл бұрын
இப்பதிவை 2023 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி 18 வது நிமிடத்தில் பதிவு செய்கிறேன். நன்றி நண்பர்களே. அனைவரும் வாழ்க வளமுடன்.
@busriyabanu9775 Жыл бұрын
@@m.k.udayasooriyan4111❤
@dotecc94423 жыл бұрын
பாலுவின் குரல் இனிமை.... பாடல் அருமை.... ஹம்மிங் மிக அருமை....
@ShivaKumar-rh8qe3 жыл бұрын
பல நாள் ஆகி விட்டது இந்த பாடலை கேட்டு.. அற்புதமான பாடல்💐💐
@chelladuraigovindarajulu6703Күн бұрын
இந்த மாதிரி பாடல்கள் கேட்டால் நம் இளைய பருவம் மட்டும் அல்ல, நம் இறந்த முன்னோர்கள் நம்முடன் இருப்பது போன்ற நினைவுகள் வருகிறது.
@mohammedalim37136 жыл бұрын
சிறு வயதில் பெரிய அண்ணன்மார்களின் உதட்டில் தவழ்ந்த பாடல்
@RamKumar-dz7st4 жыл бұрын
Nice song
@sundaramr91883 жыл бұрын
கனிவூட்ட ஒரு காதல் பாடல் கேட்கிறேன்.காலங்கள் மாறலாம்.காதல் மனங்களின் எண்ணங்கள் என்றும் இனிக்கும்.04.08.2021...இன்று இந்த பாடல் கேட்கிறேன்.அன்றைய நினைவுகள் மனதில். பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@sundaramr91883 жыл бұрын
நன்றி.வாழ்க வளமுடன்.
@chellathaiganapathy24223 жыл бұрын
இன்றும் நான் கண்களை மூடி ரசித்தேன்
@sundaramr91883 жыл бұрын
@@chellathaiganapathy2422 நன்றி.
@jacksonwin8443 Жыл бұрын
மிக அருமையான ராகத்தில் அமைந்த பாடல்.....
@rajankannan31103 жыл бұрын
அற்புதமான பாடல். கேட்டால் போதும் நோய் நொடி கூட ஓடிவிடும்
@rojasalamath65092 жыл бұрын
Intha movie upload seiyavum
@kumaranmuthuvel979Ай бұрын
இலங்கை வானொலியின் அருமை இப்ப தெரிகிறது.....
@kubendranp25193 жыл бұрын
ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே....இந்த வரிகளை பாலு உச்சரித்தவிதம் தேனில் ஊறிய பலாச்சுவை
@kubendranp25193 жыл бұрын
எனது மனதை அப்படியே பிரதிபலித்தீர்கள்...அந்த ஒரு வரிக்காகவே ஆடியோ கேசட்டை தேய்த்த காலங்கள் திகட்டாதவை.
@vigneshsriraman35963 жыл бұрын
தினமும் ஒரு இசை விருந்து.. கேட்க கேட்க திகட்டாத தேன் இசை விருந்து. எல்லாமே அந்தக் காலத்தில் நான் மகிழ்ந்து திளைத்த பாடல்கள். நன்றி நண்பரே
@sivakumarperumal74743 жыл бұрын
நன்றி.
@gkkrishnan92713 жыл бұрын
நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் இந்த திரைப்படம் பார்த்த நினைவு பின்னோக்கி செல்கிறது . சுசீலா அம்மாவும் பாலுவும் குரல்களில் தேன் திகட்டாத
@murugaiyanramasamy34263 жыл бұрын
மனதை மிருதுவாக்குகிறது இதுபோன்ற பாடல்கள்
@mathivanan79974 жыл бұрын
ஏதோ ஒரு இன்பம் இந்த பாடலை கேட்டாலே மலரும் நினைவுகள் தோன்றும் ரசிக்கும் மனதாலே
@jeyakodim19793 жыл бұрын
ஏதோ நதியில் நான் இறங்குவதைப் போல!!உண்மை தான் ...இந்த பாடலைக் கேட்கும் போது ஏதோ ஒரு இன்பம்....ஒருமுறைக் கேட்டால் மறுமுறையும் கேட்கச் சொல்லும் மந்திரப் பாடல்..
@grumapathi77783 жыл бұрын
🤗😛
@mohamedhussain67643 жыл бұрын
பாடல் சூப்பர் நம்மைவாலிபவயதுக்கு கூடச் செல்வதுபோல உள்ளது
@ramalingamr34343 жыл бұрын
நம்மையும் அல்லவா நதியில் இழுத்துக்கொண்டு செல்கிறது இசை , ❤️❤️❤️
@rojasalamath65092 жыл бұрын
Full movie upload
@licdurai52112 жыл бұрын
மிக நல்ல பாடல் MSV இசை அருமை
@balasubramanianraja98753 жыл бұрын
இசையின் இறைவன் ஐயா மெல்லிசைமன்னர்
@tamilmannanmannan58023 жыл бұрын
Super🎹🎻
@NICENICE-oe1ct4 жыл бұрын
MSV the emperor of melody. No copy cat maestra can create this kind of songs.
@xavierjoseph7468 Жыл бұрын
இசை ஞானி ராக தேவன் னு ஓருவரை புகழ்ந்து கொண்டு திரியும் கும்பல் எம் எஸ் வி , வி .குமார் இசையமைத்த பாடல்களை கேக்க வேண்டும்
@raghuraman14402 жыл бұрын
The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya.
@raokk20773 ай бұрын
படம் ஒடவிட்டாலும் பாடல்கள் ஆனெத்தும் A one
@cjmathiyas35873 жыл бұрын
கருப்பு வெள்ளையாக இருந்தாலும் வண்ணமயமாய் ராகதாளங்கள்!!!.....
@babumohan4549 Жыл бұрын
well said sir 🥰🙏💖
@amuthajayabal8941 Жыл бұрын
கடவுளுக்கு நன்றி சொல்லி... என்ன அருமையான வரிகள்
@arumugam8109 Жыл бұрын
விஜயகுமார். சுஜாதா. ஜோடி🙏🍍 சூப்பர்🙏🕌🌹 பாடல் அழகு😍💓
@hajamohaideen38213 жыл бұрын
True Music Lovers urgently need time machines to live again in the Golden era of University of Music M.S.V the Greatest
@HealingHarmonica2 ай бұрын
ஏதோ ஒரு இன்பம் இந்தப் பாடலைக் கேட்டால் 🎉
@ranganathanm99153 жыл бұрын
What a song in 70s ... All in one song ... super ... மலரும் நினைவுகள் ... இசைப்ப்ரியன்...
@rajanrg5 жыл бұрын
இளையராஜா அவர்கள் அன்னக்கிளி என்ற தென்றலுடன் கால் பதித்த பின்னும் எம் எஸ் வி அவர்களால் தரப்பட்ட மிகவும் இனிய பாடல் சூப்பர் ஹிட் பாடல். spb p suseela combine best
@SenthilKumar-wo5gg5 жыл бұрын
உண்மை நண்பரே.....
@NICENICE-oe1ct4 жыл бұрын
Ilayaraja never touched the class of MSV. Ilayarajavukku oru naeram avvalavuthan. Gangai amaran illai endral ilayarajavai oruthanum koopittu irukkamattaan. Thalaikanathal market ilandhu kuchery seithu vaalgiraar. Antha light music kucheryum MSV kandupitichathu.
@tamilmannanmannan58023 жыл бұрын
@@NICENICE-oe1ct Super🎹🎻
@narayanaswamys87863 жыл бұрын
@@NICENICE-oe1ct but, in the past, KVMahadevan, Vaedha, SKumar, TRPaappaa, Sankar-Ganrsh, we're also very good music directors during MSV's period..
@jagadeeshsingaravel35063 жыл бұрын
@@NICENICE-oe1ct 🤣😂🤣🤣🤣😅🤣🤣
@umaappaumaappa82083 жыл бұрын
இந்த பாடலைகேட்க்கும் போதோ இன்பம்.இன்பம்.இன்பம்தான்
@shanmugams5661Ай бұрын
நல்ல பாடல்களை பதிவேற்றும் கரங்களுக்கு நன்றி நன்றி 🙏
@shunmugasundarame70453 жыл бұрын
MSV the great composer! Susheelamma & SPB the great singers! And we....The great lovers of music!
@nagarajanrr56502 жыл бұрын
பாலு அவர்கள் மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் சேர்ந்து விட்டால் அந்த பாடலின் சுகமே தனி தான். வாலி அவர்களின் அற்புதமான கவிதையை அவருடைய மிகச் சிறந்த நண்பர் விஸ்வநாதன் பட்டை தீட்டி அவருடைய சிஷ்யனான பாலுவை வைத்து ஒரு விளையாட்டு விளையாண்டுருக்கிறார்
@karthik5901 Жыл бұрын
வரிகள் கவிஞர் கண்ணதாசன்.
@karthik5901 Жыл бұрын
வரிகள் கவிஞர் கண்ணதாசன்.
@vairavel51366 жыл бұрын
பாலுவின் தேன் குரலில் இளமை துள்ளும் பாடல்.
@shivadurga70813 жыл бұрын
இனிமைஅருமை
@vengadajalamvengadajalam21137 ай бұрын
இலங்கை வானொலியில் அன்றைய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒலிப்பரப்பான பாடல். இந்த பாடலை கேட்டு, இந்த படத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது. இதனால் தான் அன்று சினிமா வாழ்ந்தது. குறைந்த செலவில் நல்ல கதையம்சத்துடனும், இனிய பாடல்களுடனும், நகைச்சுவை காட்சிகளுடனும் படம் தயாரித்தார்கள். படம் வெற்றி பெறாவிட்டாலும் நஷ்டம் என்பது மிக குறைவாக இருக்கும். ஆனால், இன்று பெரிய நடிகர்களின் படங்கள் தொடர் விடுமுறை நாட்களை நம்பியும், மற்ற நடிகர்களின் படங்கள் ஒரு வாரம் திரையரங்குகள் கிடைக்காதா? என்ற எண்ணங்களினாலும் படங்களை வெளியிடுகிறார்கள். விடுமுறை நாட்களில் திரையரங்குக்கு செல்லும் பார்வையாளர்களை நம்பி சினிமா நகர்ந்து கொண்டு இருக்கிறது.
@xavierpaulraj2314 Жыл бұрын
அந்த காலத்தில் சிங்கப்பூர் வானொலியில் அடிக்கடி வலம்வரும் பாடல் இரவு நேரத்தில் கேட்க நன்றாக இருக்கும்
@MSVTIMES20069 жыл бұрын
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவது போல ஏதோ ஒரு இன்பம் உன் பாடலை கேட்கையிலே
@abdulbaasith48376 жыл бұрын
MSVTIMES. அருமை
@Yuva43214 ай бұрын
கடைசி சரணம்.. என்ன வேகம்.. என்ன வார்த்தை விளையாட்டு.. உச்சரிப்பின் அழகு.. அடடா.. காலம் உறைந்த கணம் என்பது இந்த பாடலைக் கேட்கும் தருணம்.
@antonyfrancis73572 жыл бұрын
Sujatha & Vijayakumar were a popular pair those days after their first movie Aval oru Thodarkadhai
@vasudevancv84706 жыл бұрын
EXCELLENT RHYTHM, especially for the Pallavi & Anu Pallavi portions using Ghatam brilliantly. This kind of variation thru varying percussion instruments was the Hallmark of MSV which is called the "MSV Effect". Both Susheela and SPB thoroughly enjoy this composition and their own singing.
@Gendernill5 жыл бұрын
Agree fully. What a melodious gem from the genius MSV !
@AjayAjay-vw3rr3 жыл бұрын
Ragam narayani?
@vasudevancv84703 жыл бұрын
@@AjayAjay-vw3rr No Brother. This composition appears to be a Light Song only. Definitely, I don't see Narayani Raagam in this composition, as I hv, of course, heard that Raagaa quite a few times thru the Krithi " Raamaa Neeve".
@AjayAjay-vw3rr3 жыл бұрын
@@vasudevancv8470 thanks 😊
@jeyaramg21423 жыл бұрын
Song starts off with Mohanam base
@Shivaji-up9jm2 ай бұрын
இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ் சேவை இரண்டு பொங்கும் பூங்குழலில் கேட்டு மகிழ்ந்த அந்த தருணங்கள் மறக்க முடியாதவை.
@meena5993 ай бұрын
Beautiful composition..favorite song too!,
@nallasivamn4526 Жыл бұрын
இனிமையான ஒரு பாடல் தெவிட்டாத தேன் போல
@Vasantha-e4r Жыл бұрын
Entha padal ethanai murai kettalum salikkathu very supper ❤❤❤❤
@sankarraja79553 жыл бұрын
சிவகுமார் சார் உங்களைப்போன்றவர்களின் சேவையினால்தான் என்னைப்போன்றவர்களுக்கு ஓய்வுநேரங்கள் இனிமையாக உள்ளது. மிக நன்றிசார்.
@sivakumarperumal74743 жыл бұрын
நன்றி திரு சங்கர் ராஜா
@vijisanjaraipetti22053 жыл бұрын
மறக்க முடியாத பாடல்
@solaris72194 ай бұрын
Heard this when im going to school on the way through radio , walking with my mom . Im 55 now, really want to go back to that time 😢
@ThirunavukkarasuAlagappa-fu1gp4 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது பழைய சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன
@pioneerraja65 жыл бұрын
சிறு வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்
@pushpakk20493 жыл бұрын
Yes yes yes
@tpalanichamy3 ай бұрын
சிலோன் ரேடியோ - 1970s பள்ளி பருவங்கள் - மனதில் இனிமையாக வந்து வருடுகிறது.
@tpalanichamy6 жыл бұрын
This song Reminded me of Radio Ceylon of the late 70s....getting ready to school, our watch was radio Ceylon timings... Golden days...
@silverstar2522 Жыл бұрын
பாடலில் வரும் அனைத்து ஹம்மிங்குகளும் அவ்ளோ அற்புதம்!
@selvaprasads.s1365 Жыл бұрын
Really 1970s songs and movies are very amazing and remembering
@helenpoornima51263 жыл бұрын
அருமை !எஸ்பீபீ சுசீலா நல்ல ஜோடி 💑 ! நல்லப் பாடல்! நன்றீ
@RaviKumar-ux8fj3 жыл бұрын
Yesss....!!👌👍
@RaghuramanK-gw9so7 ай бұрын
The world greatest music director the one and only the great idaikkadavul MSV Ayya.
@arulkumar.cchinnasamy76473 жыл бұрын
ஒரு படி தேன் சாப்பிட்ட உணர்வு.இந்த பாடல் வரிகள்.
@annapooranisachin41746 жыл бұрын
Spb sir and suseela mam sung this song wonderfully
@manoharmano3924Ай бұрын
Indha paadal ketkumbodhu manadhil oru paravasam.
@sarasaraKngu27048 ай бұрын
அருமையான பாடல். இன்று ஏது இது போன்ற வரிகள்?சுஜாதா அவர்கள் பெரும்பாலும் சோக முகத்தில் பார்த்ததற்கு இந்த பாடல் பெரும் ஆனந்தம்! இன்று தான் முதல் முறையாக பார்க்கிறேன். சித்திரை மாதம் குரோதி வருடத்தில். 2024
@kannansaravanan80192 жыл бұрын
Magnetic voice of spb and the queen of music p.suseelaama
MSV the great... Super composition.. This song must have been the inspiration for Ilayaraaja for the song Nadhiyoram from the film Annai Oor Aalayam, again an SPB -PS duet... MSV is always the numero uno composer in India & there are no second thoughts about it...👌👌👍👍
@user-pd1cr1kk2k3 жыл бұрын
ஏய் நீ இங்லிஷ் காரனுக்கு பொறந்தவனா? தமிழ் தெரியாதா?
@Alin-tae2 жыл бұрын
சொல்றதுக்கு நிறைய இருக்கு பாடலை கேட்கும்போது வரும் ஆணந்தத்தை சொல்லமுடியலயே ..........!!!!!!???