4K | 2022 ல் சோழ தலைநகரம் பழையாறை - சோழர்களின் அரண்மனை | Ponniyin Selvan Vlog Episode 6

  Рет қаралды 1,335,184

Michi Network

Michi Network

Жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
Firesong by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/...
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/
Thank You :
Vocal : Kesavaraj krishnan
Composer : Kesavaraj krishnan
Veenai : P.Jayalakshmi premkumar
Flute :Dr.Radhakrishnan
Nadaswaram : Saravanan
Music & Sequence : Dr.Radhakrishnan
Mixing & Mastering : Sunish S Anand (Bensun Studio)
Ciniematography : Niroop pazhayadath
Grading : Hari G.Nair
Editing : Gimod KPBA
Direction : Vinod Kumar
Production : Vedicpix
Subscribe to my KZbin Channel :
kzbin.info/door/Vx_...
Catch up with me on FACEBOOK at:
/ keshva.raj.3
Title: Dive into the Epic Tale: "Ponniyin Selvan" Book Review | Must-Read Classic
Description:
Embark on a literary adventure as we delve into the timeless masterpiece, "Ponniyin Selvan," penned by the legendary Tamil writer Kalki Krishnamurthy. In this comprehensive book review, we unravel the intricate layers of this epic saga set in the vibrant Chola dynasty.
Join us as we navigate through the corridors of power, political intrigue, and romantic escapades that define the narrative of "Ponniyin Selvan." From the enigmatic characters like Vandiyathevan and Nandini to the sweeping landscapes of ancient Tamil Nadu, every page of this magnum opus is infused with drama, passion, and historical authenticity.
Through insightful analysis and discussion, we explore the themes of loyalty, betrayal, and the pursuit of power that resonate throughout the narrative. Whether you're a seasoned literature enthusiast or a newcomer to Tamil literature, "Ponniyin Selvan" promises to enthrall and captivate with its timeless charm and narrative grandeur.
Join us on this literary journey and discover why "Ponniyin Selvan" continues to mesmerize readers across generations, cementing its status as a must-read classic in world literature.
📚 Don't forget to subscribe to our channel for more book reviews and literary explorations! 📚
#PonniyinSelvan #KalkiKrishnamurthy #TamilLiterature #BookReview #ClassicLiterature #EpicSaga
For more details, contact:
kkeshavaraj@gmail.com

#ponniyinselvan
#ponnienselvan motovlog #ponnienselvan tour #Veeranarayana lake #mela kadambur #ponnien selvan movie # ponnien selvan kollidam river # kudanthai jodhidar #ponnienselvan #himalayanadventureooty #ponnienselvan #ponnien selvan places #Raja Raja Cholan # arulmolivarman

Пікірлер: 1 000
@rajaalagusamy1268
@rajaalagusamy1268 Жыл бұрын
பல கோடி செலவு செய்து அரண்மனை செட்டிங் போட்டு படமெடுத்ததிற்கு பதில் இந்த இடத்தை புதுப்பித்து படமெடுத்திருந்தால் இன்னும் பிரம்மாண்டமாக இருந்திருக்கும் இந்த நினைவுச்சின்னமும் புதுமையடைந்திருக்கும்..
@karthikeyantr626
@karthikeyantr626 Жыл бұрын
good apt statement 👍👍👍
@sacrateesperiyasamysack90
@sacrateesperiyasamysack90 Жыл бұрын
ஆமாம்
@r.v.m3740
@r.v.m3740 Жыл бұрын
இதுதான் 2022 உலகம்...இப்போ வாழுற தமிழரர்களின் எண்ணம்..ராஜா ராஜா சோழன்...சின்னம்
@indiramurugan2146
@indiramurugan2146 Жыл бұрын
அண்ணா அவ்வாறு செய்வது சற்று கடினம் , Archaeological survey of India மற்றும் மத்திய அரசின் முறையான ஒப்புதலும், மேலும் கட்டிட நுணுக்கங்கள் மிகவும் முக்கியமானது எளிதில் ஒரு திரைப்பட தனியார் நிறுவனத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க மாட்டார்கள்
@muthumuthu2485
@muthumuthu2485 Жыл бұрын
Correct Sir. Rightly said.
@Tami_ln
@Tami_ln Жыл бұрын
நம் சோழ இளவரசி குந்தவையும்,விசயாலய சோழரும் மற்றும் ஏனையவர்களும் இந்த இடத்தில் தானே நடந்திருப்பார்கள் ,வாழ்ந்திருப்பார்கள்... 💔💔💔💔💔💔💔💔💔😥😥😥😥😥😭😭😭😭😭... யாருமே அவ்வளவாக காணொளியில் கொண்டு வராத ஒரு இடம் இந்தப் பழையாறை.... தங்கள் உழைப்பிற்கும் தமிழ் மீதான அன்பிற்கும் ஈடு இணை இல்லை... கோடி நன்றிகள்....!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@Balamanimaran
@Balamanimaran Жыл бұрын
கோயில் மட்டுமல்ல தமிழன் என்ற உணர்வும் தான் சிதிலமடைந்துள்ளது பார்க்க பார்க்க கண்ணீர் பெருகுகின்றது விடிவை நோக்கி.............
@lavender8131
@lavender8131 Жыл бұрын
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சொல்லுக்கு ஏற்ப மிகவும் உருக்கமான பாடல்வரிகள் உருக்கமான குரல் ஓசையுடன் பழமையான கோவில் பின்னணியில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. கோடானுக் கோடி நன்றிகள் பாபு. வாழ்க நீ எம்மான்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@gemrish6774
@gemrish6774 Жыл бұрын
Pl give the link of Thiruvasagam song. It is excellent touching heart.
@lavender8131
@lavender8131 Жыл бұрын
@@gemrish6774 just find out in KZbin thiruvasagam kesavaraj. U will get the same.
@nirmalaalphonse9690
@nirmalaalphonse9690 Жыл бұрын
It recalls that my school days when we were asked to render these verses by heart. So touching ..it melts our heart .
@rajavishnu210
@rajavishnu210 Жыл бұрын
AZ,
@Ramana1781Switzerland
@Ramana1781Switzerland Жыл бұрын
சோழர் உலகத்ததுக்குள் எம்மை அழைத்து சென்றமைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽 பாபு
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
அற்புதமான காட்சி,காணொலி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 செளராஷ்டிராவிலிருந்து,பட்டுத்துணிநெசவுசெய்பவர்களை அழைத்துவந்து தாராசுரம்,திருபுவனத்தில் ,கோவிலைச் சுற்றி இடமளித்து,நெசவுத் விரிவுபடுத்தினார் இராஜராஜசோழன். இன்றளவும் அவர்கள்தான்பட்டுநெசவுதமிழகம் முழுவதுமாகச்செய்கின்றனர்..
@popsmiley8888
@popsmiley8888 Жыл бұрын
Pattukku mattuma
@thenmozhis.s1983
@thenmozhis.s1983 Жыл бұрын
Aama athunalatha Kumbakonam suthi neraya per irukanga sowrashtra lenthu
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
பழையாறை கோயில் சிதிலமடைந்து கோபுரத்தில் செடி கொடிகள் வளர்ந்திருப்பதை பார்க்க மிகவும் மனம் வருந்துகிறது. இதை உடனே அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும்.
@vasanthyramaswamy3025
@vasanthyramaswamy3025 Жыл бұрын
எதையும்காக்க நமக்கு சமத்த்து இல்லை
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Amma Stalin kilippaandaa 🐕
@seram3805
@seram3805 Жыл бұрын
அரசுக்கு தெரியாமலா?
@mahadevan1821
@mahadevan1821 Жыл бұрын
பல வருடங்களாக இதே நிலைதான்
@sciencegeek2791
@sciencegeek2791 Жыл бұрын
After PS everyone attention has got in. Soon these places will be tourist hotspot… Renovation will happen
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
பரம்பு தேசம் விட்டு சோழ தேசம் காணவந்த பாபுவே வா.... வந்து ஏன் முப்பானட்டானை பார், எம் குலத்தை பார்...... எங்களை அழ வைப்பதில் உனக்கு என்ன சந்தோஷம்....... திருப்புகழ் உருகி..... எங்கள் மனங்களை உருக்கியது.....
@banubalabala3041
@banubalabala3041 Жыл бұрын
இந்து கலாச்சாரத்தை ஓங்கி பறையடித்து பெருமை சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள். ஆசீர்வாதம்!
@shanthu..
@shanthu.. Жыл бұрын
S bro christian kovil, tamilnra perla olinjikitu varuvanunga..
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு தமிழக அரசு இந்த நினைவு இடங்களை மராமத்து பணிகள் மேற்கொண்டு தமிழக மக்களுக்கு அளிக்கவேண்டும் நன்றி 🙏🙏🙏
@mythileeniranjan8485
@mythileeniranjan8485 Жыл бұрын
மிகுந்த சிரமப்பட்டு சோழர் வாழ்ந்த இடங்களை காட்டியதற்கு நன்றி. சோழவீரர்களின் வேல்களின் மத்தியில் அமர்ந்த போது புல்லரித்தது. கோயிலும் மேலும் சிதிலமடையாமல் பாதுகாக்க தமிழன் ஆட்சிக்கு வரவேண்டும்.
@ramachandran6831
@ramachandran6831 Жыл бұрын
@MEDIA 29 நாம்தமிழர் கட்சி சீமான்!
@venkatesansrinivasan8108
@venkatesansrinivasan8108 Жыл бұрын
ஆம் உண்மை
@RajkumarRajkumar-kh7zf
@RajkumarRajkumar-kh7zf 11 ай бұрын
Thankyou sir
@HariHaran-wl7yh
@HariHaran-wl7yh 10 ай бұрын
0:10 0:10
@mars-cs4uk
@mars-cs4uk 5 ай бұрын
60 ஆண்டுகளாகத் தமிழ் உணர்வு இல்லாதவர்கள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசியவர்கள்) தமிழ்நாட்டை ஆண்டதால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படுகிறது. சீமான் வந்தால் நிச்சியம் தமிழன் வரலாறு காப்பாற்றப்படும். கேலோ இந்தியா விளையாட்டுக்கு 10 கோடி, நடிகர்களுக்கு 500 கோடியில் கட்டிடமும் கட்ட மாட்டான் சீமான். தமிழா முடிவு செய் யார் தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்று. தமிழ்நாட்டை தமிழர்கள் ஆண்டு இருந்தியிருந்தால் தமிழர்களின் வரலாறு காப்பாற்றப்பட்டு இருக்கும்.
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 Жыл бұрын
பின்னணி பாடல் சிவபெருமான் காலடியில் மண்டியிட்டு வணங்கியது போன்ற ஒரு உணர்வு பாபு ஓம் நமசிவாய 🙏🙏🙏
@nirmalaalphonse9690
@nirmalaalphonse9690 Жыл бұрын
Yes so good the background rendition than just high sounding music.
@venkateshkrishnasamy3373
@venkateshkrishnasamy3373 Жыл бұрын
Can some one share that song link?
@tharik346
@tharik346 Жыл бұрын
@@venkateshkrishnasamy3373 kzbin.info/www/bejne/fV6pfKeopaeJrcU I think, this is the one.
@balunaren2244
@balunaren2244 Жыл бұрын
இந்த காணொலி அருமை... ஒரு காலத்தில் சோழப் பேரரசர்கள் பெரும் படையுடன் நடமாடிய இந்த இடங்கள் பார்க்கும் போது பெருமையாக உள்ளது...
@ThiruMSwamy
@ThiruMSwamy Жыл бұрын
அந்தகால அரசவையில் பொது மக்கள் அடிமைகள் என்பதை மறந்து விடாதீர்கள்
@beesfamily21
@beesfamily21 Жыл бұрын
@@ThiruMSwamy What about now? Even now we are being enslaved by co-operates and the illuminates. Look, how they fooled all to go for Kellogg which is not at all good for health. Until we don't use our brain properly to identify who we are and what our goal is and don't proceed to achieve our goal, we are always slave to one or the other factor in this society.
@barath903
@barath903 Жыл бұрын
@@ThiruMSwamy நீங்கள் கூறுவதெல்லாம் நாயக்க மன்னர்கள் ஆட்சியில்😂
@ThiruMSwamy
@ThiruMSwamy Жыл бұрын
@@barath903 அரசர்கள் இக்கால "தாதாக்கள" எல்லா அரசர்களும் மோசம் தான் ஆனால் ஓரிரு "கவுதம் புத்தர்" போல மக்களுக்காக அரச முடியை துறந்தவர், நம்ம அரச வள்ளல்கள் பல....
@mahamaha5622
@mahamaha5622 Жыл бұрын
இந்தக் கோயில் எல்லாம் கருணாநிதி பையனுக்கு தெரியலையா இதெல்லாம் சீர்படுத்த கூடாதா கோயிலுக்கு கோவிலுக்கு நான் காசு செலவு பண்றேன் இவ்வளவு பண்றேன் அவ்ளோ பண்றேன் நான் எந்த பள்ளி அத பழைய எதுவும் சொல்றாங்க அதெல்லாம் பார்க்க கூடாதா பார்க்கும்போதே வயிறு எரியுது நாட்டுக்கு ஏதோ செய்றேன்னு சொல்ற இது ஒன்னு செஞ்சுட்டு போ என் போறதுக்கு
@anantharamann2646
@anantharamann2646 Жыл бұрын
இவரின் தேடலே... போன ஜென்மத்தின் புண்ணியமோ... இவர் கண்களில் தேடுதலில் தீர்க்கம் தெரிகிறது! யார் கண்டார்கள் ? சோழர்கள்காலத்தில் வாழ்ந்தவர்.. இந்த ஜென்மத்தில் மீண்டும் பிறந்து இருக்கிறாரோ? என்னவோ? வாழ்த்துக்கள்! மிக அழகான பதிவு!
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@baskarsmile9761
@baskarsmile9761 Жыл бұрын
நமது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் சிதைந்து கொண்டிருக்கிறது. கோபுரத்தின் மேலே உள்ள செடிகளை அப்புறப்படுத்தி பராமரிக்க வேண்டும் ❤️
@balasubramanian7059
@balasubramanian7059 Жыл бұрын
Vazha sozha vamsam
@radhakrishanankrishnamurth6646
@radhakrishanankrishnamurth6646 Жыл бұрын
Superb sir. Thank u.
@ranjithkct
@ranjithkct Жыл бұрын
ஒன்னும் நடக்காது😂. அந்த கோபுரம் அழிவு காலத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது
@kandeepanluxmi9849
@kandeepanluxmi9849 Жыл бұрын
Yes yes please clean that
@sudhavarshini2175
@sudhavarshini2175 Жыл бұрын
அருமை... அருமை... தம்பி நான் தமிழாசிரியை... தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் சிறப்பான வரலாற்று பொக்கிஷம் இந்த இடங்கள் ... வரமுடியாதவர்களுக்கு .. இந்த காணொளி வரப்பிரசாதம் தம்பி... ஒவ்வொரு சிலைகளும் சிற்பங்களும் அக்கால வாழ்க்கைக்கே கொண்டு செல்கிறது தம்பி .. நன்றி தம்பி ...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@kannankannan-ms9de
@kannankannan-ms9de Жыл бұрын
பின்னணி பாடல் அருமை கண்களை மூடி கேட்டால் மீண்டும் திறக்க மனமில்லை ஓம் சிவாய நம போற்றி🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@rammoorthykuppusamy4268
@rammoorthykuppusamy4268 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் புனைவுகள் அதிகம் இருப்பினும் உலகத்தமிழர்களை நம் முன்னோர்கள் ஆட்சியை திரும்பி பார்க்க வைத்துவிட்டது. நம்மை ஏமாற்றி இத்தனை காலம் ஏமாற்றி ஏய்ச்சிவந்த திரவிடகூட்டத்தால் தாங்க முடியவில்லை. புலம்புகிறார்கள்.வாழ்த்து தம்பி..
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@beatit9474
@beatit9474 Жыл бұрын
Ada tharkuri
@beatit9474
@beatit9474 Жыл бұрын
Intha alavukku maintain avarathe dhraavidathal dan
@arivuchelvankasi
@arivuchelvankasi Жыл бұрын
இராமாயணம் உண்மைனு நம்புற கூட்டம் நாளைக்கு நந்தினியும் உண்மைனு நம்பும் கரிகாலனை கொன்ற சோழியான்குடுமிக்கு உடுக்கையடித்து சேவகம் செய்யும். ஏன்டா இந்த பிச்சு பிழப்புனு கேட்டா சொல்வாம்பாரு திராவிடத்தால் வீழ்ந்தோம் உறேவ்வே...
@priyankas2357
@priyankas2357 Жыл бұрын
இதை பார்க்கும் போது ரத்தம் கண்ணீர் வருகிறது என் அப்பா ஈசனுக்கு இந்தா நிலையா நம் முன்னோர்கள் விட்டு சென்றா போக்கீசம் பாத்துக்கவேண்டும்
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
இந்த இடங்களை பார்க்கும்போது மனதில் இனம்புரியாத ஏதோ ஒன்று தோன்றுகிறது வருத்தமா பிரமிப்பா மகிழ்ச்சியா புரியவில்லை ஒரு மாளிகை கூட இல்லாமல் தரை மட்டமாகி விட்டார்களே நல்ல வேளை கோயில்களை ஏதும் செய்யாமல் விட்டுவிட்டார்களேபதிவிற்கு நன்றி
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@JudeThambiaiah
@JudeThambiaiah Жыл бұрын
sorry to say தமிழ் மன்னர்களின் அரண்மனையை நீங்கள் எங்கும் காண முடியாது காரணம் அது பிராமணர்கள் தீட்டிய கதை மக்கள் ஆட்சியே ஆதியில் நிலவியுள்ளது யுத்தங்கள் நடைபெறவில்லை அதற்கான ஆதரங்கள் அகழ்வராட்சியில் இது வரை கண்டெடுக்க படவில்லை என்பதே உண்மை ராஜராஜன் என்ற பெயரை கோவில் கட்டுவதற்காக நிதி மக்களிடம் இருந்து அறவிடுவதற்காக பயன்படுத்தியுளார்கலள் பிராமணர்கள்
@piranavisp3231
@piranavisp3231 Жыл бұрын
பக்த்தி பின்னணி இசையுடன் கோவிலுக்கு நாங்களும் உங்களுடன் சென்று வந்த உணர்வு 🙏, Drone காட்சி அருமை....
@muthusagai9884
@muthusagai9884 Жыл бұрын
நன்றி தம்பி ❤️ நான் எப்படி இருந்தாலும் இந்த இடத்தை பார்த்திருக்க‍ முடியாது ஒத்தையடி பாதை வழியின் கடினத்தை விரும்பி பயணித்தது நெஞ்சுக்கு நிறைவாக உள்ளது பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும்
@questvijay
@questvijay Жыл бұрын
அருமையான பதிவு தம்பி.., நம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பொக்கிஷங்களை பராமரிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் போது நம் கடமை தீரும்.... வாழ்த்துக்கள்,... தங்களின் பயணம் சிறப்பாக உள்ளது. 😍😍😍😍😍
@BLINDSBAMBOO
@BLINDSBAMBOO Жыл бұрын
Amazing Tamil architecture.., Respects from bottom of my heart to Chola Kingship.
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
நிஜம் அருமை.. காலத்தின் கட்டாயம் எதுவும் நிரந்தரம் அல்ல.. நல்ல முயற்சி 💐💐
@KannanKannan-dw6qo
@KannanKannan-dw6qo Жыл бұрын
அருமை அய்யா 🙏 காதில் கேட்கும் பின்னனி தேவாரம் பாடல் இசைக்கவிட்டது தேனினும் இனிமையாக என் காதில் பாய்ந்து என்னை நான் மெய்மறந்தேன் 🛕எங்கள் ஊரில் இந்த கோவிலுக்குக்குள் சென்றதில்லை. 🙏 அருமை 👌 👏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@thivagarantp2549
@thivagarantp2549 Жыл бұрын
தங்களுடைய காணொளியின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டோ இருக்கிறது.வாழ்த்துக்கள்
@palanivelukandasamy9373
@palanivelukandasamy9373 Жыл бұрын
தம்பி பாபு வணக்கம். இந்த பதவி மூலம் உங்கள நெனச்சா பெருமையா இருக்கு. திருவாசகம் பின்புல பாடலுடன் பழையறையை சுற்றி காட்டியது மகிழ்வாக உள்ளது. வாழ்த்துக்கள் தம்பி.
@user-zb2jh9xe4q
@user-zb2jh9xe4q Жыл бұрын
நம் முன்னோர்கள் வீரத்தோடும் விவேகத்துடனும் நடமாடிய ஒரு பொக்கிஷமான கோயில் கண்களில் கண்ணீர் மட்டும் தான் வருகிறது 🥺
@jeyarani3222
@jeyarani3222 Жыл бұрын
Tears...with my eyes. Emotional video.🙏🙏🙏
@abicrazygirl9786
@abicrazygirl9786 Жыл бұрын
Same 🥺
@ramachandran6831
@ramachandran6831 Жыл бұрын
கடந்த 500 வருடங்களாக‌ தமிழரிடம் அதிகாரம் இல்லை!
@selvamspr2567
@selvamspr2567 Жыл бұрын
பழங்காலத்துக்கேகூட்டிச்சென்றமைக்கு வாழ்த்துக்கள். நம்மண்ணர்களின் நாகரீகம் வியப்பளிக்கிறது.
@kingrajacholan7982
@kingrajacholan7982 Жыл бұрын
தோழர் ..நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாராட்டுகள். சோழ சாம்ராஜ்யத்தை நேரிடையாக சென்று வரலாற்று நிகழ்வுகளை படமாக...தந்து பெரு மதிப்பிற்குரிய செயலை காணக் கண்டோம். ⭐⭐⭐⭐⭐
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@rajeshkumar.s6730
@rajeshkumar.s6730 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@arulprakash3820
@arulprakash3820 Жыл бұрын
சகோ முதல உங்களுக்கு நா நன்றி..... நா இந்த இடத்திற்கு சென்று காண்பெனொ இல்லையோ,, இந்த காணோளி முலமாக காண்பித்தமைக்கு நன்றி அதுவும் இந்த காணோளி யின் பின்னொளி ஒரு நிமிடம் என்னை உறைய வைத்தது....
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek Жыл бұрын
இந்த கோவில் கோபுரம் இப்படி இருக்கிறது கஷ்டமாக இருக்கு.. அரசு சரி செய்யலாம்.. இப்படி யே விட்டா இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் இதுவும் இல்லாமல் போய்விடும்
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Nadappathu dmk government no chance bjp vanthal nadakkum
@srivinayaga7688
@srivinayaga7688 Жыл бұрын
பழையாறை மற்றும் யாரும் கண்டிராத அய்யனார் கோவில் காட்டியதற்காக நன்றி பாபு. உங்களுடைய பயணம் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@fbpasangalive6095
@fbpasangalive6095 7 ай бұрын
@@MichiNetwork qq
@dsridharan
@dsridharan Жыл бұрын
அருமை. அந்த வழித்தடங்களை விளக்கமாக தந்தால் மற்றவர்கள் இந்த இடங்களை பார்க்க ஏதுவாக இருக்கும். உங்களின் அயராது தேடல், உழைப்பு பாராட்டத்தக்கது. வாழ்க.
@swethagokulraj9382
@swethagokulraj9382 Жыл бұрын
அருமையான காணொளி ❤️ உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கிகாரம் கூடிய விரைவில் கிடைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாபு👏
@balasubramanianchocku9324
@balasubramanianchocku9324 Жыл бұрын
சிறப்பான பதிவு!!
@kabilararul5172
@kabilararul5172 Жыл бұрын
♥/♥♥♥♥@@balasubramanianchocku9324
@sankarsankar9559
@sankarsankar9559 Жыл бұрын
எவரேனும் ஒருவர் இதுபோல் ஒரு பழைய வரலாறை கண் முன்னே கொண்டு வரமாட்டார்களா என்ற ஏக்கம் தீர்ந்து விட்டது மற்றும் திருவாசகம் மிக அருமை
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🙏❤️
@kathirvelt786
@kathirvelt786 Жыл бұрын
அருமையான பதிவு பாபு! நம் மண்ணின் வரலாற்றுச் சிறப்பையும் பெருமையையும் கண் முன்னே காட்டியதும் கோவிலின் உட்பிரகாரத்தில் சுழன்ற கேமராவின் கண்களும் பின்னணியில் இசைக்கப்பட்ட பாடலும் கண்களைக் குளமாக்கி விட்டது . சிகரம் தொட வெகு தூரம் இல்லை பாபு
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 Жыл бұрын
மிகவும் அழகான அருமையான காணொளி ..காணக் கிடைக்காத காட்சி .... காண்பித்ததுக்கு நன்றி 🙏.... background music song sema devotional feel ga 👌💐💗
@Mgp5315
@Mgp5315 Жыл бұрын
மனதை மயக்கும் இசையை கேட்க வைத்த பாபு வுக்கு நன்றி.பாடலை பாடிய கேசவ்ராஜ் அவர்களுக்கும் நன்றி.ஓம் நமசிவாய
@maheswari6420
@maheswari6420 Жыл бұрын
திருவாசகத்தக்கு உருகார் ஒருவாசகத்தக்கும் உருகார் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உருகுமளவுக்கு ஒருவர் (கேசவராஜ்) பாடியதை இன்றுதான் கேட்டேன். இதை நிகழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துகள் பொதிந்த நன்றி.
@venkateshkrishnasamy3373
@venkateshkrishnasamy3373 Жыл бұрын
இந்த பாடலின் தரவிறக்கம் பகிரமுடியுமா
@kameswaranalagusundaram6079
@kameswaranalagusundaram6079 Жыл бұрын
தம்பி, தமிழர் பெருமைக்கு ஒரு அணி சேர்த்து இருக்கிறீர்கள். நன்றி.
@utchimakali2351
@utchimakali2351 Жыл бұрын
நம் முன்னோர்கள் கட்டிய அற்புதமான கோவில் இப்படி சிதலமடைந்து உள்ளது அரசியல்வாதி லாபத்தில் உள்ள கோயில்களே பராமரிக்காமல் உள்ளனர் இவ்வளவு புகழ் வாய்ந்த கோவிலை மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான் பராமரிக்க முடியும்
@vijayaragavansp5360
@vijayaragavansp5360 Жыл бұрын
மனம் கனக்கிறது நம் முன்னோர்கள் எத்தனை அருமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்
@cpajeyabalan
@cpajeyabalan Жыл бұрын
அருமையான காணொலி. சிந்தனையைத்தூண்டும் விதத்தில் தங்களின் விளக்கமும் பின்ணணி திருவாசகப் பாடலும் அற்புதம். எடுத்துக்கொண்ட முயற்சிக்கு வாழ்த்துகள் தம்பி. உங்களின் நற்பணி தொடரட்டும். 👌👌👌
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@user-tr4or4dd3x
@user-tr4or4dd3x Жыл бұрын
மிக சிறப்பு நண்பா. தமிழன் வரலாறு மிக பெருங் கடல் உங்கள் பயணம் தெடர வாழ்த்துகள்
@sriraghavendravijayam
@sriraghavendravijayam Жыл бұрын
தம்பி.... பிரமாதம், அசத்தல் படைப்பு, அந்த feel, தேவையான இடத்துல bg மியூசிக் சேர்த்தது... மொத்தத்தில் வேற லெவல்... எதோ இனம் புரியாத சோகத்தை நெஞ்சில் உருவாக்கிவிட்டது சோழனை பற்றிய உங்கள் படைப்பு. Keep it UP...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 Жыл бұрын
நம்வரலாறுகண்முன்நிற்கிறது கண்களில்நீர்துளிவருகிறது
@TrackArul-tamil2065
@TrackArul-tamil2065 Жыл бұрын
பெரும்பாலும் அதிகமா இந்த பழையாரை தான் சோழர் களின் தலை நகரா இருந்துள்ளது வீடியோ வுக்கு நன்றி 🙏மனசுக்கு மகிழ்ச்சி தந்தது 🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️🙏
@rajajisk
@rajajisk Жыл бұрын
இறை அற்பனிப்புடன் தங்கள் உழைப்புபில் உறுவாகி பொது மக்கள் பார்வைக்கு கிடைத்த இந்த அறிய கானொலி மிகவும் சிறப்பு... நம் முன்னோர்கள் சோழர்கள் ஆட்சி திறன் உலகம் போற்றும் ... உலகம் உள்ள வரை...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@prabavathybalanb5817
@prabavathybalanb5817 Жыл бұрын
பழைய இடங்களை பார்க்கும்போது மெய் சிலிக்கிறது.
@mithuarmy4867
@mithuarmy4867 Жыл бұрын
1 கோடி இளைஞர் கள் ஒரு ரூபாய் கொடுத்தால் 1 கோடி ரூபாய் ஆகும் இதில் பல கோவில்கள் கேட்பாரற்று கிடக்கிறது நம் பாட்டன்களின் பொக்கிஷம் இது
@jaisankars3436
@jaisankars3436 Жыл бұрын
Really good effort bro
@umasankar4862
@umasankar4862 Жыл бұрын
மனம் கலங்குகிறது. பொன்னியின் செல்வன் படம் எடுத்தவர்கள் முயற்சி செய்தால் இதனை திருப்பணி செய்ய முடியும். செய்வார்களா ?
@rajendransomasundram2686
@rajendransomasundram2686 Жыл бұрын
Sir, super .வீடியோ காட்சிகள் அருமை இனம் தெரியாத ஒரு வித உணர்வு கண்களில் லேசாக கண்ணீர். அருமை
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@KarthiKeyan-tv7gt
@KarthiKeyan-tv7gt Жыл бұрын
மெய் சிலிர்த்தது - மிக்க அருமை
@dineshsaba
@dineshsaba Жыл бұрын
அருமையான பதிவு👌🏻.கோவில் கட்டபட்ட ஆண்டு போன்ற வரலாற்று குறிப்புகளை மேற்கோள் காட்டி இருப்பின் இன்னும் சிறப்பாக அமையும்.
@user-vb4iq1hz3c
@user-vb4iq1hz3c Жыл бұрын
அண்ணா நான் சுவாமிமலை பக்கம் கபிஸ்தலம் . நீங்கள் எங்களிடம் வந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வழி கேட்கும் போது தங்களை சந்தித்தேன் .மிக்க மகிழ்ச்சி. ❤️
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
@user-vb4iq1hz3c
@user-vb4iq1hz3c Жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@user-vb4iq1hz3c
@user-vb4iq1hz3c Жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் vedio eppo upload pannuvinga
@sacrateesperiyasamysack90
@sacrateesperiyasamysack90 Жыл бұрын
நானும் கபிஸ்தலம் தான் ப்ரோ.
@sacrateesperiyasamysack90
@sacrateesperiyasamysack90 Жыл бұрын
நான் கபிஸ்தலம்
@kalaivani5698
@kalaivani5698 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி பாபு . திருவாசகம் பாடலை கேட்க மனம் வருந்துகிறது. அற்புதமான கான கிடைக்காத காணொளி, இப்போது காணும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன். 👌👌👌👌👍👍👍👍
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
அன்புச் சகோதரரே வாழ்த்துக்கள். நமது இனத்தின் அடையாளம், தமிழர்களின் கலைத் திறன். காவியப் படைப்புக்களை சோழர்கள், தங்களுடைய அறிவார்ந்த மதி நுட்பத்தை கொண்டு எவ்வளவு சிறப்பாக இந்த சிற்பங்களை வடித்துள்ளார்கள். வாழ் நாளில் காணக் கிடைக்காத நமது பண்பாட்டை, நமது கலாச்சாரத்தை, நமது வீரத்தை, நமது அரிய பெரிய பொக்கிஷத்தை காணச் செய்ததற்கு நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 🌹🌹🌹🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ❤️🙏🏻
@p.soodamanido5509
@p.soodamanido5509 Жыл бұрын
தெய்வப்பிறவி நீங்கள் பாபு பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில் அற்புதம் அய்யனார் கோவில் ஆச்சர்யம் கம்பீரமாக நிற்கும் மரம் 👌👍👏
@ganesanganesan777
@ganesanganesan777 Жыл бұрын
சிறப்பான உழைப்பு & அர்ப்பணிப்பு வாழ்ழ்த்துகள் சகோ
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Жыл бұрын
வணக்கம் வந்தியத்தேவா மிகவும் அருமையான பதிவு இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று உங்கள் காணொளி மூலம் தான் அறிந்து கொண்டேன் நன்றிகள். இந்த பாடலை கேட்கும் போது மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத வலி எத்துணை பெரிய சாம்ராஜ்யம் இப்படி சின்னாபின்னமாகி கிடக்கிறது 😭 அறநிலையத்துறை கவனிக்குமா ?
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Dmk government no chance
@johnkennady8981
@johnkennady8981 Жыл бұрын
அந்த ஊரில் சில நல்ல உள்ளம் படைத்த மாணவ மாணவிகள் இயற்கை ஆர்வலர்கள் இதை பாதுகாக்க வேண்டும்...
@shankar5257
@shankar5257 Жыл бұрын
தாராசுரம், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை , குந்தவை பள்ளிப்படை பதிவுக்காக காத்திருக்கிறேன் bro
@vigneshviky3070
@vigneshviky3070 Жыл бұрын
பாபு இன்னும் பெரிய வீடியோ வ போடுங்க ...அடுத்து விடியோ எப்போ வரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பா👍👍👍
@kumaravel396
@kumaravel396 Жыл бұрын
தமிழ்நாடு அரசுக்கு எனது கோரிக்கை தமிழ்நாட்டில் இருக்கும் இது மாதிரிஅரண்மனை சரிசெய்து சுற்றுலாவாக மாற்றம் வேண்டும் எனது பதிவு
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 Жыл бұрын
அருமையான வீடியோ தம்பி பிரமிக்க வைத்துவிட்டீர்கள்😍😍😍 நானும் சோழ பரம்பரையை சார்ந்தவள் என்பதில் பெ.ருமிதம் கொள்கிறேன் ❤ தங்களின் Adventure மேலும் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் தம்பி💐💐💐💐
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@chellaiyasanthi7431
@chellaiyasanthi7431 Жыл бұрын
ஐயா! "படைவீடு "-என்றால் போரில் மரணம் அடையும் அரசனுக்கு கட்டப்படும் சமாதி. இதை " பள்ளி படைவீடு " என்ற் வரலாறில் குறிப்பு உண்டு.
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
கோவிலுக்குள் மங்கள இசையுடன் ஆன்மீக பாடல், மனதை ஒருமுகப்படுத்தி அமைதியுற செய்கிறது. போரில் வெற்றியை கொண்டாட மாட, மாளிகைகளும், போரினால் ஏற்ப்படுகின்ற மன காயங்களுக்கு மன அமைதி வேண்டி அதிகமான கோவில்களை கட்டினார்கள் போல.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🙏🏻❤️
@selvanavam3136
@selvanavam3136 Жыл бұрын
கோவிலுக்குள் மங்கல இசையுடன் ஆன்மீக பாடல், மனதை ஒருமுகப்படுத்தி அமைதியுற செய்கிறது.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🙏💜
@maharajakumaran4833
@maharajakumaran4833 Жыл бұрын
அரண்மனை இருந்தா அது எங்கே எப்படி சிறு அடையாளம் கூட இல்லை . அருமையான பதிவு
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️
@laxumivijalaxumi6575
@laxumivijalaxumi6575 Жыл бұрын
கி. பி 10ம் நூற்றாண்டில் எங்கள் முன்னோர்கள் பழை யாறையிலிருந்து சீர்பாத தேவியுடன் இலங்கையின் கிழக்குப்பகுதியில் குடியேறிய வர்கள். தமிழகத்திற்கு 2 முறை வந்தும் பழையாறை செல்ல முடியாத குறை தங்க ளால் நீங்கியது. நன்றி. வாழ்க வளத்துடன்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@kannigagiri428
@kannigagiri428 Жыл бұрын
Divine touch....Goose bumps...amazing video...
@tamilvijaycell
@tamilvijaycell Жыл бұрын
திருவாசகம் பாடலை கேட்க மனம் அமைதியுற செய்கிறது
@hemeshwar7397
@hemeshwar7397 Жыл бұрын
தமிழனின் ஆன்மீக வரலாற்று பொக்கிஷமாகவும், வீரத்தின் விளைநிலமுமாய் விளங்கிய பொற்காலம் சோழர்களின் காலம் ..
@ravibalasubramaniyan1289
@ravibalasubramaniyan1289 Жыл бұрын
Dear Babu ஆலய பதிவு மிக அருமை ஓர் வேண்டுகோள் இது போன்ற இடங்களில் பழமையான நபர்களிடம் இடத்தின் வரலாற்றினை அதாவது செவி வழி செய்தியை சேகரித்து பதி விடலாமே வாழ்த்துக்கள் பா. இரவி மயிலாடுதுறை
@megalasiva2413
@megalasiva2413 Жыл бұрын
நன்றிகள் பல 🙏 சகோ நமது ‌தமிழ் ‌பூமியை காத்து நமக்கு பரிசளித்த முன்னோர்கள் வாழ்ந்த பூமிக்கு எம்மையும் அழைத்து சென்றமைக்கு ‌🙏
@vsivas1
@vsivas1 Жыл бұрын
காணொளியை கொஞ்சம் மனச்சங்கடத்துடன் பார்த்தேன். இவ்வளவு பழம் பெருமையுடைய கோயிலை ஊர்மக்கள் பராமரிக்காத காரணம் என்ன? உங்கள் தேடல்கள்மூலம் நல்ல பல காணொளிகளைப் பார்த்தேன். நன்றி பாபு. வாழ்க வளமுடன். ஓம் நமச்சிவாய வாழ்க.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@thangagameingyt6699
@thangagameingyt6699 Жыл бұрын
உங்கள் பதிவை எதிர் பார்த்து கண்கள் ஏங்கியது நன்றி நன்றி நன்றி நண்பரே வாழ்க வளமுடன் ஹர ஹர மகாதேவா ஓம் நமசிவாய
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@pallaviswaminathan5415
@pallaviswaminathan5415 Жыл бұрын
Welcome to our village.I am very proud to my village.I am born in pampapadayuir.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🤗❤️😍
@amuldeva1924
@amuldeva1924 Жыл бұрын
அரண்மனை இப்போ இல்லையா
@sanjay5679
@sanjay5679 Жыл бұрын
Superb place
@balamurugangurusamy9958
@balamurugangurusamy9958 Жыл бұрын
வெற்றிவேல்.... வீரவேல்.... 🙏🏻🙏🏻🙏🏻🤩
@subramanianangithumuthu8817
@subramanianangithumuthu8817 Жыл бұрын
அன்பு மகனுக்கு வாழ்த்துகள்
@shanthirajalingam1586
@shanthirajalingam1586 Жыл бұрын
Beautiful video Quality of the video Background song Editing Drone view Everything is so beautifully bro Great job Continue doing this
@subramanianjothi5798
@subramanianjothi5798 Жыл бұрын
Well recorded with suitable soul stirring music. Presented in a decent and respectable way. My appreciation for your efforts.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙏
@malabar_land_sales
@malabar_land_sales Жыл бұрын
சூப்பர் இதை பார்க்கும் பொழுது கண்ணீர் வருது 😭😭
@srinidu
@srinidu Жыл бұрын
5:43 background music & the temple semma👍👍👍 good vibe
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you 🙏❤️
@anitha9061
@anitha9061 Жыл бұрын
We have to take any small step to maintain our old and gold cultural temples 🙏🙏
@shanmugamsayeekrishnan9101
@shanmugamsayeekrishnan9101 Жыл бұрын
Tamil Nadu government concerned department to take necessary action to save the old historical temples and take necessary action with out any delay.
@sanjay5679
@sanjay5679 Жыл бұрын
Yes need to save ..so that coming generations would know how our Tamil Culture..
@saisvlogs2105
@saisvlogs2105 Жыл бұрын
அருமையான பதிவு... அற்புதமான பதிவு....சிதிலமடைந்த கோபுரம்.... மனதுக்கு வேதனை அளிக்கிறது.... கண்டிப்பாக பார்க்க வேண்டும்.... இங்கு சென்று ஒரு நாள்...
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Жыл бұрын
மிகவும் சிரமப்பட்டு இந்த இடத்தை காட்டியதற்கு நன்றி. பொன்னியின் செல்வன் படம் இங்கேயே புனரமைத்து எடுத்திருக்கலாம்.
@zealdinesh
@zealdinesh Жыл бұрын
Mostly, these guys will not give permission for renovation bro. My assumption only. All politics maybe
@kasturipillay6626
@kasturipillay6626 Жыл бұрын
Thank you anna... South temples, vera level. ☑️❤❤🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@braja6399
@braja6399 Жыл бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா பழையாறை சோமநாதர் ஆலய காணொளி தொகுப்பு அருமை இன்னும் பல சோழ சாம்ராஜ்யத்தை நமது யூடியூப் வலைதளத்தில் காண ஆர்வம் செயற்கையா ஒரு ஆர்ச் நக்கல் பிடிச்ச மனுஷன்யா நீர் 10.10.2022
@n.rsekar7527
@n.rsekar7527 Жыл бұрын
பழையாறை கேள்விபட்டுள்ளேன்.நேரில் காண்பித்ததற்கு நன்றி.எப்படி இருந்த ஊர்கள்.அரசகள் வாழ்ந்த ஊர்கள் 1000வருடகாலத்தில் காணமல் போய்யுள்ளது.தமிழ் தமிழ் எனௌறு சொல்லீயே திராவிட திமுக கூட்டம் தமிழர் வரலாற்றுக்காக எதுவும் தெரியக்கூட செய்யவிலௌலை.
@msrajeshmsrajesh7116
@msrajeshmsrajesh7116 Жыл бұрын
கண்மூடி சிவன் பாடல் கேட்பதா ❤️ இல்லை இந்த அதிசத்தை பற்பதா 🙆 தென்னாட்டு உடைய சிவன் போற்றி💯🙏💥
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
@RaviChandran-bo4pi
@RaviChandran-bo4pi Жыл бұрын
மிகச் சிறப்பு நண்பரே. 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நான் இத்தலத்திற்கு சென்றதில்லை மிக தெளிவான காட்சிகளோடு நானும் உங்களுடன் பயணித்த உணர்வை ஏற்படுத்தியது மிக்க நன்றி..,
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@haripriyavivek8640
@haripriyavivek8640 Жыл бұрын
சோழர்கள் விட்டு சென்ற நமக்கான சொத்துக்கள் இவை அனைத்தும் .... ஆனால் நம்மால் அந்த சொத்தை காப்பாற்ற முடியவில்லை .... சோழர்கள் இதை பார்த்தால் கண்களில் இரத்த கண்ணீர் வடிப்பார்கள் ...
@balasubramanian8241
@balasubramanian8241 Жыл бұрын
சோழர் விட்டுச்சென்றதல்ல மராட்டியன் வெற்றி கொண்டது என்பதேவரலாறு.
@venkivenki5407
@venkivenki5407 Жыл бұрын
கட்சி la இருந்தா 100 கோடியில் சமாதி . ஆனால் சோழர்கள் அரண்மனை , அந்த சிவன் கோவிலை அரசு கோவிலை ஏன் புதுப்பிக்கல
@kkchandru4903
@kkchandru4903 Жыл бұрын
தமிழன் வாழ்ந்த சுவாசித்து விட்டு சென்ற வரலாற்று சிற்பங்கள் பாதுகாக்க வேண்டும் நம சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும்
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 Жыл бұрын
Tamilan endru solvathal ondrum payanillai .pakthi ondral mattume kappatra mudiyum
@venilaharani6889
@venilaharani6889 Жыл бұрын
Thank Ji Proud of to be Hindu ji
@karunakarangownder2614
@karunakarangownder2614 Жыл бұрын
தம்பி. பாபு.. அருமையான இடங்களில் பதிவு செய்து கோயில்.. அரண்மனை போன்ற வரலாற்றை பற்றி தெளிவான தகவல்கள் படப்பிடிப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும்... நன்றி
@nagarjun.g4621
@nagarjun.g4621 Жыл бұрын
நீங்க ஒத்தையடி பாதையில போகும்போது நான் ரொம்ப பயந்துட்டேன்
@jeganrajendran842
@jeganrajendran842 2 ай бұрын
சோழர்களின் படைவீடுகளில் எங்கள் ஊரும் ஒரு படைவீடு மிருதியுஞ்சிய படைவீடு 💪
@minarvatharmarajan3185
@minarvatharmarajan3185 Жыл бұрын
Hi bro இனிய காலை வணக்கம் ஊரேல்லாம் சூப்பரா இருக்கு. பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner Жыл бұрын
இந்த கோவிலில் உள்ள அந்த குதிரை ரதம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ளது போன்றே உள்ளது தயவு செய்து அங்கும் சென்று ஒரு காணொளி போடுங்க பாபு..
@krithi1794
@krithi1794 Ай бұрын
Rajaraja cholan thalaimuraiyil varra kulothunga cholanin magan RajaRaja 2 katuna kovil tan iravadheeswarar kovil.so rendum ore amaipula irukradhu onnum periya acharyam iliye
@dududu1984
@dududu1984 Жыл бұрын
சிவாயநம எல்லா வளமும் பெற்று இருக்க பனி சிறக்க வாழ்த்துக்கள்
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,4 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 100 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
BABY Comedy : Birthday Baby and Kind Man ❤️
0:36
BABY Comedy
Рет қаралды 5 МЛН
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
Despicable Me Fart Blaster
0:51
_vector_
Рет қаралды 14 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 20 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 4,4 МЛН