Рет қаралды 200
உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் 137 வது இணையவழி குடியரசு தினச் சிறப்புப் புதுமை பட்டிமன்றம் ”அறிவை விரிவு செய்வதில் இன்றும் என்றும் துணையாக இருப்பது நூலகமே!! இணையமே!!” என்ற தலைப்பில் 26.1.25 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு துவங்கிச் சிறப்பாக நடந்தேறியது. வழமையான பட்டிமன்ற வரம்புகளை மீறி நடத்தப்பட்ட இந்த பட்டிமன்றம் ஆக்கபூர்வமான கருத்துக்களை பறிமாறிக் கொண்ட கருத்து செறிவு மிக்கதாக இருந்தது. குறைந்துகொண்டிருக்கும் நூலகப் பயன்பாட்டை புனரமைக்கவும், வரம்பு மீறி போய்க்கொண்டிருக்கும் இணயத்தின் பயன்பாட்டை நெறிப்படுத்தவும் நல்ல வழிக்காட்டுதலாக இந்தப் பட்டிமன்றம் அமைந்திருந்தது.சிரிப்புத் தோரணங்களின் அணிவகுப்பாக இல்லாமல் சிந்தனையைத் தூண்டும் பட்டிமன்றமாக நம் பட்டிமன்றம் விளங்கியது.
இப்பட்டிமன்றத்தின் காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது. இனிய தமிழ் உறவுகள் இந்த காணொளியினை கண்டு, தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் வலையொளி பக்கத்திற்கு (youtube channel) உறுப்பினராகவும் (subscribe) பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம். உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்.