Рет қаралды 187,308
இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக கனடாவில் குடியேறி வருகின்றனர்.
வேலை மற்றும் கல்விக்காக அங்கு சென்ற அவர்கள் தற்போது மீண்டும் தாய்நாட்டிற்கே திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
அதற்கு காரணமாக சிலவற்றை முன்வைக்கிறார் கனடாவில் இருந்து திரும்பி வந்த பால்கர். இதுக்குறித்து அவர் பேசுகையில், “கனடாவில் வீட்டு வாடகை முதல் மளிகை பொருட்கள் வரை எல்லாமே விலை அதிகம். நான் பிழைப்பிற்காக வாரத்திற்கு 50 மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதிக பணவீக்கத்தின் காரணமாக பல மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியாவுக்கு திரும்புகின்றனர்” என்று குறிப்பிடுகிறார்.
மேலும், கடந்த ஆண்டு கனடாவில் குறைந்த வாடகைக்கு வீடுகள் கிடைக்காததால் சர்வதேச மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் வீடியோக்கள் வைரலானது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரூடோ அரசு சர்வதேச மாணவர்கள் கனடாவுக்கு வரும்போது வைத்திருக்க வேண்டிய பணத்தின் மதிப்பை இரட்டிப்பாக்கியது.
கூடுதலாக வீட்டுவசதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு வருடமும் கனடாவில் வந்து படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவர் விசா மீதான கட்டுப்பாட்டையும் விதித்தது.
இதனாலும் கனடாவிற்கு செல்லும் பலரின் கனவு மங்கி விட்டதாக கூறப்படுகிறது.
#India #Canada #Indian
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil