காரிய சித்தி மாலை || கச்சியப்ப முனிவர் || Karya siddhi Maalai || sankatahara chathurthi

  Рет қаралды 188,658

Sridevi Padma Classicals

Sridevi Padma Classicals

Күн бұрын

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை கூரத் தொழுகின்றோம்.
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்.
ஆக்கம்: காசிப முனிவர் ... தமிழில்: கச்சியப்பர்
மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.
தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவான். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.
சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.
தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும்.
தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.

Пікірлер: 51
@mohanana5694
@mohanana5694 Ай бұрын
இந்தநமதுதோத்திரத்தையாவன்மூன்றுதினமும்உம்மைச்சந்இகளில்தோத்திரஞ்செயினும்சகலகருமசித்திபெறும் சிந்தைமகிழச்சுகம்பெறும்எண்தினம்உச்சரிக்கின்சதுரத்தியிடைப்மந்தம்அகஓர்எண்கால்படிக்கில்அட்டசந்தியுறும் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா🙏🙏
@chandrikar5513
@chandrikar5513 2 ай бұрын
👏👏👏👏👌👌🌹 அருமை மாஸ்ரீதேவி
@Sdpclassicals
@Sdpclassicals 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சந்திரிகா அக்கா!!🙏🙏🙏
@manikandan3916
@manikandan3916 6 ай бұрын
superb mam - this this is what i want - no Bgm but the verbals. thanks for respecting others' time. nice clear voice & pronouncuation 👍🙌🙏🏆
@Sdpclassicals
@Sdpclassicals 6 ай бұрын
Thanks a lot for your encouragement and support 🙏
@mohanana5694
@mohanana5694 Ай бұрын
திங்களரண்டுதினந்தோறும்திகழொருபான்முறையோதில்தங்கும்அரசவசியமாம்தயங்கஇருபத்தொருமுறைமை பொங்கும்உழுவவால்கிளப்பின்பொருவின்மைந்தர்விழுக்கல்விதுங்கவெறுக்கைமுதற்பலவும்தோன்றும்எனச்செப்பினார்மறைந்தார் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா இந்தநமதுதோத்திரத்தையாவன்மூன்றுதினமும்உம்மைச்சந்இகளில்தோத்திரஞ்செயினும்சகலகருமசித்திபெறும் சிந்தைமகிழச்சுகம்பெறும்எண்தினம்உச்சரிக்கின்சதுரத்தியிடைப்மந்தம்அகஓர்எண்கால்படிக்கில்அட்டசந்தியுறும் திங்களரண்டுதினந்தோறும்திகழொருபான்முறையோதில்தங்கும்அரசவசியமாம்தயங்கஇருபத்தொருமுறைமை பொங்கும்உழுவவால்கிளப்பின்பொருவின்மைந்தர்விழுக்கல்விதுங்கவெறுக்கைமுதற்பலவும்தோன்றும்எனச்செப்பினார்மறைந்தார் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா🙏
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 Жыл бұрын
🙏🤲🌺🪷🌻🔔🔔🪔🪔☮️🔯🕉️💰🛡️🔱🎆🎇🎊🎉🐘🐘🦣🦣📖🖋️📚🍬🍬🛕🌿🌿🎁🎁🦅🦅 எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி.
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
நன்றி சகோதரரே
@sridurga879
@sridurga879 Жыл бұрын
😊
@jeyalakshmiradhakrishnan2959
@jeyalakshmiradhakrishnan2959 Жыл бұрын
Sooooper voice as well pronounciation Vinayaga potri potri
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
Thanks a lot Jeyalakshmi Radhakrishnan Akka.
@therubiksmaster25
@therubiksmaster25 3 жыл бұрын
Very nice and clear sis
@Sdpclassicals
@Sdpclassicals 2 жыл бұрын
🙏🙏
@meenakshivenkatakrishnan4470
@meenakshivenkatakrishnan4470 Ай бұрын
Arumai Arumai Romba arumai sridevi🎉👏🙏🙏
@Sdpclassicals
@Sdpclassicals Ай бұрын
மிக்க மகிழ்ச்சி மீனாக்ஷி அக்கா. நன்றி🙏🙏
@rajeswarinathan4660
@rajeswarinathan4660 Жыл бұрын
Goodmorning
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
🙏🙏
@SarojiniJ-h5u
@SarojiniJ-h5u Жыл бұрын
அருமை சகோதரி
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
ஓம் ஶ்ரீ பிள்ளையார் பட்டிகறபகமூர்த்தியே போற்றி🙏🌺 போற்றி🙏🌺போற்றி🙏🌺
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
🙏🙏🙏
@amitramtricks798
@amitramtricks798 Жыл бұрын
God bless you pallandu 🙏
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
@ramyalogu3735
@ramyalogu3735 Жыл бұрын
Omm ganeshaa pottri
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
🙏🙏🙏
@boomikavetriselvan1040
@boomikavetriselvan1040 9 ай бұрын
ஓம் கங் கணபதியே நமோ நமஹா 🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🥭🍋🔱📿🕉️
@Sdpclassicals
@Sdpclassicals 9 ай бұрын
🙏🙏🙏👍
@vijayalakshmikarthigeyan7589
@vijayalakshmikarthigeyan7589 2 жыл бұрын
Om ganesaya namaha
@Sdpclassicals
@Sdpclassicals 2 жыл бұрын
🙏🙏
@malarveenis3647
@malarveenis3647 8 ай бұрын
For the past one wk daily iam hearing this song.very nice .
@Sdpclassicals
@Sdpclassicals 8 ай бұрын
Thanks a lot for your encouragement and support 🙏 🙏🙏
@sarojanagarajan4177
@sarojanagarajan4177 2 жыл бұрын
Ganesa saranam
@Sdpclassicals
@Sdpclassicals 2 жыл бұрын
🙏🙏
@rkac5507
@rkac5507 8 ай бұрын
Om Gham Ganapathye Namaha ❤
@Sdpclassicals
@Sdpclassicals 8 ай бұрын
🙏🙏🙏
@mahalakshmiram1516
@mahalakshmiram1516 Жыл бұрын
நன்றி
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
👍🙏🤝 Mahalakshmi
@mohanana5694
@mohanana5694 Ай бұрын
காரியசித்திமாலை பாடல்ஓன் பந்தம்அகற்றும்அநந்தகுணப்பரப்பும்எவன்பால்உதிகாகுமோ எந்தஉலகும்எவனிடத்தில்ஈண்டிஇருநாதுசுரக்குமோ சந்தமறைஆகமங்கலைகள்அனைத்தும்எவன்பால்தகவருமோ அந்தஇறையாம்கணபதியைஅன்புகூரத்தொழுகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்ரெண்டு உலகமுழுவதும்நீக்கமஒன்றாய்நிற்கும்பொருள்எவன்அவ் உலகிற்பிறக்கும்விகாரங்கள்உறாதமேலாம்ஒளியாவன் உலகம்பரியும்வினைப்பயனைஊட்டும்களைகண்எவன்அந்த உலகமுதலைக்கணபதியைஉவந்துசரணம்அடைகின்றோம் பாடல்மூனு இடர்கள்முழுவதும்எவனருளால்எரிவீழும்பஞ்செனமாயும்தொடரும்உயிர்கள்எவனருளால்சுரர்வாழ்பதியும்உறச்செய்யும் கடவுள்முதலோர்க்குஊறின்றிகருமம்எவனால்முடிவுறும்அத்தடவுமருப்புக்கணபதியைபொன்சரணம்சரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்நாலு மூர்த்தியாகிதாதலமாகிமுந்நீர்கங்கைமுதலானதீர்தமாகிஅறிந்தறியாத்திறத்தினாலும்உயிர்க்குநலம் ஆர்த்திநாளும்அறியாமைஅகற்றிஅறிவிப்பான்எவன்அப்போர்த்தகருணைக்கணபதியைப்புகழ்ந்துசரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்ஐந்து செய்யும்வினையின்முதல்யாவன்செய்யப்படும்அப்பொருள்யாவன்ஐயமின்றிஉளதாகும்அந்தக்கருமப்பயன்யாவன் உய்யும்வினையின்பயன்விளைவில்ஊட்டிவிடுப்பான்எவன்அந்தப்பொய்யில்சரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்ஆறு வேதம்அளந்தும்அறிவரியவிகிர்தன்யாவன்விழுத்தகைய வேதமுடிவில்நடம்நவிலும்விமலன்யாவன்விளங்குபர நாதமுடிவில்வீற்றிருக்கும்தாதன்எவன்எண்குணன்எவன்அப் போதமுதலைக்கணபதியைப்புகழ்ந்துசரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்ஏழு மண்ணின்ஓர்ஐங்குணமாகிவதிவான்எவன்நீரிடைநான்காய்நண்ணிஅமர்வான்எவன்தீயின்மூன்றாய்நவில்வான்எவன்வளியின் எண்ணுமிரண்டுகுணமாகிஇயைவான்எவன்வானிடைஒன்றாம்அண்ணல்எவன்அக்கணபதியைஅன்பிற்சரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா பாடல்எட்டு பாசஅறிவில்பசுஅறிவில்பற்றற்கரியபரன்யாவன்பாசஅறிவும்பசுஅறிவும்பயிலப்பணிக்கும்அவன்யாவன் பாசஅறிவும்பசுஅறிவும்பாற்றிமேலாம்அறிவான்தேசன்எவன்அக்கணபதியைத்திகழச்சரணம்அடைகின்றோம் சரணம்சரணம்கணநாதா சங்கடஹரணேகணநாதா அபயம்தருவாய்கணநாதாஆனைமுகனேகணநாதா🙏🙏
@Krisuresh-31083
@Krisuresh-31083 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி 🙏🏻
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
நன்றி சகோதரி!
@LUCK8434
@LUCK8434 26 күн бұрын
😭🙏🔱🔱
@Sdpclassicals
@Sdpclassicals 26 күн бұрын
🙏🙏👍
@angayarperischannel3703
@angayarperischannel3703 4 ай бұрын
🙏🙏🙏⚘🌼🌻🌺🌺🌺🌺
@Sdpclassicals
@Sdpclassicals 4 ай бұрын
💐Thank you
@chinnammanmudaliar4014
@chinnammanmudaliar4014 Жыл бұрын
🙏🙏🙏
@Sdpclassicals
@Sdpclassicals Жыл бұрын
🙏🙏
@SS-kf9hp
@SS-kf9hp 8 ай бұрын
Can you explain the history of this song?
@Sdpclassicals
@Sdpclassicals 8 ай бұрын
நாம் எந்தவொரு காரியத்தைத் துவக்குவதற்கு முன்னும் முழுமுதற் கடவுளான கணபதியை வணங்குவது வழக்கம் ஆகும். ஆணை முகத்தவனை வணங்கிச் செய்யும் எந்தவொரு காரியமும் தடையின்றி நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. காரிய சித்தி மாலை அல்லது காரிய சித்தி மந்திரம் காஷ்யப மஹரிஷி என்னும் ரிஷியால் வட மொழியில் இயற்றப்பட்ட பாடல் ஆகும். இதன் தமிழாக்கத்தை கச்சியப்ப முனிவர் என்பவர் நமக்கு வழங்கி உள்ளார்கள். இந்தப் பாடல் எட்டு பத்திகளைக் கொண்டது. இதனை அஷ்டகம் என்றும் கூறலாம். அஷ்ட என்ற வட மொழிச் சொல்லுக்கு எட்டு என்று பொருள். எட்டு பத்திகளைக் கொண்ட இந்தகாரிய சித்தி மந்திரம், காரிய சித்தி அஷ்டகம் என்றும் கூறப்படும். கேட்ட வரம் தரும் ‘காரிய சித்திமாலை எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது, ‘காரிய சித்திமாலை.’ கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்தால், மன விருப்பம் எளிதில் நிறைவேறும். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி விநாயகப் பெருமானை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது, ‘காரிய சித்திமாலை.’ கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்தால், மன விருப்பம் எளிதில் நிறைவேறும். இந்த துதியை எட்டு நாட்கள் பாடி வந்தால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால், அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும்.
@rajamaniramaswami363
@rajamaniramaswami363 5 ай бұрын
What is the meaning of பாச அறவில் பசுஅறிவில்..
@Sdpclassicals
@Sdpclassicals 5 ай бұрын
நாம் இவ்வுலகில் பிறந்தது மீண்டும் பிறவாமல்/இறவாமல் இருக்கவே. அத்தகு காரியத்தை சித்திக்கச் செய்ய விநாயகரை இப்பாடலில் இறைஞ்சுகிறோம். பதி - சிவன்/பரமாத்மா/வெற்றிடம் பசு- உயிர்/ஜீவாத்மா/ஆன்மா பாசம்- பற்று/தளை/மனம் நாம் யோகம் மூலம் சிவனை/பரமாத்மாவை அணுகினால், உயிர்களின் மனம்/தளை நீங்கி பிறவா நிலை அடையலாம். அந்த அறிவைத் தர விநாயகனைப் பணிக்கும் பாடல் வரிகள் இவை. சிற்றறிவிற்கு இவ்வளவே எட்டியது. நன்றிகள் உரித்தாகுக.
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 17 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
Vinayagar Agaval | Lyrical | Bombay Sisters | Tamil
7:51
Jothida Deepam Tamil
Рет қаралды 7 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 17 МЛН