கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற 12 எளிய வழிகள்!

  Рет қаралды 99,318

Rajathi Pathipagam

Rajathi Pathipagam

3 жыл бұрын

கூட்டுப்பட்டாவில் இருக்கும் நிலத்தை தனிப்பட்டாவாக வாங்க என்ன செய்வது என மக்களுக்கு எளிமையாக விளங்கும்படி சொல்லியிருக்கிறோம்.
அண்ணன் தம்பிகள் எப்படி தனிப்பட்டா வாங்குவது? மனைகள் வாங்கியிருந்தால், அப்போது தனிப்பட்டாவாக மாறூவது எப்படி? வாரிசுகள், தனிப்பட்டா எப்படி வாங்குவது? உட்பிரிவு என்றால் என்ன? பாகப்பிரிவினைகள் இல்லாமல் தனிப்பட்டா வாங்க இயலாதா? கூட்டுப்பட்டா நிலத்தை விலைக்கு வாங்கலாமா? அதில் என்ன பிரச்சனைகள்.. தந்தை இறந்தால், தனிப்பட்ட முறையில் பட்டா வாங்குவது எப்படி?கூட்டுப்பட்டா இலாபமா? நஷ்டமா? தொந்தரவா.. போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் இந்தக் காணொளியில் பதில் அளித்திருக்கிறோம்.
நமது காணொளிக்கு ஆதரவு தாருங்கள்..
நமது புத்தகங்களை வாங்கிப்படித்து பயனடையுங்கள்.
பட்டா
சிட்டா கூட்டுப்பட்டா
சர்வே
நில அளவினைக்கணக்கிடும் முறை
நிலம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
என்ற எண்ணற்ற தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.. அதற்கான முழு விவரங்களைப் பெற நமது வாட்ஸ் அப் எண்ணான 99406 84644 என்கிற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
வெளியீடு :
ராஜாத்தி பதிப்பகம்.
எழுதி, தயாரிப்பு :
ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
காணொளி எடிட்டிங் :
நவநீத கிருஷ்ணா
குரல் : விஜய் கிருஷ்ணா
ஆசிரியர் குழு எண் : 77085 76986
புத்தகங்கள் வாங்க : 99406 84644
அலுவலக தொலைபேசி : 044 2483 4643
முகவரி : ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு,
கோடம்பாக்கம், சென்னை - 600 024
கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்..
#பட்டா #எல்லை #தகவல் #ராஜாத்திபதிப்பகம் #நிலம் #தகராறு #பிரச்சனை #சர்வே #கூட்டுப்பட்டா #தனிப்பட்டா #உட்பிரிவு #பாகப்பிரிவினை #பத்திரம் #Jointpatta #thanipatta #Land #Subdivision

Пікірлер: 40
@baskarkannappan1747
@baskarkannappan1747 8 ай бұрын
ஐயா வணக்கம். எனது தந்தை க்கும் எனது பெரியப்பா விற்கும் 1962 ஆம் ஆண்டு பாகப்பிரிவினை நடந்தது. அதில் ஒரு தட்டோடு வீடும், ஒரு காலிமனையும் அடுத்தடுத்து உள்ளது. இரண்டுமே பொதுவில் பாதி பொதுவில் பாதி என்று பாகப்பிரிவினை யில் உள்ளது. பிறகு என்னுடைய பெரியப்பாவும், என்னுடைய அப்பாவும் இறந்து விட்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு என்னுடைய அப்பாவிற்கு பாத்தியபட்ட நிலம், வீடு, மற்றும் மேலே குறிப்பிட்ட சொத்துக்களை என்னுடைய அப்பாவின் வாரிசுகள் பாகப்பிரிவினை செய்து கொண்டோம். அதில் எனக்கு வந்த பாகம் தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தட்டோடு வீட்டில் பொதுவில் பாதியும், அந்த காலி மனையில் பொதுவில் பாதியும் ஆகும். தற்போது அந்த தட்டோடு வீடு வீடாக இல்லை காலிமனையாகத்தான் உள்ளது. இப்போது எனது கேள்வி என்னவென்றால் அந்த காலிமனையின் அளவையும், தட்டோடு வீட்டின் அளவையும் சேர்த்து ஒரு பக்கமாக பாதி பாகம் என்னுடையதை நான் விற்க வேண்டும். இந்த மொத்த இடத்திற்கும் கடந்த ஜனவரி மாதம் பட்டா வாங்கி இருக்கிறேன். பட்டா வில் எனக்கும் எனது பெரியப்பா பெயருக்கும் கூட்டாக பட்டா வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டும் இரண்டு நெம்பரிலும் கூட்டாக பட்டா வழங்கியுள்ளது. எனது கேள்வி என்னுடைய பாதியை நான் எப்படி விற்பனை செய்வது. என்னுடைய பெரியப்பா வின் வாரிசுகளை ஒன்று திரட்டுவது எளிதல்ல. அதோடு அந்த வாரிசு களில் இருவர் இறந்துவிட்டார்கள். என்னுடைய பாதி பாகம் விற்பனை செய்ய ஆலோசனை வேண்டும் ஐயா.
@johnpaulbilavendiran6411
@johnpaulbilavendiran6411 2 жыл бұрын
Thank you. Very much to rasathi pathipagam
@hajimohamed7890
@hajimohamed7890 2 жыл бұрын
Good sir
@vaithiyanathan8589
@vaithiyanathan8589 2 жыл бұрын
Good
@shanmugasakthi2134
@shanmugasakthi2134 2 жыл бұрын
Super sir
@karthikeyanvijayakumar9316
@karthikeyanvijayakumar9316 2 жыл бұрын
எங்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது..அப்பா பெயரில் உள்ளது..ஆனால் கூட்டு பட்டாவில் மேலும் இருவரோடு சேர்ந்து இருக்கிறது..எங்கள் தாத்தா வாங்கிய நிலம்..முறையான கிரய பத்திரம் இருக்கிறது..Full field ஆக இல்லை..அதனால் Surveyor வந்து அளந்து தான் பிரிக்க முடியும் என்கிறார் VAO..இதில் சிரமம் உள்ளதா இல்லை சுலபமாக தீர்க்க கூடியதா..நிலம் எங்கள் அனுபவத்தில்தான் உள்ளது..எங்கள் அப்பாவுக்கு நான் என் தம்பி என்று இரு வாரிசு..கூட்டு பட்டாவில் உள்ள நிலத்தை நேரடியாக எங்கள் இருவருக்கும் தனிப்பட்டா ஆக்கமுடியுமா..இல்லை அப்பா பெயருக்கு தனிப்பட்டா கொண்டுவந்து பின்தான் பாகம் பிரிக்க இயலுமா? விளக்குங்க சார்...(இதற்கு ஒரு Subdivisionku 2000 செலவு ஆகும் என்கின்றனர் அதிகாரிகள்..15 Subdivision ஆக உள்ளது எங்கள் நிலம்..இவர்கள் சொல்வது போல்தான் ஆகுமா..அல்லது செலவை குறைக்க ஏதேனும் வழி உள்ளதா)
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
கிரைய பத்திரம் தனியாக செக்குபந்தியுடன் இருந்தால்.. கூட்டுப்பட்டா நிலத்தை பிரிப்பது சுலபம்! உட்பிரிவு கட்டணம் ஒரு உட்பிரிவுக்கு.. 400,500,600 (முறையே கிராமம்,நகரம்,மாநகரம்)
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 2 жыл бұрын
Super super super Anna💋💋💋
@user-qt7pm1uv4h
@user-qt7pm1uv4h 2 жыл бұрын
நாங்கள் அண்ணன் தம்பி ஐந்துபேர். ஒருவர் காணாமல் போய்விட்டார்.மொத்தம் ஐந்துபேர்
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
விஷயம் பாதியில் நிற்கிறது..
@ahamedriyazali4898
@ahamedriyazali4898 2 жыл бұрын
👌👌👌
@abdulrasheedbabu6474
@abdulrasheedbabu6474 2 жыл бұрын
Nilagiri
@Smusic-xy3ov
@Smusic-xy3ov 2 жыл бұрын
சார் வணக்கம், எனது தாத்தா இறந்து விட்டார், அவரது நான்கு மகன்கள் பெயரிலும் கூட்டு பட்டா வந்துவிட்டது, 1995ல் பாகப்பிரிவினை எழுதினார்கள் ஆனால் அதை ரிஜிஸ்டர் செய்யவில்லை, அதனைக் கொண்டு இப்போது எனது தந்தை எங்கள் உடன் பிறந்தவர்களுக்கும் தானம் எழுதி கொடுத்து விட்டார், அதில் நான்கு திசை எல்லைகளும் குறிப்பிட்டு இருக்கிறது, தற்போது எங்கள் இடத்தை அளந்து தனிபட்டா வாங்க, முடியவில்லை, என்ன காரணம்...
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
எந்த பத்திரமாக இருப்பினும் பதிவு செய்தல் மட்டுமே செல்லும்.. பத்திரத்தை பதிவு செய்த பிறகு, பட்டாவுக்கு விண்ணப்பம் செய்தால்.. நிச்சயம் பட்டா கிடைக்கும்..
@Smusic-xy3ov
@Smusic-xy3ov 2 жыл бұрын
@@RajathiPathipagam நன்றி ஐயா...
@muhammedhussain6844
@muhammedhussain6844 2 жыл бұрын
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு சுப்பர் நண்பா 👍👌🤝💐💐
@shanmuganathan8889
@shanmuganathan8889 2 жыл бұрын
இதுஎங்கலுக்குபன்பெரும்
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 2 жыл бұрын
விளக்கமாகவும்சொன்னிர்கள்விளக்கிசொன்னிர்கள்நன்றிசார்
@muthumanipm2984
@muthumanipm2984 2 жыл бұрын
@@shanmuganathan8889 6
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 2 жыл бұрын
Super
@rajendiranpanchan2334
@rajendiranpanchan2334 2 жыл бұрын
Very good explanation thanks sir
@araveinthmedicals9224
@araveinthmedicals9224 Жыл бұрын
இரண்டு பேருக்கு உண்டான கூட்டு பட்டாவில் ஒருவர் பாகப்பிரிவினை செய்ய நினைக்கிறார்.இவரிடம் பத்திரம், பட்டா மற்றும் தாய் பத்திரம் அனைத்தும் உள்ளது. இன்னொருவரிடம் பத்திரம் தொலைந்து விட்டது.இவருடைய பத்திர நகலை வைத்து முதலாமவர் பாகப்பிரிவினை செய்ய முடியுமா?
@user-xi1pj9jl6x
@user-xi1pj9jl6x Ай бұрын
செக்பந்தி என்றால் என்ன
@anandhirajanandhiraj9971
@anandhirajanandhiraj9971 Жыл бұрын
அய்யா நாங்கள் 50 வருடங்களாக 10 செண்ட் இடத்தில் வசித்து வருகிறோம் ஆனால் இடம் என் தந்தையுடைய தாத்தாவின் பெயரில் வருகின்றது எனது தந்தை பெயருக்கு பட்டா மாற்ற முடியுமா
@rathanaraj8257
@rathanaraj8257 2 жыл бұрын
Kuttu will yepadi seivathu
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mJq6lIpoqc2ioKs இந்தக் காணொளியை காணவும்..
@abiabinaya6600
@abiabinaya6600 2 жыл бұрын
எங்கள் வீட்டில் அண்ணன் தம்பிகள்.4 பேர். பட்டா அம்மாபெயரில்உள்ளது(அ)இறந்துவிட்டார். இதில்ஒருவருக்குபட்டாவேண்டும்மற்றமூவரும்தனியாகஎழுதவசதிஇல்லை.
@lakshmanana4114
@lakshmanana4114 2 жыл бұрын
Tamil
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
எதுவாக இருந்தாலும் அனைத்து வாரிசுகளில் சம்மதமும் தேவை..
@boopathym5172
@boopathym5172 11 ай бұрын
பட்டாவுக்குஎண்உண்டா
@sharamadhasuresh2291
@sharamadhasuresh2291 2 жыл бұрын
Land problem. Phone number enna anna
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
ஆசிரியர் குழு எண் : 77085 76986 புத்தகங்கள் வாங்க : 99406 84644 அலுவலக தொலைபேசி : 044 2483 4643 முகவரி : ராஜாத்தி பதிப்பகம் 1/2, பத்மனாபன் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024 கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்..
@Muthukumar-kq9by
@Muthukumar-kq9by 2 жыл бұрын
உயில் படி தனித்தனியாக அம்மா அப்பா சொத்து எழுதி இருக்கிறது..ஆனால் பட்டா அம்மா பெயரில் உள்ளது..எப்படி மாற்றுவது
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
பதிவான உயிலாக இருந்தால், உங்கள் ஊரின் கிராம நிர்வாக அலுவலரை நாடவும்
@kalaiselvanselvanyokesh1018
@kalaiselvanselvanyokesh1018 2 жыл бұрын
இலவச பட்டா ‌அரசு கொடுத்தது 50 வருடம் முன்பு அதனை தற்போது அறநிலையத் துறை யினர் கோயில் இடம் என சொல்லி பகுதி கேட்டு நோட்டீஸ் விடுகின்றனர் என்ன செய்ய?
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
இலவச பட்டாவில் வீடோ அல்லது விவசாயமோ செய்துள்ளீர்களா? எதுவும் இல்லையா? அதை வைத்து தான் மேற்கொண்டு பேச இயலும்..
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 27 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 61 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН