Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇 kzbin.info/door/hrzWfUothBg6-14kcReyaQ
@RajeswariDineshkumar8 ай бұрын
மிகவும் அருமை அம்மா. அதுவும் எல்லா கேள்விகளுக்கும் அருமையாக பதில் அளிக்கிறீர்கள். மிக்க நன்றி.
@ponselvi-terracegarden8 ай бұрын
பெரும்பாலும் 70% பேர் செடி வளப்பில் அனுபவம் இல்லாமல் தான் இருக்கிறார்கள். ஆனால் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதிலும் முற்றிலும் இயற்கை முறையில் தான் வளர்க்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு சரியான விளக்க முறைகள் எந்த சேனல்களிலுமே கிடைப்பதில்லை. நான் எனக்கு முடிந்தவரை பதிலளிப்பேன், சகோதரி..மகிழ்ச்சி 🙏
@kalaichelviranganathan32589 ай бұрын
இந்த video ரொம்ப useful ஆக இருக்கிறது. மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden9 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி
@poornimasivakumar5995Ай бұрын
Super tips..simple and effective beautiful garden
@ponselvi-terracegardenАй бұрын
Thank you so much sister, keep watching my videos.
@asirsudhakarraj87678 ай бұрын
நன்றி சகோதாி இந்த கரைசலை எவ்வளவு நாட்கள் பாதுகாத்து மறுபடியும் உபயோக படுத்தலாம்
@ponselvi-terracegarden8 ай бұрын
இன்னும் ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
@asirsudhakarraj87678 ай бұрын
@@ponselvi-terracegarden மிக பயனுள்ள தகவல் உடனடியாக கொடுத்ததற்கு மிக்க நன்றி
உடனே பயன்படுத்தி விடுவதுதான் நல்லது. ஒரு டம்ளர் மோரில் இரண்டு டீஸ்பூன் அரப்பு பவுடர் கலந்து தயாரித்தாலே 3லிட்டர் தண்ணீரில் கலக்கலாம்.
@khatheejabi125827 күн бұрын
நன்றி@@ponselvi-terracegarden
@naufalrizwan25229 ай бұрын
Superb.whenever u show ur plants show with its respective pots & it's capacity if u know
@ponselvi-terracegarden9 ай бұрын
Ok ,sure.
@kanchana3337 ай бұрын
Useful tips thankyou sister
@ponselvi-terracegarden7 ай бұрын
நன்றி சகோதரி.
@sabhariuma15729 ай бұрын
Amma unga pathivu kalanilaiku yetra mathiri ullathu, anivarum easy aa payanpaduthum padiyum ullathu thanks ma, amma ennudaya malligai sediyil kaintha kilaikal ullathu athai vetti vidalama🌾🍂🍃🌿
@ponselvi-terracegarden9 ай бұрын
காய்ந்த கிளைகளை கட் பண்ணி விடுங்கள்,சகோதரி. இந்த கரைசல் செய்து கொடுத்து ரிசல்ட் சொல்லுங்கள்.
@KrishnaVeni-wg2qk9 ай бұрын
நானும் செய்கிறேன். ஏற்கனவே உங்கள் வீடியோ பார்த்து சில உரம், ஸ்ப்ரே பண்ணினேன். முழம் கை அளவு தான் மல்லி செடி வாங்கி வந்தேன். 20 நாளில் இப்போது மொட்டுகள் வந்துள்ளது. 😊😊
@ponselvi-terracegarden9 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி. நான் அனுபவப்பட்ட விஷயங்களை மட்டுமே வீடியோவாக வெளியிடுகிறேன். நான் செடி வளர்க்கும் முறையிலேயே நீங்கள் எல்லோரும் வளர்க்க வேண்டும் என்பதே என் ஆசை.. நன்றி சகோதரி.
@KrishnaVeni-wg2qk9 ай бұрын
@@ponselvi-terracegarden ம்ம்.. நானும் 10 வயது வரை வயலில் காய்கறிகள் விளையும் போது சின்ன சின்ன வேலை செய்வேன். இப்போது 24 வயது காலேஜ் படிக்கிறேன். பணியின் காரணமாக நகரத்தில் இருக்கிறோம். இங்கு மண் கூட கிடைக்கவில்லை. நீண்ட நாள் ஆசை அந்த பழைய வாழ்க்கை க்கு தோட்டத்திற்கு போகும் போதெல்லாம் குழந்தையாக மாறியது போல. அதனால் வீட்டில்அடம்பிடித்து செடிகள் வாங்கி வந்தேன். காலையிலும் காலேஜ் முடிந்து வந்து மாலையிலும் அந்த பராமரிப்பை செய்கிறேன் மன நிறைவாக இருக்கிறது mam.. 😊😊
@ponselvi-terracegarden9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.. செடிகளை பராமரிப்பதில் கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை.. இயற்கையை நேசிக்கும் உள்ளத்தில் அன்பு மட்டுமே இருக்கும்.. வேறெதற்கும் இடமில்லை.. உங்களைப் போன்ற இளம் வயதினர் கார்டனிங் ல் காட்டும் ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..
@KrishnaVeni-wg2qk9 ай бұрын
@@ponselvi-terracegarden 🙏🙏😊😊😊
@jayanthiprakash70719 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா மாதுளை செடி இரண்டு வருடமா அப்படியே உள்ளது துளிவருகிறது பூ வருது உதிரி உதிரி விடுகிறது ஒரு காய் கூட வரவில்லை உரம் செல்லுங்க. அம்மா
@SrimathiK-te2pl9 ай бұрын
Thank you sis, nalla liquid fertilizer. ஆப்பிள், மாதுளை வீணாகி போனதை அரைத்து சாறெடுத்து வைத்திருக்கிறேன்.மூன்று நாட்களாகிறது. தண்ணீர் கலந்து செடிகளுக்கு விடலாமா? அல்லது வேறேதும் கலக்க வேண்டுமா? Guide me sis
@ponselvi-terracegarden9 ай бұрын
இந்த முறை தண்ணீர் கலந்து செடிக்கு கொடுத்து விடுங்கள். அடுத்த முறை இது போல் அரைத்தால் வடிகட்ட வேண்டாம். வெல்லம், தயிர் சிறிதளவு கலந்து மூடி போட்ட டப்பாக்களில் ஊற்றி ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் கழித்து நம் வசதி படி செடிக்கு கொடுக்கலாம். நாம் வடிகட்டாமல் போட்டு புளிக்க வைக்கும் போது நொதித்து நன்றாக கரைந்து விடும். ஸ்பிரே பண்ணுவதற்கு மட்டுமே வடிகட்டிக் கொள்ளலாம். நான் இந்த வீடியோவில் வடிகட்டும் போது சக்கைகள் ரொம்ப இல்லை. கடுகு தோல் மட்டுமே கொஞ்சம் இருந்தது. தயிர் சேர்ப்பதால் நல்ல ஸ்மெல் தான் வரும். தொடர்ந்து சந்தேகம் எதுவென்றாலும் கேளுங்கள், சகோதரி
@SrimathiK-te2pl9 ай бұрын
Ok sis thank you so much. Karupatti serthen sis.Kaiyaala arichu eduthu sakkaiya compost la poten.
@ponselvi-terracegarden9 ай бұрын
@@SrimathiK-te2pl கஷ்டப்பட்டு கையாலேயே அரைக்க வேண்டாம். மிக்ஸியில் அரையுங்கள். இயற்கை பொருட்களை எப்படி வடிவத்திலும் செடிக்கு கொடுக்கலாம்.
@SrimathiK-te2pl9 ай бұрын
Ok sis. Thank you 💚
@govindasamykamalakannan12947 ай бұрын
You can add ur urine too it’s natural urea.
@S.A._8128 ай бұрын
Amma maligaiku laman thoal podalama. Three days water fertilizer gadugalama
@ponselvi-terracegarden8 ай бұрын
எலுமிச்சை தோல் மல்லிகை செடிக்கு கொடுக்கலாம். நீர் உரங்கள் அடிக்கடி கொடுக்க வேண்டாம். வாரம் ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கலாம்.
@CisilySelvarajan8 ай бұрын
Very nice
@ponselvi-terracegarden8 ай бұрын
Thank you so much, keep watching my videos
@jayanthiprakash70719 ай бұрын
வணக்கம் அம்மா புடலங்காய் செடி தானக வந்த செடி குட்டபுடலை 3 காய் தான் வந்தது ஒரு மாதமாய் பூ பிஞ்சும் வருது ஒரு இஞ் வந்ததும் அப்படியே கருகி விடுகிறது என்ன உரம் கொடுக்க வேண்டும் அம்மா செல்லுங்க பிலிஸ்
@ponselvi-terracegarden9 ай бұрын
போரான் என்னும் நுண்ணூட்ட சத்து குறைபாடு காரணமாகவே இப்படி ஆகும். வீடியோ லிங்க் தருகிறேன். எருக்கு இலை கரைசல் கொடுக்கவேண்டும். தேமோர் கரைசலும் தெளியுங்கள்.
Mam maavu pochi+ aswini poochi, plz sollunga eppadi control pannurathu, leaf cut pannalum vanthUtae irukku
@ponselvi-terracegarden9 ай бұрын
மாவுப்பூச்சி அதிகமாக பாதித்த கிளைகளை கட்பண்ணி விட வேண்டும். செடி யின் தண்டுப்பகுதியில் முழுவதும் எறும்பு சாக்கால் தேய்த்து விடவேண்டும். இப்படி செய்யும் போது மீண்டும் எறும்புகள் வராது. மாவுப்பூச்சியும் வராது. அஸ்வினி பூச்சிக்கு வேகமாக தண்ணீர் ஸ்பிரே பண்ணி விட்டு மேலே சாம்பல் தூவி விடுங்கள். வேப்பண்ணை கரைசல் கூட தெளிக்கலாம்.
@nanthithagiri25328 ай бұрын
Thank u soo much
@ponselvi-terracegarden8 ай бұрын
You are welcome.
@maheswarivijayakumar9327 ай бұрын
Ok maa entha backet la ooram senchi irukinga .evalavu naal vechikalm
@ponselvi-terracegarden7 ай бұрын
இன்னும் ஒரு வாரம் வைத்து பயன்படுத்தலாம்.
@maheswarivijayakumar9327 ай бұрын
@@ponselvi-terracegarden thank you so much 🙏♥️
@vathsalatheva85177 ай бұрын
Hi sister, i am a new sub for your channel. I live in canada and here the yogurt we keep in the fridge. Can i use this yogurt or should i keep the yogurt out side for cuple of days and use it? Excellent video. Thank you.
@ponselvi-terracegarden7 ай бұрын
Keeping it outside the fridge for 3days is better. Coz bacterial growth will not be happening in very low temperatures. Thank you.
@nandinidinesh44046 ай бұрын
Once the liquid preparation means how many days we will keep this
@ponselvi-terracegarden6 ай бұрын
10 நாட்கள் வரை வைத்து பயன்படுத்துங்கள்.
@acnaufal4 ай бұрын
எந்த வகையான தண்டுகளை மண்ணில் வைத்து பெரு செய்யலாம?
@ponselvi-terracegarden4 ай бұрын
ரோஜா, மல்லிகை, முல்லை, செம்பருத்தி போன்ற பூச்செடிகள் தண்டுகள் மூலம் ஈஸியாக வளரும். முருங்கையை தண்டு மூலம் வளர்க்கலாம். புதினா,பொன்னாங்கண்ணி கீரை, பசலைக்கீரை, புளிச்சகீரை இவையெல்லாம் தண்டுகள் மூலம் ஈஸியாக வளரும். இன்னும் பல செடிகளை தண்டுகள் மூலம் உருவாக்கலாம். நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள். மிக்க நன்றி 🙏
@kavitha7509 ай бұрын
Hai mam super idea&uram.orange skin serkalama....i will try definitely..thankyou
@ponselvi-terracegarden9 ай бұрын
இது உயிர் உரமாக தயாரிப்பதால் ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை தோல் சேர்க்க வேண்டாம். கம்போஸ்ட் தயாரிக்கும் போது எல்லா வகையான சிட்ரஸ் தோல்களும் சேர்க்கலாம். தொடர்ந்து கமெண்ட்ஸ் கொடுங்கள்... மகிழ்ச்சி சகோதரி
@kavitha7509 ай бұрын
@@ponselvi-terracegarden sure mam.keep rocking
@Nazeem-s1z7 ай бұрын
Amma. En. Veetu dragen. Cheti 2 year agium. Ennum poo. Vetala enna seyalam amma
@ponselvi-terracegarden7 ай бұрын
எருக்கு இலை கரைசல் தயாரித்து மண்ணுக்கு கொடுங்கள். பஞ்சகாவியா, அல்லது தேமோர் கரைசல் செடிக்கு ஸ்பிரே கொடுங்கள்.
@devikarani20249 ай бұрын
நல்ல பதிவு நன்றி சகோதரி
@ponselvi-terracegarden9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@kalyanikalyani96535 ай бұрын
Kadugu oil plants ku use pannalama mam
@ponselvi-terracegarden5 ай бұрын
யூஸ் பண்ணலாம் சகோதரி.
@kalyanikalyani96535 ай бұрын
@@ponselvi-terracegardenThank you for your reply.. Epdi use panuradhu sis..
@saijayanthi1689 ай бұрын
Very nice sister 👍😊💞💞💞💞
@ponselvi-terracegarden9 ай бұрын
Thank you so much sister
@covaijansi31194 ай бұрын
இது தான் உங்க சென்னை வீடா தோழி நானும் இப்படி செய்து பார்க்கிறேன் தோழி
@ponselvi-terracegarden4 ай бұрын
இந்த வீடியோவில் பார்ப்பது சென்னை வீடு தான் தோழி.. செய்து கொடுத்து எப்படி இருக்கிறது என்பதை கமெண்ட்ஸ் ல் தெரியப்படுத்துங்கள், மிக்க நன்றி.
@covaijansi31194 ай бұрын
@@ponselvi-terracegarden ok sister
@sujeerajasekaran60212 ай бұрын
சென்னையில் எங்குமா?@@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden2 ай бұрын
@@sujeerajasekaran6021 சென்னை அருகே உள்ள திருவள்ளூர், சகோதரி.
@muralik.m.8 ай бұрын
இந்த கரைசல் எத்தனை நாள் வைத்து பயன்படுத்தலாம். அக்கா...
@ponselvi-terracegarden8 ай бұрын
இன்னும் ஒரு வாரம் வைத்து பயன் படுத்தலாம்.
@Sangeethakitchenandgardening9 ай бұрын
Okay aunty Nanum try panra aunty 👍
@ponselvi-terracegarden9 ай бұрын
ட்ரை பண்ணி பார்த்து ரிசல்ட் சொல்லுங்கள், சகோதரி. நன்றி..
@vijayalakshmipaneerselvam57369 ай бұрын
Mam samanthi nathu Nala valara enna seiyanum
@ponselvi-terracegarden9 ай бұрын
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்து மிகவும் சிறிய சாமந்தி நாற்று ஒன்று எடுத்து வந்து அதை வீடியோவில் காண்பித்து இருந்தேன். சிறிய பாட்டில் ஒன்றை கட்பண்ணி ஹோல்ஸ் போட்டு அதில் நடவு செய்து பக்குவமாக தான் கொண்டு வந்தேன். மண்ணுக்குள் இருந்து துளிர்த்து வந்த நாற்று தான், ஆனால் வேர் கிடையாது. ரோஜா பதியம் போட்ட அதே தொட்டியில் நடவு செய்தேன்.. நான்கு நாட்கள் ஆகியும் தூங்கி போய் நின்றது. காய்ந்து விடும் போல் தோன்றியது. பிடுங்கி கரும்பு சக்கையில் மண்கலவை செய்து நடவு செய்த ரோஜா தொட்டியில் மாற்றினேன். மறு நாளே பார்க்க பளிச்சென்று நின்றது. போனவாரம் வெளியிட்ட சாமந்தி வீடியோ பார்த்தால் தெரியவரும். மாற்றி நடவு செய்தேன். நீங்கள் உங்கள் வேறு செடி வளர்க்கும் தொட்டியில் இருந்து பழக்கப்பட்ட மண்ணை எடுத்து அதில் நடவு செய்து பாருங்கள். நன்றாக வந்து விடும். நிழல் பாங்கான இடத்தில் வைத்து தண்ணீர் ஸ்பிரே பண்ணி விடுங்கள்.
@womensbeautykitchen8 ай бұрын
செடிமுருங்கை விதை போட்டு செடி வளர்ந்து ஆறு மாதம் ஆகிறது இன்னும் பூ வைக்கவில்லை என் செய்யலாம்
@ponselvi-terracegarden8 ай бұрын
எருக்கு இலைகள் ஊறவைத்து மண்ணுக்கு ஊற்றுங்கள். செடிகள் காய்க்காமல் இருப்பதற்கு போரான் என்னும் நுண்ணூட்ட சத்து குறைபாடு காரணமாகவும் இருக்கலாம். தேமோர் கரைசல் இலைகளுக்கு ஸ்பிரே பண்ணி விடுங்கள். பஞ்சகாவியா இருந்தால் அதுவும் தெளியுங்கள். சிறிய துண்டு பெருங்காயம் செடி பக்கத்தில் புதையுங்கள். புண்ணாக்கு கரைசல், இந்த வீடியோவில் உள்ள கரைசல் எதாவது ஒன்றை மாதம் இருமுறை கொடுங்கள்.
வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளுக்கும் விடலாமா. ஏன்னென்றால் இப்படி தெளிக்கும் போது வீட்டுக்குள் இலையான் மாதிரி சின்ன சின்ன பூச்சிகள் வருகிறது.. தயவு செய்து பதில் தரவும். கனடாவிலிருந்து கேட்கிறேன்.
@ponselvi-terracegarden6 ай бұрын
முதல் முறை குறைந்த அளவில் கொடுத்து பாருங்கள். நன்றி.
@rvsridharan6 ай бұрын
பழ தோல்
@ponselvi-terracegarden6 ай бұрын
🙏
@rainbowrainbow37279 ай бұрын
அக்கா மீனுக்கு பதிலா நான் கேட்டது இன்று கிடச்சிருச்சு நன்றி பச்சை பயிறு இது போல கொடுக்கலாம் சொல்லுங்க
@ponselvi-terracegarden9 ай бұрын
கொடுக்கலாம் ராஜி. வீட்டில் சில பயிறு வகைகள் ஈஸியாக வண்டு பிடித்து விடும். அதையெல்லாம் இப்படி சத்தான உரக்கரைசலாக மாற்றி செடிகளுக்கு பயன்படுத்தலாம். மகிழ்ச்சி ராஜி..
@sirin50722 ай бұрын
இந்த கரைசல் வைத்து யூஸ் பண்ணலாமா இல்லை ஒரு நாள் மட்டும் யூஸ் பண்ணனுமா
@ponselvi-terracegarden2 ай бұрын
தயாரித்து ஏழு நாட்களில் செடிகளுக்கு தருகிறோம். இன்னும் ஒரு வாரம் வைத்து பயன்படுத்தலாம்.
@shikkandarbadhusha5359 ай бұрын
Kadugu oil use pannalama amma
@ponselvi-terracegarden9 ай бұрын
நான் இதுவரை செடிகளுக்கு பயன்படுத்தியதில்லை.. பயன்படுத்தி பார்த்து விட்டு வீடியோ போடுகிறேன்..
@shikkandarbadhusha5359 ай бұрын
Thank you amma
@SenthilKumar-ev8tg6 ай бұрын
🙏
@ponselvi-terracegarden6 ай бұрын
Thank you, keep watching my videos
@shanthishanthi51025 ай бұрын
4:04
@SatheeshR-br8xm5 ай бұрын
பஞ்ச காவ்யா அல்ல பஞ்சகவ்யம்.
@ponselvi-terracegarden5 ай бұрын
இனிமேல் பஞ்சகவ்யம் என்று குறிப்பிடுகிறேன். தொடர்ந்து நம் சேனலை பாருங்கள், நன்றி.
@kesavanduraiswamy14928 ай бұрын
உங்க வீடியோவும்
@ponselvi-terracegarden8 ай бұрын
Thank you so much, keep watching my videos.
@meru75913 ай бұрын
பஞ்சகவ்யா😝
@Pacco30028 ай бұрын
ஆரஞ்சு எலுமிச்சை சாத்துக்குடி தோல் கூடாது என நினைக்கிறேன்.
@ponselvi-terracegarden8 ай бұрын
ஆமாம், அது தவிர மற்ற பழங்களின் தோல், அல்லது பழங்களும் போடலாம்.
@Pacco30028 ай бұрын
@@ponselvi-terracegarden நான் ஒரு ஆரஞ்சு விதை போட்டு ஜாடியில் இரண்டு மீட்டர் உயர அடர்ந்த மரம் வளர்த்து ஒரு தோழியிடம் தந்துவிட்டேன். எதேச்சையாக மீதமிருந்த இட்டலி மாவு , வாழைப்பழம் இரண்டையும் கரைத்து தெளிக்க அப்படி அடர்ந்து வளர்ந்தது .