Рет қаралды 143
கலைவாணி நின் கருணை தேன் மழையே பாடல் l Kalaivani nin Karunai
கலைவாணி நின் கருணை தேன் மழையே
கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
(கலைவாணி)
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி
(கலைவாணி)
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்
(கலைவாணி)
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்
(கலைவாணி)