Рет қаралды 63,933
#worldolaichuvadi கிண்ணிமங்கலம் 81 சித்தர்கள் ஜீவசமாதி ஸ்ரீ ஏகநாதர் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் சமேதா திருக்கோவில் மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 11 தலைமுறை கர்மா வினைகளை போக்கக்கூடிய ஒரு அற்புதமான திருக்கோவில் பிரபஞ்ச சக்தி காந்தவிசை முக்கோண வடிவில் ஆண்டனா போன்று 18 படிகளைக் கொண்ட குடைவரை கோவில்கள் போன்று காணப்படுகிறது முழுக்க முழுக்க போகருடைய மகா சக்தியால் விளங்கக்கூடிய அற்புத திருக்கோவில் திருக்கோவிலில் பள்ளியறை கிடையாது கொடிமரம் கிடையாது நவகிரகங்கள் சிலை உருவில் வழிபாடு கிடையாது தட்சிணாமூர்த்தி வழிபாடு கிடையாது இத்திருக்கோவில் நந்தி பகவான் அகஸ்தியர்அப்பர் என்ற சிறப்பு பெயர் பெற்று விளங்குகிறது இத்திரு கோவில் நந்தி பகவான் இரண்டு கால்களையும் பின்பக்கமாக மடக்கி வீற்றிருக்கும் வேறு எங்கும் காணாத சிறப்பு இந்த நந்தி பகவான் தலவிருட்சம் வில்வமரம் இங்கு தீராத நாள்பட்ட வியாதிகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு மருந்துகள் அளிக்கப்படுகிறது குறிப்பாக சர்க்கரை வியாதி சொரியாசிஸ் நோய் நீண்ட நாட்களாக வருடங்களாக குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து மருந்து உட்கொண்டால் நல்ல பலனை அளிக்கிறது மேலும் உங்கள் ஜாதகத்தை நன்றாக கணித்து உங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய இந்த சுவாமிஜி அவர்கள் மிகவும் உதவி புரிந்து வருகிறார்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் பிரதோஷ பூஜைகள் மிகவும் சீரும் சிறப்புமாக இங்கு நடைபெற்று வருகிறது தசமி நட்சத்திரத்தன்று சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது மேலும் இது போன்ற அதீத சிறப்பு வாய்ந்த அமானுஷ்ய சக்திகள் இந்த திருக்கோவிலில் இருந்து வருகிறது அவசியம்இந்த கோயிலுக்கு ஒருமுறை வாருங்கள் வாழ்க வளமுடன் சிவாய நம திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி#worldolaichuvadi.