Madurai Vlog | Samanar Gugai Madurai - சமணர் குகை மதுரை ஒத்தக்கடை |யானைமலை

  Рет қаралды 5,092

Slides Factory

Slides Factory

4 жыл бұрын

Samanar Gugai Madurai - சமணர் குகை மதுரை
its located in Marurai near Othakadai. its famous for a very big rock mountain and a temple near to it
அமைப்பும், பெயர் காரணமும்
யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானை மலை என பெயர் பெற்றுள்ளது.[1] யானை மலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பர்.
மலையின் வரலாறு
சமணர் கல்படுக்கைகள்
யானை மலையின் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. இக்குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் " இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. "இவ" என்பது "இபம்" என்கிற வடமொழிச் சொல்லின் மறு வடிவம். இதன் பொருள் "யானை" என்பதாகும். குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் யானைமலை என்று பொருள். பா' என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை" என பொருள் படும். "ஏரிஆரிதன்", "அத்துவாயி அரட்டக்காயிபன்" ஆகிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவரும் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்பது இக்கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.
குடைவரை கோயில்கள்
நரசிங்கபெருமாள் குடைவரை கோவில்[2]
கி.பி. 770 ம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. .இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் என அழைத்தனர். இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என் கூறுகிறது.
லாடன் கோயில் எனும் முருகன் குடைவரை கோவில்
யானைமலையில் முருகன் பெருமானுக்கு லாடன் கோயில் எனும் குடைவரை கோவில் உள்ளது. [3]இங்கு காணப்படும் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். இக்கல்வெட்டில் ""நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர்"" என்பவர் வட்டகுறிச்சி என்ற ஊரை சேர்ந்த இவர் இக்குடைவரை கோயிலை புதுப்பித்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது.
புடைப்புச் சிற்பங்கள்
கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால், தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையில் செதுக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது.
சமண சிற்பங்களின் அறிவிப்புப் பலகை
சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்
சிற்பங்கள் பற்றிய அறிவிப்பு பலகை
லாடன் கோயில்[4]
விஜயநகர மன்னர்கள் காலம்
மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் கால கல்வெட்டில் யானைமலையை "கஜகிரி" என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இலக்கியங்களில்
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் யானைமலையில் சமணப்பள்ளி இருந்ததாக திருஞானசம்பந்தர் எழுதிய மதுரைப்பதிகம் என்னும் நூல் கூறுகிறது.
மதுரையை தாக்க வந்த யானையை சொக்கேசர் நரசிங்கர் கணை தொடுத்துக் கட்டிப் போட்டிருக்கிறார் என பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் யானைமலையை பற்றிய ஒரு குறிப்பு உள்ளது.

Пікірлер: 12
@lalithasubramaniam2677
@lalithasubramaniam2677 4 жыл бұрын
Sirappana pathivu. Samanar guhai patri kelvipatirukiren. Athai kurithu virivaga solli kanbithatharku nandri. Ithu pol niraya video pathivugalai ethirparkiren
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat Жыл бұрын
Kandippaga pathividigiren
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 Жыл бұрын
Nanba unga voice unmaiya rombha super uhh iruku !! Nan samanam madam sarthavan
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat Жыл бұрын
தங்களின் மதிப்பான கருத்திற்கு மிகவும் நன்றி நண்பா...!
@thedal2.021
@thedal2.021 3 жыл бұрын
Pramiya yeluththum ,vatteluththum ore yeluththu
@oviyaktm6531
@oviyaktm6531 3 жыл бұрын
அருமை இவரின் தொலைபேசி எண் இருந்தால் தெரியப்படுத்தவும்
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat 2 жыл бұрын
மன்னிக்கவும்... நான் தவற விட்டுவிட்டேன்...
@oviyaktm6531
@oviyaktm6531 2 жыл бұрын
@@slidesfactoryvenkat ok
@sangeethasangee3252
@sangeethasangee3252 3 жыл бұрын
Inga thaan enakku marriage nadanthucu
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat 2 жыл бұрын
Super
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 37 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 59 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Choose my outfit 💕
0:16
Valerie Lungu
Рет қаралды 19 МЛН
ToRung short film: 🙏get a free meal🤤
0:41
ToRung
Рет қаралды 25 МЛН
battery low 🤣
0:11
dednahype
Рет қаралды 15 МЛН
Quem vai assustar com o mini hipopótamo?!😱 #shorts #challenge
0:14
Gabrielmiranda_ofc
Рет қаралды 12 МЛН