ஒன்றானவன் கணவன் மனைவியாய் காதலில் கலந்து இரண்டானவன் மூன்றாய் மழலை தந்து அதனதன் கடமை இனிதே முடித்து முதுமை நெருங்க நெருங்க விண் பார்த்த பார்வை மண் பார்க்க நடக்கும் அழகிய கூனும் பெற்று குழவி போல் ஊர்ந்து நடந்து பல் இழந்து --இனிய சொல் இழந்து செவிமடுக்காமல் இருந்த காதும் செவிப்புலன் கெட்டு கண்டதே காட்சியாய் அலைந்த கண்ணும் கட்டுக்குள் நின்று ருசிக்கும் பேச்சிற்கும் ஆளாய்ப் பறந்த நாவும் சுவையிழந்து எட்டாத தூரம் வரை கேட்கும் சொல்லும் ஏக்கத்தோடு நின்று தன்னிலை இழந்த தனிப்பெரும் உறுப்புகளும் சக்தி கரைந்து தான் சுற்றி வந்த உலகில் தன்னைச் சுற்றி நிற்பவர் யாரென அறிய மறந்து வாழ்வும் முடிகிறது
@ravichellappan77953 жыл бұрын
பட்டீணாத்தார். வாழ்க்கை. இளமையில். படீத்தால். துறவறம் போக. நேரிடும்
@sriramg21423 жыл бұрын
ஐயா. வணக்கம். நான் உங்கள் சொற்பொழிவு பல. நேரங்களில் கேட்டு மகிழ்ந்து , உணர்ந்து, தெளிந்து உங்கள் பாதங்களில் மானசீகமாக பணிந்து பிறவிப்பயனை அடைந்ததாக உணர்கிறேன்் உங்கள் வயது கருதி அல்ல. உங்கள் ஆன்மா உயர்ந்து தாங்கள். ஞானம்பெற்றதால் தாங்கள்கருவிலே. திருவுடையவர்் உங்களைப் போன்றவர்களை போற்றிப் பணிவதே எங்களுக்குப் பெருமை். எல்லாம். திருவருள்
@samsinclair12162 жыл бұрын
இதுவும் பட்டினத்தார் பாடலோ?...மனசு கணக்கிறது.
@punithavallivenkat5732 жыл бұрын
@@samsinclair1216 பட்டினத்தார் பாடலான ஒரு மடமாது என்ற பாடலை மையமாக வைத்து நான் எழுதிய கவிதை இது ஒன்றானவன் உருவில் இரண்டானவன் என்ற பாடலின் முதல் இரண்டு சொல்லை பயன்படுத்தினேன் நான் இந்த comment போட்டு வெகுநாள் (9 மாதம் ) ஆகிவிட்டது எனக்கே மறந்துவிட்டது
@punithavallivenkat5732 жыл бұрын
@@samsinclair1216 கணக்க வேண்டாம். புரிதலுக்காக இப்படியெல்லாம் எழுதினார்கள். வாழும் வரை தான் வாழ்க்கை, அனுபவம், அனுபவித்தல், கடவுள், வழிபாடு எல்லாமே, உயிர் போனால் எல்லாம் பின்னால் போய்விடும் அதனால் இருக்கும் வரை மனசாட்சியோடு உண்மையாய் அன்பாய் சண்டை இட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று சொல்ல வந்தார்கள் அப்படியே சொன்னால் யார் கேட்கிறார்கள் . அதனால் கொஞ்சம் பயமுறுத்தினாற் போல் சொன்னார்கள் மனிதன் மரணத்தை தவிர வேறு எதற்கும் அஞ்சமாட்டான் அதனால் அதை ஆயுதமாக எடுத்தார்கள் இவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மரணம் வரும் . ஆனால் நமக்கு வாழ்க்கை மீது இருக்கும் ஆசையால் மரணமே வராது என்று நிச்சயமாக நினைக்கிறோம் நம்புகிறோம் இவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டால் மரண ஞாபகம் வரும் பாவம் செய்வதை கண்டிப்பாக குறைப்போம் அதற்காகவே
@lakshmiv16423 жыл бұрын
முதுமை வரும் போது மனித னின் நிலை உங்கள் உரை கேட்டு மனதை கனக்க செய்து விட்டது .
@krishnasamy35002 жыл бұрын
Wonderful ethics and life philosophy! Thanks Sivam sir.
@தேசபக்தன்-ட9ய2 жыл бұрын
முதுமையின் கொடுமையை மற்றவர்கள் உணர்ந்து தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் தம்மிடம் குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் விரும்புகிறீர்களோ அப்படி குடும்பத்தில் உள்ளமுதிய வர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர் வுப் பூர்வமாக விளக்கிய முறை பாராட்டுக்குரியது. மக்களுக்கு வாழ்வியல் முறைகளை எடுத்துச் சொல்ல தாங்கள் நலமுடன் பல்லாண்டுவாழ அருளுமாறு அருள் தரும் அன்னை காந்திமதி சமேத அருள்மிகு நெல்லையப்பர் திருவடிகளை வணங்கி என் வயதை மட்டும் தகுதியாகக் கொண்டு, "வாழ்க நலமுடன்! வாழ்க பல்லாண்டு!"என வாழ்த்தி மகிழ்கிறேன்.
@muruganpriya63365 ай бұрын
❤❤❤
@rajammp8295 Жыл бұрын
ஐயா உங்கள் தமிழ் புலமையையும் அதை உங்களுக்கு தந்த இறைவனையும் போற்றி வணங்குகிறோம். 72 வயது முடிந்து வாழும் என் போன்றோருக்கு மிகவும் பயனுள்ள அறிவுறை. உங்களுக்கு எப்படி ஐயா இவ்வளவு பக்குவம்👏🏻வாழ்க உங்களது பேசும் சேவை. உறவினர் சொன்னால் செவி மடுக்காதவ்கள உங்கள் தபவலை பின்பற்ற தொடங்குவர் என்பது உறுதி🙏🏿
@mallikakalidass40363 жыл бұрын
சுகிசிவம் அவர்கள் பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் தம்பி அவர் உரைநிகழ்வு ஒன்று அனுப்பியிருந்தான் அன்றிலிருந்து நான் அவர் பேச்சு என்றால் ஆழ்ந்து கேட்ப்பேன் மனதில் நிறுத்திக் கொள்வேன் அவர் பேச்சு காத்தோடு போகாது நம் உடலில் உயிர் உள்ளவரை நமக்கும் நாம கேட்டதை என்மகள் மகனுக்கு மட்டுமே சொல்வேன் எந்த எதிர் பார்ப்புடனும் அல்ல வாழ்க்கையின் உண்மையான வழிதடம் இதுதான் பட்டினத்தார் பற்றி நிறைய தெரிந்து கொள்ள உதவிய உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது மயக்கம் வருதே பிள்ளைகளை கஷ்டப்படுத்த கூடாதே என பல முறை நல்லா இருக்கிறமாதிரியே காட்டிக்கொள்வேன் மயங்கி பாத்ரூமில் நிலை தடுமாறி விழுந்து பல முறை தூக்கிபோய் டாக்டரிடம் காண்பித்து வரும் பிள்ளைகளை கொடுத்த கடவுளுக்கு நன்றி அவர்களை மற்றும் என் உறவுகளை கஷ்டப்படுத்தாமல் போய் சேரவே ஆசை என்ன நடக்கும் என அவனுக்கல்லவா தெரியும் மறுபடியும் நன்றி சார் உங்கள் அருமையான பேச்சுக்கள் தொடரட்டும்
@SasthaSubbarayan9 ай бұрын
தங்கள் நிலைதான் எனக்கும். தாத்தா. (75 )
@venkatramani31623 жыл бұрын
எவ்வளவு எதார்த்தமான விளக்கம். கோடி கோடி நன்றிகள்.வணக்கம்.
@ajoyvasu2 жыл бұрын
அருமை அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீங்கள் கூறிய படி நடந்துகொண்டால் முதுமையும் இனிமையாகும். கோடான கோடி நன்றிகள் ஐயா!!
@meenaganapathi4104 Жыл бұрын
ஒவ்வொரு வரும் உணர்ந்து நடக்கவேண்டிய நல்ல ஆலோசனைகள் நிறைந்த செய்திகள் தாழ்மையான வணக்கங்களுடன் கூடிய நன்றிகள் ஐயா
@goldspringgoldspring61743 жыл бұрын
ஐயா உங்களுடைய பாட்டாக பாடிய குரல் நன்று. அருமையான கருத்து. நன்றி நன்றி
@selvamuruganarunachalam69203 жыл бұрын
ஹரி ௐநமச்சிவாய நமக நோய் நொடியற்ற வாழ்க்கை அமைந்திட எல்லாம் வல்ல ஆண்டவரைப் பிரார்த்தனை செய்கின்றேன்.. முதுமையின் தன்மையை சிறப்பாக விளக்கும் பாடலுக்கு தங்களது விளக்கம் மிகவும் அருமை. நன்றி அய்யா
@muralidharan1855 Жыл бұрын
Ellam nalla irukkumbodhe piodanum. Otherwise, our position will become worse by our unwanted people. God, save me and take me at the right time without giving chances for others.
@govindarajannatarajan6043 жыл бұрын
கண்ணீர் வருகிறது. என்ன செய்ய முதிர்ச்சியின் கொடுமையை நினைத்து. வாழ்க பட்டினத்தார் புகழ்
@elangkumaranc15513 жыл бұрын
0Lpl
@chandrasekarvimala14042 жыл бұрын
S. Nam kathi
@mohandoss619 Жыл бұрын
Sir, I experienced with my mother . It was a blessing to care of her. Thank you
@TS.KRITHISH3 жыл бұрын
அனைவரும் கேட்கவேண்டிய ஒரு உரை. அற்புதமான கருத்துக்கள்
@djegannathan14293 жыл бұрын
Manianna
@workerooo7-j5j5 ай бұрын
இந்த அளவுக்கு என்ஆண்டவர் இயேசு விடமாட்டார் என்று விசுவாசித்து வாழ்வதே சிறப்பு சந்தோசதை இழக்கவழி இல்லை.
@gopalb76323 жыл бұрын
முதுமையை பற்றி எளிதாக புரியும் வகையில் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல. தங்களை குருவாக எண்ணி என் மனதில் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
@swamybgm5133 жыл бұрын
சறறு நேரம் 23 நிமிடங்கள் நடந்துகொண்டிருப்பதை மற்றமொரு முறை படம் video பாரத்து அனுபவத்தேன். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிங்க. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@thillainatarajans5665 ай бұрын
நல்லதொரு அருமையான அற்புதமான யுதியோர்களுக்கும் பயனுள்ளள பதிவாகும் நன்றி அய்யா வணக்கம்
@citizennota73423 жыл бұрын
பிறப்பு நம் கையில். இல்லை. ஆனால் இறப்பு நம் கையில் ..தான் இருக்கவேண்டும்.... இந்த.உடலை விட்டு நாம் விழிப்புணர்வுடன். பிரியவேண்டும்.... அதற்கான பயிற்சியை. ..முதுமை.ஆரம்பித்தவுடன்..கற்றுக்கொள்ள..வேண்டும். .ஆனால். அது அவ்வளவு எளிதல்ல... முதுமையின் .துயரங்களை பட்டினத்தார் பாடியதை. துயரத்தை உணர்த்தும். வகையில்...சுகிசிவம்..பேசினார்.... ...
ஐயா அவர்களே உங்களலுடைய பேச்சி ஒன்று விடாமல் நான் கேட்பேன் அனைத்தும் உண்மையில் வாழ்கைக்கு உகந்தது ஆனால் இந்த வுரை என்னை மிகவும் கவர்ந்தது நன்றாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா அவர்களே வணக்கம் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்
@satheeshkumar29975 ай бұрын
அருமை அருமை ஐயா ! எல்லோருக்கும் பட்டினத்தாரின் பாடல் அர்த்தம் புரிந்து விட்டால் வயதானவர்களிடம் அன்போடு இருக்கலாம்
@kboologam42793 жыл бұрын
உண்மையான முதுமைசம்பவத்தை உணர்த்திய பட்டினத்தாரின் பாடல்வரி உரைநடையுடன் நன்றி நன்றி
@selvaprithi43363 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் 🙏🙏🙏
@saralamanjoojayakumar26635 ай бұрын
அருமையான அவசியமான பதிவு❤ முதுமையும் இறப்பும் எல்லோருக்கும் பொதுவானது.. அதனால்தான் இளமையும் அழகும் வலிமையும் இருக்கும்போது ஆடக்கூடாது அகங்காரத்தில்.. என்பதை மிக மிக அழகாக அறிவுறுத்தினீர்கள் ஐயா 🎉🎉🎉
@கிருஷ்ணாசெல்லம்3 жыл бұрын
பெருமதிப்பிற்குறிய ஐயா ! வணக்கம் ! நான் ஒரு சிவ பக்தன் ! தங்களின் கிரிவல மகிமை ! பிரதோஷம் ! ஆகிய சொற்பொழிவுகளைக் கண்டு மயங்கியவன் ! தாங்கள் தங்களின் சொற்பொழிவில் தேவையேயில்லாமல் ஆங்கில சொற்களை பயன்படுதுவதை ! என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! இது என் தாழ்மையான வேண்டுகோள் ! அமிழ்தம் போன்ற தமிழ்மொழியில் சொற்பொழிவாற்றும் போது தேவையற்ற ஆங்கில சொற்களை தவிர்க்கவும் ! இது ஒரு தமிழ்பித்தனின் தாழ்மையான வேண்டுகோள் ! சொல் வேந்தர் திரு . சுகி சிவம் ! தமிழ் அறிவுக் கடல் திரு . நெலல்லை கண்ணன் அவர்கள் ! தமிழருவி திரூ . மணியன் அவர்களை தமிழ் இனத்தின் ! புதையல்களாக கருதுபவன் ! நான் ! நீ யார் என்று நீங்கள் கேட்கலாம் ! நான் ! உலகை ஆள போகும் அழிவற்ற தலைவனின் ! நண்பன் ! நன்றி ! வணக்கம் !
@subramaniyans34413 жыл бұрын
வாழ்கின்ற காலத்தில் சுய நலமின்றி வாழ்வோருக்கு இறைவனிடமிருந்து நற்பேறு கிடைக்கும்.
@umarsingh43303 жыл бұрын
நமஸ்காரம் குரு , மிக மிக மிக அவசியம் அருமை பேச்சு, நன்றி
@anuradhathanigainayagam33762 жыл бұрын
That is why parents go to senior active living in their fifties and sixties.
@anuradhathanigainayagam33762 жыл бұрын
Very true sir.
@padmavathyselvarajan64423 жыл бұрын
இந்தப் பாடலின் விளக்கம் நாம் முதுமையில் எப்படி இருக்க வேண்டும். முதியோர்களிடம் இளையோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக அமைந்திருந்தது. மேலும் முதுமையில் நமது உடல்நலத்தை பேணுவது எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றது. பெரிதும் நன்றி ஐயா.
@syedmohamad5133 жыл бұрын
நன்றிகள் பல ஐயா கேட்டு ஒரு கணம் ஆடிப்போயிட்டேன். எவ்வளவு வலிமையான உண்மையான ஆழமான எல்லோரும் கடந்து செல்ல வேண்டிய கருத்துப்பாடங்கள்.
@jayapalkrishnamoorthy80073 жыл бұрын
God will give ways and means for all our problems
@expee38343 жыл бұрын
அய்யா, நான் முதுமையைப்பற்றிய அனுபவங்களைத் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு இப்படிப்பட்ட இலக்கிய வரலாறு இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ....மிகவும் பயனுள்ள பதிவு....மிக நன்றி PASUNGILI நாகர்கோவில்
@s.niranjana75583 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் சத்தியமான உண்மை🙏 நிறைய எங்கள் வீடுகளில் பார்த்துவிட்டேன் யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் மிகவும் நன்றி பார்காதவரர்களுக்கும் தெரியாதவர்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் பின்பற்றினால் நலம்
@kalinjarpiryanthoufeek90152 жыл бұрын
அருமை அருமை சிரிப்புடன் சிந்தனை என்னசெயவது மனித வாழ்வே மாயமானது
@venkatesanv38182 жыл бұрын
Tears r coming. This is world. Good speech. Arumai. Arumai.
@kariyaperumalm52309 ай бұрын
அருமையான பாடல். அற்புதமான சொற்பொழிவு. முதுமையின் கொடுமையை, இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது.🙏🙏
@chitrakandhasamy57783 жыл бұрын
எதையும் ஏற்று கொள்ளும் தன்மை உங்கள் உரையை கேட்ட பிறகு பதமை வருகிறது
@vanniyasingamsingam69513 жыл бұрын
M
@Kesavan.1965 Жыл бұрын
Correct 🙏
@vimalaraju53703 жыл бұрын
I feel tears in my eyes.🙏🙏🙏 Thanks sir
@s.s.k_indian__tn3 жыл бұрын
என் parents, தாத்தா, பாட்டி, க்கு நாம் செய்தோம், இனிவரும் காலத்தில் வாலிபருக்கு வேலையும் இல்ல, சொந்த வீடும் இல்ல, பிள்ளைகள்படிப்பும் போச்சு எங்கள் வயோதிகத்தை நினைத்தால் பயமா இருக்கு , எனக்காக , நிறம் குலைந்து , மனம் வருந்தி உழைத்து காப்பாற்றிய முன்னோர்களே என் தெய்வ வடிவான தெய்வம்
@radhamukundan5753 жыл бұрын
Tears,true we aged people experiencing now it self
@ekambarama52143 жыл бұрын
உளமார்ந்த நன்றி .முதுநிலை பருவம் மிகவும் வருத்தத்திற்கு
@ekambarama52143 жыл бұрын
உரியது உண்மையானது.முதுமையை சமாளிக்க மனப்பகுவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்கிற உண்மையை அறிந்து கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி.
@jawaharbabu123 Жыл бұрын
Mudumai .kodumai..Unmai Arumai..gurujee...
@krishmurthy9452 жыл бұрын
பட்டினத்தார் பாடல் மூலம் எங்கள் அப்பாவின் மூலம் நான் பார்த்து தெரிந்து கொண்டேன் ஐயாவின் விளக்கம் அனைத்தும் உண்மை.
@dhanasathish27813 жыл бұрын
பட்டினித்தார் பாடல் மிகவும் அருமை உண்மை நிலை இதுதான் சிவாயநம
@ArunachalamT-q5e Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் இந்தியாவின் சொத்து நீங்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வழிப்படுகிறன். தாங்கள் ஒரு பல்கலைக்கழகம் தமிழகத்தின் பல்கலைக்கழகளுக்கு வேந்தராகிய எதிர் கால சந்ததிகளை காப்பாற்றுங்கள். அனைத்து தகுதிகள் தங்களுக்கு உண்டு. நிச்சயம் உயர் பதவியான துணைவேந்தர் பதவி வரும். 👍⭐
@sarojamaniamsivasankar44903 жыл бұрын
முதுமையிலும் மனபக்குவம் வர வேண்டும் கட்டுப்பாடு வர வேண்டும் என்பது வாழ்வியல் உண்மை என்பதை செப்பிய ஆசானுக்கு நன்றி ஐயா👌🙏🙏🙏
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@mariyappanu Жыл бұрын
அது 0000
@subbulakshmitn3 жыл бұрын
நல்ல நினைவு இருக்கும் போதே இறைவன் திருவடி சேர்ந்து விடவேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா இறைவன் அருள் தரட்டும் ஐயா
@anwarbabu60223 жыл бұрын
மரணம் என்பது நிச்சயம் என்றாலும் மரணத்தின் அருமை முதுமை போதித்ததில் எங்கோ ஓர் வலி எனக்குள் எழுந்தது அய்யா
@anbedheivam16083 жыл бұрын
உண்மைஅய்யாஎன் கணவருக்கு கடைசி காலத்தில் பாட்டு நடந்தது
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
முதுமை மனமே பொறுமை தொந்தரவு செய்ய விரைவாய் இறைவா உம்மை அடைய அருள்வாய் நன்றி ஐயா
@govindasamyraju39139 ай бұрын
உங்கள் அருமையான. விளக்கம். நன்றி.
@safedrivesaveslife34203 жыл бұрын
மனது வலிக்கிறது ஐயா , நிதர்சனம் தான் , இந்தவித இம்சைகளில்லா நல்ல சாவு அனைவருக்கும் வாய்க்க எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்யவேண்டும்
@samyuthaavinoth32042 жыл бұрын
முதுமையின் துயரத்தை உணர்த்திய ஐயா அவர்களுக்கு நன்றி. 💐 வாழ்க வளமுடன் 💐
@anandana891 Жыл бұрын
Naanri
@jegathashargunam7254 Жыл бұрын
❤
@punniyamoorthy34832 жыл бұрын
மிகவும் அருமையான கருத்து. முதியவர்கள் தெரிந்துககொள்ளவேண்டிது.
@sssgs81903 жыл бұрын
பட்டினத்தார். பாட்டில்முதுமைக்கு. இவ்வளவு அர்த்தமா. பயமும் வருகிறது. இவ்வளவு அழகா. பாட்டின். பொருளை விளக்கிசொன்னதர்க்கு. ஐயாவுக்கு. நன்றி..
@velur62293 жыл бұрын
நன்றி ஐயா, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
@aroumougamesp38026 ай бұрын
நன்றி நல்லசொற்பொழிவுவணக்கம் ஐயா
@parthibanr14312 жыл бұрын
சிவமே அன்பு அன்பே சிவம் ஓம் நமசிவாய🙏🙏🙏
@jawaharbabu123 Жыл бұрын
It is one of the best eye opening speech of yours.....gurujee
@sumangalithirukumar4601 Жыл бұрын
சிறப்பு ஐயா நன்றி வாழ்க வளமுடன்.
@deepamercy2223 жыл бұрын
ஐயா எனக்கு சிரிப்பும் வருகிறது அழுகையும் வருகிறது பக்குவமான உங்கள் உரைக்கு மிக்க நன்றி
@premav26773 жыл бұрын
Your explanation about old age is remarkable. I always like your speech. Thank you Sir
@velusamyangamuthu33536 ай бұрын
I understand the Old age life struggle by the pattinathar poem , explained by Sri Suki Sivam Sir.Thank you.
@p.masilamani70843 жыл бұрын
Excellent. Every one knows the problems to be faced in old age but very few realises before entering into that phase of life.
@ramalakshmichellappah562 жыл бұрын
my mother And father neenga soliya mathire nadathathu true'measges Amazing Ayya 💐🙏 Valthugal God blessings all 🙏 ln.dr.Ramalakshmi
@senthamarair83393 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏 அறுபது வயது வந்து விட்டது என் மனதை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு ஆழ்ந்த கருத்துகளை கொண்ட நமது "கிரந்தங்கள்,," உள்ள நம் தமிழ் நாட்டில் ,,கடந்த ஓரிரு மாதங்களாக ஏப்பிரல் 6 ..வரை... கேட்ட கூகுரல்களை பார்த்தால் ...எத்தனை கிரந்தங் கள் இருந்து என்ன பயன்...?? என்று தோன்றுகிறது... நல்ல மனங்கள் நாளும் வளர்க...வாழ்க.உங்கள் எண்ணம்போ ல்..🙏
@kumaravelthirugnanam2873 жыл бұрын
பட்டினத்தார் பாடல்களை புரியவைத்து முதுமையை எதிர்கொள்ள பாடம் எடுத்தமைக்கு மிக மிக நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.🙏.
@p.n.suresh41253 жыл бұрын
⁶⅚5⁶⁶⅚6
@p.n.suresh41253 жыл бұрын
0
@TamilSelvi-rr7bc3 жыл бұрын
Senthamizhan speech Latest
@rajiiraji23573 жыл бұрын
@@p.n.suresh4125 . M
@thilagavathithiyagarajan4877 Жыл бұрын
Eye opener. இந்த தங்கமான அறிவுரையை நமக்குஆழ்மனதில் இப்போதே பதிய வைத்து முதுமையை இனிமையாக்க இவரை போன்று யார கிடைப்பார்கள்? நீங்கள் என்றும்இளமையுடன் வாழ வேண்டும் அய்யா❤❤❤
@viswanathanm7302 жыл бұрын
அருமையான விளக்கம் 👌🏻🙏🏻
@balasubramanian3422 Жыл бұрын
அற்புதம் அபாரம்...
@Kaviminnalrpsamy Жыл бұрын
அருமையான விளக்கம்... சிவாயநம
@devishankar49893 жыл бұрын
இந்தபாடல் விளக்கம் பேசியவிதம் அனைத்தும் அருமை அண்ணா. இப்ப நீங்கள் சொல்லிய நிலையில்தான் என்தாய் இருக்கின்றார்கள். மனம் மிகவும் வலிக்கிறது. இது நாளைநமக்கும்தான்.
அம்மம்மா என்ன தெளிவான பதிவு அய்யா. உள்ளமார்ந்த வணக்கம். நன்றி பல
@komalamadhavan80797 ай бұрын
வயசான நாம் குழந்தைகள்போல ஒரு கோபம், அவமானம் எல்லாம் விட்டு போகணம் ஒவ்வொன்றிலும் பற்று இன்றி இருக்கவேண்டும் அப்போதுதான் பற்றற்றவன் பற்றினை பற்ற மனம் விரும்பும் வேண்டியத பற்று வேண்டாததை விடு
@gunasundarik11293 жыл бұрын
உங்கள் உரையை கேட்டு அழுது விட்டேன் ஐயா
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@vasanthaselvaraj75923 ай бұрын
என் தெய்வத்தோடு சேர்ந்துவிடும் ஓம் நமச்சிவாயா
@vasudevan78142 жыл бұрын
இந்த பாடலின் வரிகளை மிகவும் தெளிவாக விளக்கமாக அழுத்தமாக சொன்னிர்கழ் நேரில் கேட்டது போல் இருந்தது மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🙏
@moorthimoorthi187 Жыл бұрын
பதி வு களில் தலையா ய பதிவு நன்றி நன்றி தேவையான விளக்கம் மிக நன்று 👌👌
@kohkalm87422 жыл бұрын
Vanakkam Aya SUKISIVAM. You are fabulus. Valga valamudan. Your advices are very beneficial for evry body. Thank you very much Aya
@thaache3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: உபய
@paalmuru95983 жыл бұрын
You tube video is Tamilnadu only... you think about it nowhere bad,okay MR.( Language is~€¥$¢√π{∆}) whichever you prefer the future.,.,
@thaache3 жыл бұрын
@@paalmuru9598 ?
@ravichandran01 Жыл бұрын
ஆம் உண்மைதான்
@learnhindi562 жыл бұрын
முதுமையை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்,,,,🙏
@mathsashok3339 Жыл бұрын
OHM SHIVAYA NAMAGHA 🙏🙏. Thank you so much Ayya 🙏🙏🙏
@Shivayanamachannel3 жыл бұрын
தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை ஐயா
@soundararajanmohan83812 жыл бұрын
முதுமையில் நடக்கப் போவதையும் நடந்ததையும் அப்படியே படமாக காட்டி உள்ளீர்கள் ஐயா பட்டினத்தார் பாடலுக்கு தெளிவான விளக்கமும் அர்த்தமும் கொடுத்து வாழ்க்கையின் இறுதிக்கட்டம் இப்படித்தான் இருக்கும் என்று தெள்ளத்தெளிவாக சொல்லி விட்டீர்கள் ஐயா மிக நன்றி மிக நன்றி அடியேன் ராமானுஜ தாசன்
@nandagopalannandagopalan7893 жыл бұрын
இந்த மாதிரி ஒரு தத்ரூபமான பாடல் கள்.கேட்கவே அருமையான பதிவு.
@sivaguru45543 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. மனிதனை நல்வழிப்படுத்தும் பதிவு. தொடர்ந்து பேசுங்கள்
@shanthichakravarthy73853 жыл бұрын
மிகவும் உபயோகமான பதிவு. இந்த மாதிரி வீடியோவைப் பார்த்தாலே யாரும் தப்பு பண்ண மாட்டாங்க..... இளமையிலேயே இந்த மாதிரி ஒரு அறிவுரைகளை கேட்டு வளர்ந்த, கண்டிப்பா உலகம் நல்லாவே இருக்கும். மனதை ரொம்ப இலக செய்யும் ஒரு பதிவு... இதைக்கேட்ட ஒவ்வொருத்தரும் கண்டிப்பா அழாமல் இருக்கவே மாட்டாங்க
@sidharth65923 жыл бұрын
Megavum arumaiyana Sorpollivu Nanri iyya
@ganesamoorthyvaithnaswamy5963 жыл бұрын
தங்கள் உபன்யாசம் பெற்றுக் கொண்டேன் மிகவும் நன்றி
@gayathriprakash64493 жыл бұрын
Excellent speech. Sir, you have done social service. You have set the ball rolling. It is a spiritual speech.🙏🙏🙏🙏🙏🙏
@revathiayyappan38473 жыл бұрын
Vazga valamudan. Arumai
@meenachilingamnadarajan94873 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா...நன்றி.
@vijayaranik2463 жыл бұрын
இது வரையில் அடியேன் உங்கள் உரையில் உறைந்து போனது இல்லை முக்காலமும் உணர வேண்டியதை உணர்வோடு ஊட்டி னீர். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா
@ayiramuthurenganathan7883 жыл бұрын
Absolutely true. We have to realise everything in life. Awesome presentation. Thank you very much sir.
@mahadevantr95773 жыл бұрын
Goppfd
@balagurunathan.m.s.tbalagu76653 жыл бұрын
ஆந்மா ரையும்டிசொல்லிவிளக்கினீர். வா ழ்த்து.க்கள்
@rajamrajam91223 жыл бұрын
A8
@kannanjayaraman96493 жыл бұрын
@@mahadevantr9577 sons
@kalesthiriusharani21449 ай бұрын
பட்டினத்தார் ஐயா வாழ்க
@ravananponnusamy84543 жыл бұрын
Arumai indru enakku naalai unakku.sivaya namaha.
@pjsivaram1561 Жыл бұрын
True words u r right person great god bless you really true words
@malathidevi8299 Жыл бұрын
சிறந்த பதிவு ஐயா உண்மை யான விளக்கம் நன்றி ஐயா
@selvarajsethu77793 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனிடம் நான் கேட்பது காலை இருந்தார் மாலை இறந்துவிட்டாரா என்று கேட்கும் படி மரணத்தை தூக்கத்திலேயே தந்துவிட வேண்டுகிறேன்