’பூச்சி கடியில் வேலை; குதிரை கொட்டகையே வீடு’ - இலங்கையில் மலையக தமிழர்களின் அடிமை வாழ்க்கை

  Рет қаралды 2,305

DW Tamil

DW Tamil

Күн бұрын

#malayagatamilargal #malayagatamils #srilankantamils #lifeofmalayagatamils #srilankateaestates #teaestateworkerslife #srilanka
இலங்கைகாக உழைத்து உழைத்தே இன்று வாழ சரியான வீடோ, முகவரியோ இன்றி மிகச் சொற்ப ஊதியம் பெற்று அடிமை வாழ்வைவிட ஒருபடி மேலே மலையக தமிழர்களின் வாழ்வியல் சூழல் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். 200 ஆண்டுகளுக்கு முன், தென் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ரப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களில் வேலைப்பார்க்க ஆங்கிலேயர்களால் அழைத்து செல்லப்பட்ட இவர்கள் பரந்து விரிந்த நிலங்களில் வேலை பார்த்தாலும், அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது ஆங்கிலேயர் காலத்தில் குதிரைகள் தங்க பயன்படுத்திய மிக குறுகிய லயன் வீடுகளில்தான்.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 20
@Forest2763
@Forest2763 9 сағат бұрын
இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இவர்களின் வாழ்க்கை தரம் உயர்வடைய வேண்டும்.முக்கியமாக வீடுகளை கட்டிகொடுக்க வேண்டும்.😊🌿🇱🇰
@rajadurai8067
@rajadurai8067 8 сағат бұрын
அந்த பெண் கூறிய ஆயிரம் ரூபாய் சாப்பிட கூட பத்தாது.இந்திய ரூபாய் மதிப்பு முன்னூறு மட்டுமே.
@z_unknown
@z_unknown 8 сағат бұрын
Thank you dw tv. Very important and underreported story the plight of these peoples who do back breaking work like slaves for the lowest pay. Very sad & politicians have let them down. Need better leadership. Hope the new govt will help them
@jayaramanp7267
@jayaramanp7267 8 сағат бұрын
கவனிப்பாரா இடதுசாரி சிந்தனை உள்ள புதிய ஜனாதிபதி அனுரா குமார திசநாயகா. இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பரிதாப நிலைமை. இன்குலாப் ஜிந்தாபாத்.
@balamurugan3052
@balamurugan3052 7 сағат бұрын
மருத்துவ வசதிக்காக போக வேண்டி வந்தாலும், 15 கிலோ மீற்றர் தூரம் நடந்து போகனும். அப்படி போயிட்டு நிறைய பேர் இறந்திருக்கிறார்கள். சரியான மருத்துவ வசதி இருந்திருந்தால், காப்பாற்ற கூடிய நிலைமையில் இருந்தவர்கள் கூட இறந்திருக்கிறார்கள். வகுப்புக்களுக்கு சரியாக போக முடியலை. ஆன்லையின் பாடம் படிக்கிறதாக இருந்தாலும், இங்க கவரேஜ் இல்ல. இப்படி நிறைய கஷ்டங்களை வைத்துதான் வாழ்ந்துட்டு இருக்கோம். வெள்ளைகாரன் காலத்துல இருந்து, அதாவது 200 வருடமாக நாங்க இப்படிதான் வாழ்ந்து வருகின்றோம். யாரும் வெளியில் போனால், எங்களை பார்த்து 'தோட்டக்காட்டன்னு' சொல்வாங்க. பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்வோர் பெரும்பாலும் மலை குன்றுகளிலேயே வாழ்ந்து வருகின்றமையினால், பலர் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறு மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளவர்கள் பல்வேறு தோட்டங்களின் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, தேயிலை கொழுந்துக்களை பறிப்போர் அட்டை கடி, சிறுத்தை தாக்குதல், குளவி கொட்டு, பாம்பு கடி என பல்வேறு அச்சுறுத்தல்களை நேரடியாக எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை செய்யும் மக்களின் வாழ்க்கை, 200 வருடங்களாகவே செழிப்பாகவில்லை என்பது கண்களினால் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவ்வாறு எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வரும் தமக்கு, இந்த 200 வருடங்களில் கிடைத்த ஒரே பெயர் தோட்டக்காட்டன்
@s.sentamilselvanselvan2123
@s.sentamilselvanselvan2123 9 сағат бұрын
மனிதன் வாழ்க்கை யே அடிமைத்தனம் இறைவன் எங்கே இருக்கிரான்
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 сағат бұрын
எங்கிருந்தோ பொழைக்க வந்த சிங்களர்கள் சொகுசாக வாழும் பொழுது நம் தமிழர்கள் நம் தமிழ் ஈழ நாட்டில் ஏன் சொகுசாக வாழ வழி செய்ய வேண்டும்
@balamurugan3052
@balamurugan3052 7 сағат бұрын
இலங்கை வாழ் மலையக மக்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, சுமார் 200 வருடங்களாகவுள்ளன. இந்த நிலையில், அவர்களின் வாழ்க்கை இன்றும் அதே நிலைமையில் இருந்து வருகிறது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெய்லர், 1867ம் ஆண்டு கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் எல்லை பகுதியான லூல்கந்துர தோட்டத்தில் முதலாவது தேயிலை செய்கையை ஆரம்பித்தார். கோப்பி உள்ளிட்ட செய்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவே, தேயிலை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான நிலையில், இலங்கைக்கு மலையக மக்கள் 1822ம் ஆண்டு மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதியில் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள், வரிசையாக அமைக்கப்பட்ட சிறிய அறைகளை கொண்ட லயின் அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். உடைந்த நிலையில், தகரங்கள் அற்ற நிலையில், சுவர்கள் இடிந்த நிலையில், இந்த லயின் அறைகள் காணப்படுகின்றன. அன்று முதல் இன்று வரை தேயிலை தொழிலை நம்பி வாழ்ந்து வரும் இந்த மலையக சமூகம், எந்தவித முன்னேற்றத்தையும் அடையாது அதே நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் மலையக பகுதிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அந்த மக்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதே உண்மை. கேகாலை மற்றும் கண்டி மாவட்டத்தின் எல்லை கிராமமான தோத்தல்ஓயா பெருந்தோட்ட பகுதியாகும். கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில், மலைத்தொடர் உச்சியில் அமைந்துள்ள தோட்டமே தோத்தல்ஓயா பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்றால், சுமார் 14 கிலோமீற்றர் தூரத்துக்கு மாணவர்கள் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாளொன்றிற்கு சுமார் 28-க்கும் அதிகமான கிலோமீற்றர் இந்த மாணவர்கள் நடந்து சென்று வருவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நாளொன்றிற்கு 22 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறித்தால் மாத்திரமே 1000 ரூபா என்ற தினக்கூலி கிடைக்கும் என கூறுகின்ற அந்த பிரதேச மக்கள், அதை விட குறைவாக தேயிலை பறிக்கப்படும் பட்சத்தில் கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபா வழங்கப்படும் என குறிப்பிடுகின்றனர். ''4 மணி வரை பறிக்கனும். 22 கிலோகிராம் பறித்தால் 1000 ரூபா கிடைக்கும். அதற்கு குறைவாக எடுத்தால், ஒரு கிலோவிற்கு 40 ரூபா கணக்கில் கொடுப்பார்கள். கடந்த மாதங்களில் கிலோவுக்கான சம்பளத்தையே பெற்றோம். முழு நாள் சம்பளத்தை பெறவில்லை. இல்லையென்றால், அரை பெயர் (அரை நாள் சம்பளம்) ஆக 500 ரூபா கொடுப்பார்கள்" என மைதிலி தெரிவிக்கின்றார்.
@sriram-zt2tb
@sriram-zt2tb 8 сағат бұрын
srilanka🇱🇰 1000 = 282.94🇮🇳 India Today (30/09/2024)
@Slayer123-g6v
@Slayer123-g6v 5 сағат бұрын
I think salary for them is 1700LKR
@Slayer123-g6v
@Slayer123-g6v 5 сағат бұрын
Tamils who already 2 nd class citizens in srilnka athum Indian tamils athukkum kizhe. INDIAVIL 7 varsham thamsichaal legal ah yu can get citizenship with all urima which local INDIAN used to get 🙏
@hemadheeksha
@hemadheeksha 8 сағат бұрын
😢
@vetrivels4815
@vetrivels4815 9 сағат бұрын
😢
@bhuvaneshkumar4518
@bhuvaneshkumar4518 9 сағат бұрын
👍
@venkatachalamc5344
@venkatachalamc5344 5 сағат бұрын
Their life spoilers are then British rulers
@maheswarand6091
@maheswarand6091 4 сағат бұрын
😢
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 4 сағат бұрын
👏👏
@alexx2836
@alexx2836 8 сағат бұрын
ஊடகங்கள் நீங்கள் என்னத்தை வேணும் என்றாலும் காட்டலாம் என்று நினைக்கக் கூடாது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையசெய்யக்கூடாது இது ஒரு சாதி நடவடிக்கையாகவே பார்க்கப்படும்
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Sadhguru makes a foreign anchor speechless | Best reply
11:00
Varun Sharma
Рет қаралды 2,9 МЛН