பட்டினத்தார் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த வெவ்வேறு நபர்களே. கிபி 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதினோறாம் திருமுறைப் பட்டினத்தார் ஒருவர். 14ம் நூற்றாண்டில் சித்தர்களில் ஒருவராக கருதப்படும் , மனித வாழ்வின் நிலையாமையை பற்றி பாடல்கள் பலப் பாடிய பட்டினத்தார் ஒருவர். பிற்காலத்தில் பட்டினத்தார் என்னும் பெயரில் பலப்பாடல்கள் எழுதப்பட்டன எனினும் இவரே என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாத காரணத்தால் மூன்றாம் பட்டினத்தார் என்று பெயரளவில் தொகுக்கப்பட்டவர் ஒருவர். “பட்டினத்தார்” என்ற பெயர் பொதுவானதே. இதை பட்டினத்தார் மொழியிலேயே சொல்வதானால், பேய் போல் திரிந்து, பிணம் போல் கிடந்து, இடப்பட்ட பிச்சையை அதன் பெருமை சிறுமை நோக்காது கிடைத்த இடதிலேயே நாய்ப்போல் தின்று, யாவரையும் உறவினர் என்றே கருதி அனைவரிடமும் தாழ்மையோடு நடந்து கொண்ட உண்மை ஞானியே பட்டினத்தார் என்பதே உண்மை. 🙏💫 இந்த கானொளிக்கு எனக்கு உதவிய புத்தகங்கள் பட்டினத்தடிகளின் அற்புத வரலாறு- வானொலி ஜெயம்கொண்டான் பட்டினத்தார் ஒரு பார்வை- பழ கருப்பையா. படித்து பயனுறவும் 🙏
@mirfaboy46926 ай бұрын
😊
@mirfaboy46926 ай бұрын
😊😮😮😮😮😮😮😮😊😊
@gideonraj14734 ай бұрын
❤❤❤❤❤❤
@silabarasan.g70574 ай бұрын
Ohhh jayakondam❤
@mahenthiranmagi4044 ай бұрын
நாட்டு கொட்டை செட்டியார் சமூகத்தில் பிறந்த பட்டினத்தார் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் என்றது போல கண்ணதாசன் எழுதி இருப்பார்
@arumagamjayakgf55205 ай бұрын
சின்ன வயது தங்கமயில் இவ்வளவு சிறப்பாக ஞானிகளை பற்றி தெளிவாக பேசியது கேட்டு மயில் மேல் மதிப்பு கூடுகிறது. சந்தோஷம்
@mahavishnu9352Ай бұрын
மகிழ்ச்சி. ஒரு பெண் பட்டினத்தார் பற்றி விவரித்து கேட்பது வித்தியாசமாக இருக்கிறது. சிற்றம்பலமும் சிவமும்அருகிருக்க வெற்றம்பலம் தேடி இருந்து விட்டோமே நித்தம் பிறந்த இடம் தேடுதே பேதை மடநெஞ்சம் கறந்த இடம் நாடுதே கண். இந்த பாடலையும் விவரித்து இருக்கலாம். மெய்ஞான தேடலின் திறவுகோல் இந்த பாடல்தான்
@angavairani5386 ай бұрын
அழகான தமிழில் தெளிவாக தமிழை உச்சரித்து பட்டினத்தார் பற்றி கூறிய விதம் அழகுடா சரண்யா வாழ்த்துக்கள் செல்லம்.வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
@rajavelud98406 ай бұрын
Best ma Saravanan God blessu
@jayabalmunuswamy86874 ай бұрын
மிகவும் அருமை...!சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
@vsubramanianmanian88892 ай бұрын
மிகவும் அருமை. என் சகோதரிக்கு எனது மனப்பூர்வமான வந்தனங்கள்.
@sabapathyramasamy21146 ай бұрын
பார்த்தால் நடிகைபோல் அழகாக இருந்து கொண்டு பேட்சுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையேமா .அருமை.
@madhu6196 ай бұрын
உண்மையாவே திரைப்பட நடிகை தான்
@alieanaliean55656 ай бұрын
எவ்வளவு தெளிவாக "நிலையாமை" மாயை பற்றி விலகியும் உங்கள் மனம் அழகைதான் பார்த்தீர்கள்😢😢😢😢😢
@jothilakshmi42036 ай бұрын
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை
@sundararajann60076 ай бұрын
அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தார் அதன் பிறகு தொலைகாட்சி தொடர்களில் நடித்தார்.
@josephruben47436 ай бұрын
சின்னத்திரைக்கலைஞர்தான்
@nathank.p.34836 ай бұрын
அருமை சரண்யா. நீ பேசிய தமிழ் என்ன அழகு நம் மொழிக்கு பெருமை சேர்த்ததற்க்கு முதல் நன்றியம்மா உனக்கு.உன்னை பார்த்தவுடனே சின்ன சந்தேகம்.திரையில் பார்ததாக நினைவு.அது சரியா என தெரியவில்லை. பட்டினத்தாரின் வரலாற்றை படித்து ஆராய்ந்து தெரிந்து மக்களுக்கு சொல்ல நினைத்தற்க்கே மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
@revathiv60786 ай бұрын
Vijay tv -Pandian stores serial
@user-gb5mu4ei7q4 ай бұрын
சின்னத் திரை நடிகை. நடிகையருள் மாணிக்கம்.
@paramasivamparamasivam30603 ай бұрын
வணக்கம் அம்மா இந்த காலத்தில் இவ்வளவு ஆர்வத்துடன் செய்யும் இந்த பதிவு எம்மை போல ஏராளமான அன்பர்கள் விரும்பும் பதிவு மிகவும் நன்று நன்றி ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉
@palpandi40456 ай бұрын
அருமையான பதிவு சகோதரி பட்டிணத்தார் கேள்விபட்டுள்ளேன் ஆனால் படித்ததில்லை உங்கள் மூலமாக பட்டிணத்தாரை அறிந்தது மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி
@IlikeUniverse6 ай бұрын
❤
@jeyakumar80286 ай бұрын
தங்கையே.. பட்டினத்தார் எனும் பெயர் மட்டுமே இதுவரை தெரியும் இன்று தான் அவரை பற்றி முழு விபரங்களும் அறிந்து கொண்டேன்.பாராட்டுக்கள் நன்றி சிறப்பு
@sensumithalic6 ай бұрын
அருமை சரண்யா தமிழ் விளையாடுது பிழையில்லாமல் வார்த்தை உட்சரிப்பு மிக அருமை வாழ்த்துகள்
@தமிழன்னை-ல2ல5 ай бұрын
ஐயா எத்தனை இடங்களில் ஆங்கிலம் வருவதைத் தாங்கள் கவனியுங்கள் ஐயா
@iamnastyguy5 ай бұрын
@@தமிழன்னை-ல2லiyo paavam ... ungal arivu ...
@ganeshpgan3 ай бұрын
நல்லதை நோக்கு நண்பரே.
@thirunavukkarasutheerthagi57926 ай бұрын
PS2 சரண்யாவா இது! மிக அருமையான விளக்கம், விவேகம் கூடிய வேகமான பதிவு. இன்னமும் சிறிது நிறுத்தி பேசினால், கருத்துக்களை உள்வாங்க உதவும். நன்றி. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கி இறை பணி செய்ய அருள வேண்டும்.🙏🙏🙏
@MKarthikeyan-u5l2 ай бұрын
அற்புதமான விளக்கவுரை. கணீர் குரல் வளம். தடங்கலில்லா பேச்சு. தெளிவான சிந்தனை. இந்த 32 வயதில் இவ்வளவு ஞானமா? அற்புதம். வாழ்த்துக்கள்.
@perumalsrinivasan44276 ай бұрын
பட்டினத்தார் மற்றும் அவருடைய சிஷ்யன் பத்ரகிரியார் இவருடைய பாடல்கள் எதுகை, மோனையுடன் மிகவும் அருமையாக இருக்கும் ஒரு மணி நேர பாடல் கேட்க கேட்க தன்னை அறியாமலே ஒரு ஆன்மீக போதை ஏறி மெய்மறந்து சிவன் எனது நெற்றி புருவமத்தியில் நடனமாடுவதை உணர்ந்தேன்.
@firefly55475 ай бұрын
எங்கு கிடைக்கும் அந்த பாடல்கள் ?
@kmcram6970Ай бұрын
மிக்க நன்றி🌹🌹🌹
@unmayijyothidam4 ай бұрын
ஒரே சீரான வேகத்தில் சிறிதும் பிசிறில்லாத இனிமையான பேச்சால் பட்டினத்தார் பற்றிய பரவசமூட்டும் தகவல்களைத் தந்த தங்க மயிலே ! பொங்கும் உற்சாகமுடன் சங்க மரபில் தமிழில் தந்த சொற்பொழிவு கேட்டு அகமகிழ்வு அடைந்தேன் மகளே! வாழிய நின் தமிழாற்றல்!! தமிழ் போல் புகழோடு வாழ்க!!!
@CVeAadhithya2 ай бұрын
மிக அருமை.... பட்டினத்தார் பற்றி சிறியதாய் படித்ததோடு சரி... மிக அருமையாக ஸ்கூல் டீச்சர் போன்று சொன்னீர்கள். நன்றிகள் பல... வாழ்க வளமுடன் ...
@Sun_of_ravanan_JK6 ай бұрын
ஐயோ! அருமையான விளக்கம், அருமையான மொழிநடை கதையை கட்டங்கட்டமாக கொண்டுசெல்லும் விதமும் அருமை. பட்டினத்தாரின் கதையை இவ்வளவு சுருக்கமாகவும் விளக்கமாகவும் இதுவரை யாரும் கூறியிருக்கமாட்டார்கள் சலிப்பின்றி தொடர்ச்சியாக பார்க கேட்ட முடிந்தது. அருமை நன்றி
@karunasivam31846 ай бұрын
சிவாய நம பட்டினத்தார் திருவடிகள் போற்றி போற்றி
@dineshkumar-jz1lkАй бұрын
உங்களின் ஆன்மீக தேடலும் தமிழார்வமும் மிகவும் வியப்பாக உள்ளது அக்கா, உங்களால் பட்டினத்தாரை படிக்க நானும் ஆர்வம் கொண்டேன். நன்றி அக்கா🎉
@sundaralingam76093 күн бұрын
ஆண் பெண் என்ற நிலையில் ஞானம் பெற்ற மனிதர்கள் ஒரு சில பேர் அது போல சிறு வயதில் அருமையான சிந்தனை பதிவு
@kannarao63946 ай бұрын
அருமையான பதிவு பட்டினத்தார் பற்றிய புரிதலை சாதாரண மக்களும் புரியும் படியாக விளக்கி உள்ளீர்கள் அருமையான பதிவு நன்றி
@muktimahendranАй бұрын
எப்போதும் பட்டினத்தார் பாடல்கள் பிடிக்கும். தாயை பற்றிய பாடல்களும் மிகச்சிறந்த பாடல்கள். அதை மீண்டும் கேட்க்கப்போகிறேன். நன்றி சகோதரி.
@Anbudanselvan6 ай бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை எதேர்ச்சையாக என் கண்ணில் பட்டது இந்தக்காணொளி மற்றவர்களைப்போலவே நீங்க தமிழை வேற்றுமொழி கலந்து பேசுவீங்க என்று நினைத்தேன் ஆனால் நான் நினைத்தது தப்பு தப்பு. சில சொற்கள் காணமுடிகிறது . அதையும் தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் நன்று ரொம்ப நன்றி சகோதரி
@manjuladevi36392 ай бұрын
சூப்பர் சரண்யா அருமையான நடை தெளிவான உச்சரிப்பு வாழ்க வளமுடன்
@HealingHarmonica2 ай бұрын
அருமை நன்மணியே! தெளிவான உரை! நல்ல ஆய்வு! KZbin இல் நல்ல விஷயங்களை பகிரும் உங்கள் சேவை இனிதே தொடர வாழ்த்துகள்🎉
@v.kaviyashreevenkatesh278916 күн бұрын
அருமை சிறப்பாக உள்ளது உங்களுடைய விளக்கம் மற்றும் குரல்
@swaminathansubrahmanyam47456 ай бұрын
எவ்வளவு ஆழமாகப்புரிந்து கொண்டுள்ளீர்கள். என்ன வேகம். இளம் வயதில் அழகான பேச்சு..
@palanysubramaniam34035 ай бұрын
மேடம் நீங்க கொஞ்ச வயதுக்காரர், நல்லா தமிழ் உச்சரிப்பு மற்றும் தெளிவா பேசுறீங்க. பட்டினத்தாரை பற்றிய இந்த பதிவு ரொம்பவும் சிறப்பு. பட்டினத்தார் பற்றி இவ்ளோ விசயம் இருக்கா ? தமிழ்மொழி , இலக்கியம் பற்றி பெருமையையா இருக்கு. நீங்க நல்ல இருக்கணும்.வாழ்த்துக்கள்
@ManicMd5 ай бұрын
சரண்யா, நீங்கள் வாசித்த பட்டினத்தார் தொகுப்புகள் அத்துனையும் மெய் சிலிர்க்கும் அனுபவமாக அமைந்தது. வாழ்த்துக்கள். மேலும் தொகுப்புகளை இருமுறை வாசித்து விளக்கம் கூறினால் கூடுதல் சிறப்பாக அமையும். நன்றி...
@kannan_kaanaa_kanaa6 ай бұрын
மிக மிக அருமை. உங்கள் கதை சொல்லும் திறன் காணொளியை முழுமையாக பார்க்க வைத்தது. இதே போல் நிறைய எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!
@g.s.karthikeyan3668Ай бұрын
திரு.சரண்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது
@Karthickmasanmasan23 күн бұрын
Wonderful Compilation, keep growing your Spiritual narration work !!!
@DNRP-d6r6 ай бұрын
நீங்கள் யார், என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் மனித வாழ்க்கைக்கு தெளிவைக் கொடுக்கும் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறீர்கள். அத்துடன் தமிழை எப்படி தெளிவாகவும் அழகாகவும் உச்சரிக்க வேண்டுமோ அப்படி பேசுகிறீர்கள். நற்பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். (Just subscribed to your channel)
@sabari_eesan10 күн бұрын
இவங்க விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டார் நாடக தொடரில் நடிக்கிறார் பாருங்க..
உங்களுடைய முதல் பேச்சை இன்றுதான் கேட்க வாய்த்தது.அருமை.நன்றி மா.
@kanthansamy77366 ай бұрын
உங்கள் பணி மிகவும் சிறப்பானது❤நாம் தமிழர்❤
@tigeragri53556 ай бұрын
பட்டினத்தாரின் சகோதரி அப்போது ஆண்ட சோழமன்னரிடம் சென்று தன் சகோதரனின் துறவறத்தை கைவிடும்படி அறிவுறுத்த வேண்ட அதற்கு ஏற்ப மன்னரும் வந்து பட்டினத்தார் முன்பு நின்றுகொண்டு பட்டினத்தாரிடம் ஏனிந்த கோலம் என வினவ அதற்கு பட்டினத்தார் நீ நிற்க யான் அமர என்று நெற்றிபொட்டில் அடித்தாற்போல் துறவறத்தின் மேன்மையை எடுத்துரைத்தது போன்ற சுவாரஸ்யங்களையும் சேர்த்திருந்தால் கூடுதல் சிறப்பாயிருந்திருக்கும் சரண்யா கரடி
@tvinayagamoorthy4 ай бұрын
சகோதரிக்கு நன்றி
@vigneshwarank78786 ай бұрын
அருமையான பதிவு... தமிழின் இனிமையையும் பொருட்ச் சுவையும்... .கண்டேன்.. கேட்டேன்..
@rajendrand83136 ай бұрын
அழகானதமிழில் அருமையான சொற்பொழிவு.தமிழ்மகளுக்கு எனதுமனமார்ந்த பாராட்டுகள்.பணிவான எனதுகருத்து ஒன்று....பட்டினத்தார் ஒருவர்தான்.இருவர் அல்லர்.சரியாக ஆராய்ந்து பார்த்தீர்கள்என்றால். ஆதாரங்கள் கிடைக்கும்.பதினோராம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்தார். நன்றி.
@gnanambigaimaheshbabu6993Ай бұрын
மிகவும அருமையான பதிவு.
@thumuku998623 күн бұрын
நன்றி ..நன்றி.. நன்றி.....
@kanank136 ай бұрын
Thanks!
@Ajaykrishna97_6 ай бұрын
25 dollers ha 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@ravichandran16956 ай бұрын
ஆகா.. அற்புதம்.. தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.. தொடரட்டும் உங்கள் பணி..
@aarthigopi6 ай бұрын
Thanks!
@vij3276 ай бұрын
வாரணாசி காணொளிலிருந்து உங்களை பின்தொடர்கிறேன்... 🔥அருமை உங்கள் பொதுநலம் அருமை 🔥
@vasukiramachandran44315 ай бұрын
This is the first time I am watching your video. பட்டினத்தார் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து அதனை அழகிய தமிழில் மிகச்சிறப்பாகவும் கோர்வையாகவும், அதே சமயத்தில் சுருக்கமாகவும் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி! All the best for such videos in future ❤
@priyasugathan78746 ай бұрын
Great knowledge, thankyou for the excellent explanation, I love Tamil being a malayalee, I missed studying it after my 12th standard and very happy to hear this
@selvakumarmuthusamy66445 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு. அதிகம் ஆங்கிலம் கலக்காத தமிழ் உச்சரிப்பு. பட்டினத்தார் தன வணிகர் மரபில் தோன்றியவர். இன்று நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிவகங்கை பகுதிக்கு வரும் முன்னர் காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகாரில் வாழ்ந்தபோது அந்த இனத்தில் தோன்றியவர் பட்டினத்தார். மேலும் அவருடைய முற்பிறவி குறித்து கூறப்படுவது என்னவெனில், சிவபெருமானும் குபேரனும் கயிலையில் இருந்து திருவெண்காடு செல்லும் வழியில் பூம்புகாரில் வசிக்கும் தன வணிகர்களின் செல்வ செழிப்பை பார்த்து குபேரன் மன சஞ்சலம் கொண்டதால், சிவபெருமான் அவருடைய எண்ணத்தை அறிந்து நீயே அக்குலத்தில் பிறந்து செல்வ வளத்தை ஆண்டு மனித வாழ்வை உணர்ந்து திரும்புவாயாக என வரம் தருகிறார். எனவே குபேரனே திருவெண்காடாராக பிறக்கிறார். ஒரு காலகட்டத்தில் அவருக்கு முக்தி நிலையை உணர்த்த சிவனே வளர்ப்பு மகனாக வந்து ' காது அறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கு' என்ற சொற்றொடரின் மூலம் பூவுலகின் நிலையாமையை உணர வைக்கிறார். அவரும் துறவின் ஆரம்ப நிலையில் திருவோடு ஏந்தி தான் பிச்சை எடுக்கிறார். ஒருநாள் அவருடைய வீட்டின் முன் பிச்சை கேட்டு நிற்கும்போது, எல்லாம் துறந்தவனுக்கு இந்த திருவோடு எதற்கு என பட்டினத்தாரின் தாயார் கேட்க, அப்பொழுதே தன்னிடமிருந்த திருவோட்டை உடைத்து விட்டு, கையில் பிச்சை வாங்கி உண்கிறார். அத்துடன் துறவிகள் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் வகுத்த பாடலான பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து என்ற பாடலையும் பாடுகிறார். இதனுடைய தாக்கம் பின் பத்திரகிரியார் சம்பவத்தில் எதிரொலிக்கிறது. இன்றும் ஒவ்வொரு வருடமும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ( சரியான மாதம் தெரியவில்லை) பூம்புகாரில் கூடி பட்டினத்தார் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். பட்டினத்தாரை முழுதாக புரிந்து படித்தவர்களுக்கு ஞானம் தானே வந்து விடும். எல்லோரும் படிக்க வேண்டியவை அவரின் பாடல்கள்
@s.umaselvakumar4285 ай бұрын
Yes u r correct
@rajeshwaris63086 ай бұрын
அருமை சரண்யா, பட்டினத்தார் பற்றி விளக்கமாக கேள்விப்பட்டது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது , இத்தனை பட்டினத்தாரா? இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். அடுத்து நீ பேசிய வீடியோக்கள் அத்தனையும் பார்க்க போகிறேன் 🌹
அம்மா, காலம் இன்னும் கெட்டுப் போகவில்லை என்ற நம்பிக்கை உனது பதிவினால் ஏற்பட்டு விட்டது. நிம்மதியினால் நன்றியாக எனது கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்து ஓடுகிறது. நீ வாழ்க எல்லா வளத்துடனும்.
@manickam2787Ай бұрын
அறுமையான பட்டினத்தார் பற்றிய வாழ்க்கை வரலாறு விளக்கம் தந்தீர்கள்...மேலும் அனுபவம் பெற வாழ்த்துக்கள்..
@kalasaravanan19986 ай бұрын
நன்றாக இருக்கிறது.ஆனாலும் விரிவு மிகவும் சுவையாகவும் ஆன்மீக தத்துவங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.❤
@filestoragesakthi30046 ай бұрын
அம்மா சிறப்பு அருமையான விளக்கங்கள், ஒரு சிறு விண்ணப்பம் சித்தர்கள் குரு வழியில் வந்தவர்கள். பட்டினத்தார் ஞானிகளாக தான் ஏற்றுக் கொள்ளப்படும், சித்தர்கள் மோட்சத்துக்கு எதிர்பார்த்து இருப்பவர்கள் அல்ல. அவர்கள் ஜீவசமாதி அடைந்து விடுவார்கள். மணி, மந்திரம், மருத்துவ, வானசாஸ்திரம், அட்டமா சித்தி குரு வழியில் கற்றவர்கள்.. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
@navinonkanagaraj54506 ай бұрын
Dear Sister/daughter Exceptionally wonderful God's blessings 🙌 To you
@manikandanselvi34473 ай бұрын
மனத்தெளிவு அருமை நன்றி
@tsrsubramanian23426 ай бұрын
தகவல் தொகுப்பை வழங்கியற்கு நன்றி.
@suganthim50835 ай бұрын
மிகவும் அருமை சரண்யா, வாழ்க வளமுடன். 🎉🎉🎉❤
@Selvaraj-xw7yd6 ай бұрын
உங்களை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பார்ப்பதற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது இந்தச் சிறிய வயதில் இவ்வளவு ஆன்மீக அறிவு
@chandhrastores10816 ай бұрын
பட்டினத்தாரை பற்றிய பதிவு விளக்கமாகவும், தெளிவாகவும் இருக்கிறது . வாழ்த்துக்கள்.
@rajagopalanvenkatasubraman68665 күн бұрын
Generally actors and actresses know only acting and doesn't have general knowledge about other aspects. But you are so brilliant. I appreciate you. I have very good impression about you. Congratulations Madam.
@sshanmugasundaram27804 ай бұрын
பட்டினத்தார் கதையை அருமையாக புரிய வைத்தீர்கள் சகோதரி. =? 28:52 28:52
@alieanaliean55656 ай бұрын
மிக அருமயனா பதிவு சகோதரி, எல்லா சித்தர்கள் பற்றியும் சொல்லுங்கள் பிலீஸ்
@sundarrajan98866 ай бұрын
It was great. Badragiriar was in love with his Queen. One day he discovered that the Queen was in love with someone else. So, he renounced the world and followed Pattinathar . This version I read in a book on Pattinathar. His Samadhi Shrine is on the beach in Thiruvetriyur which is in the northern part of Chennai. Thank you for telling us about this great Saint.
@PSDPrasadMusic6 ай бұрын
பட்டினத்தார், தனது தாய்க்கு சத்தியம் செய்ததும், அதைக் காப்பாற்றியதும், பின்பு அது தொடர்பாக பாடல் புனைந்ததும், ஸ்ரீ ஆதிசங்கரர் வாழ்வு சம்பவங்களை நினைவூட்டியது. அவரது மாத்ரு பஞ்சகமும் இதே கருத்தைச் சொல்கிறது.
@Dewati_P6 ай бұрын
நல்ல அருமையான தகவல்கள்.. பட்டினத்தார் உட்பட பலரும் ஆரிய பாப்ரபணீயம் - வர்ணாசிரம - சாதிய ஏற்றத்தாழ்வுகள் இவைகளை எதிர்ப்பாளர்களாகவே வாழ்ந்தார்கள்...
@vgsboss6 ай бұрын
Nice share I go to this temple and Thiruvottyur big temple. My favourite Its my blessings i was born and brought up. My dad starts his everyday work only after visiting these two temples. Really very powerful. Thank a lot sharanya.
@omnamashivaya9677 күн бұрын
Ur hard work to make good content videos is really appreciatable.. When most of them post daily routine videos without any content quality ur effort is too good... All the best sis and thankyou...
@அடிமுடிதேடி6 ай бұрын
சிறப்பான பதிவு, பத்திரகிரியார் வரலாறு முழுமையாக இல்லை,பட்டினத்தார் போற்றி
@perumalsrinivasan44276 ай бұрын
பத்ரகிரியாரின் மெய்ஞான புலம்பல் எனும் பாடல் கேட்டுப் பாருங்கள் ஒரு மணி நேர பாடல் இதற்கு மிஞ்சிய பாடல் ஏதுமில்லை நான் கண்ட துறவ ரபாடலில்.
@shanmugamkesavan4383Ай бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு அதுவும் பட்டினத்தார் பற்றி இந்த வயதில் மகளே நீவிர் வாழ்க
@ManivelVel-u4e7 күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@kavipaarvai32955 ай бұрын
ஆதிசங்கரரும் தன் தாய்க்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவரது கடைசி காலத்தில் உடனிருந்தார். தாய் என்ற மகத்துவமான உறவில் நெகிழ்ந்து போவதில் துறவறம் மேற்கொண்ட பெரிய ஞானிகளும் விதிவிலக்கில்லை🙏🙏🙏
@gopalkrishna83196 ай бұрын
Super saranya and thank you free ya erukumbodu kandipa intha Mari video podu ma
@SathyaKesavan-d5j2 ай бұрын
அருமை கேட்பதற்கு இனிமை நன்றி சரண்யா
@RamachandranS-qe9fh2 ай бұрын
அருமை. 🎉
@rameshbabugs60395 ай бұрын
அருமையான பதிவு சகோதரி.. சிறப்பு , மகிழ்ச்சி.
@karunyagvs64545 ай бұрын
Simply super pattinathar patri innaiku thearinjikittadhu romba happya iruku thanks
@arulselvan59376 ай бұрын
மிக அருமையான விவரங்கள் நிறைந்த பதிவு. நல்ல உச்சரிப்பு. நன்றி.
@chandranjoothy41486 ай бұрын
Pattinathar sithaar ❤❤❤❤❤Anbu kalanthu kural thagguval Nyanam maiyam AAGA Vilangum vennilave unmai ❤❤❤❤Thiru Aruloli thillai Ambalam uravugaleh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Great job sister ❤ keep doing more info about our sithaar philosophy of education ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Srirao01Ай бұрын
Thanks for video pod.... Appreciate the contribution to revieve our forgot patinathar and Tamil language...
@PavithrasUniverse6 ай бұрын
Sooper da thangam. Ur narration is flawlessly amazing.
@santhanabharathyn18125 ай бұрын
நல்ல பதிவு நீங்கள் சொல்லும் விதம் அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள் மேலும் பதிவிடுங்கள்
@ganeshpgan3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. பழைய இலங்கை வானொலி கேட்டது போல் தோன்றுகிறது. வாழ்க வளத்துடன். 🙏
@muthukumara19253 ай бұрын
இரண்டாம் பட்டினாத்தார்.திருமணம் ஆகாமல் இருந்து முற்றும் துறந்த துறவி இருந்தால் நன்றாக இருந்துருக்கும்.நல்ல வரலாறு தெரிந்து கொண்டோம்.ஒரு புத்துணர்ச்சி இருந்து சகோ 😊😊😊😊😊
@virajan20696 ай бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா.
@rameshsk27886 ай бұрын
Very beautifully explained, I love your style of narration. Your research is commendable. I am a Tamilian born and brought up in Mysuru, I can't write in Tamil. But I watch all your videos, good work.
@mrajraj9056 ай бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு. சரண்யா நீங்களா, நல்லது.
@shanmugambalasubramani57416 ай бұрын
அற்புதம். மிகத் தெளிவான விளக்கம்.
@elavazhaganmurugesan72255 ай бұрын
அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு. இடையிடையே வரும் ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க முயலுங்கள். வாழ்த்துக்கள் அம்மா. நன்றி.
@Victorfashion-y6t5 ай бұрын
எனக்கு ஏற்கனவே இந்த கதை தெரியும் ஆனால் நீங்கள் சொல்லும் முறை அருமை. இதே போல் தமிழ் வளர்க்கவும் நன்றி அம்மா
@C.palaniKumar6 ай бұрын
❤😂❤❤❤ இன்னும் நிறைய படித்தவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் சிவனுடைய நிறைய பகுத்தாய்வு செய்து வழிமுறைகளை செய்து கொடுக்க வேண்டும் உங்களை போன்றவர்கள் நாங்கலாம் ஒடுங்கி ஒடுங்கி ஒடுங்கி கொண்டு வருகிறோம் நம் தேசத்துக்கு தேவையான பதிவு இது ஓம் சிவாய நம ஓம்
@viswanathanarthanari1422Ай бұрын
💐Super explanation.Thanks.🙏🏼
@rameshs.m39554 ай бұрын
Superb commentary with divinity ! God bless all ! Tks.
@jeevarathinam76776 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@narasimmangopalswamy26386 ай бұрын
இளவயதில் பட்டினத்தார் பற்றி தெரிந்து கொண்டு எடுத்து கள் கூறியது சிறப்பு. பெண்ணே நீ வாழ்க
@PREM-yt9zm6 ай бұрын
அருமையான பதிவு. அழகான தமிழ். இதுபோல இன்னும் பல ஆராயய்சி பதிவுகளை தாங்கள் பதிவிடுங்கள். நான் 6 வருடங்களுக்கு முன் திருவொற்றியூர் கோவிலுக்கு சென்ற இருக்கிறேன். அற்புதமான அனுபவம் அது.
@ganesanpillai806 ай бұрын
Really a good news all should know Thank you.
@rpguna2920Ай бұрын
அம்மா அருமை அருமை வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி அம்மா
@தமிழ்பார்வை-ல9ர6 ай бұрын
பட்டினத்தார் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும் சரண்யா ❤🎉😊
@கதம்பம்காணொளி6 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@anbuanbu-sg6qn6 ай бұрын
அருமையான பதிவு சரண்யா.வாழ்த்துகள்.
@Thiruchchelvam6 ай бұрын
தங்கையே புண்ணியம் சேர் சிவப்பணி ஆற்றுதல் அளப்பரியது, மிக மிக மிக சிறந்த ரத்தினச்சுருக்க பட்டினத்தார் திருவரலாறு 🙏🏻 சிவசக்தி அருளாசிகளுடன் வாழ்த்துகின்றேன் 🙏🏻 சிந்தையில் சிவனை வைக்க சித்தமே மோக்ஷ்மது காண்🙏🏻
@ShyamSundar0556 ай бұрын
நல்ல தகவல். எம்.ஆர்.ராதாவுடன் நமது பிரபல பாடகர் டி.எம்.எஸ் அவர்களே ஹீரோவாக நடித்த "பட்டினத்தார் (1962)" என்ற பெயரில் ஒரு படம் இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோ வாழை மட்டையால் தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்யும் காட்சி உள்ளது.
@jeevakarunyan2319Ай бұрын
அம்மா அருமையான பேச்சு 👌🧘♂️🙏
@srehari429219 күн бұрын
பரவாயில்லையே நல்ல பதிவு , தாய்யே 🫡
@umagandhi85406 ай бұрын
மயில் உன் குரல் குயில் கதை விளக்கம் அருமை பேச்சு அழகு வாழ்க வளமுடன்