Рет қаралды 209
Boil quail eggs in water for 3 to 4 mins. Wash it in lots of cold water and peel the skin off. Set aside.
Heat oil in a kadai. Add in cumin seeds and let them sizzle.
Add in onions, curry leaves, salt and turmeric powder and fry them till golden.
Add in ginger garlic paste and saute for a min.
Add in green chillies and spice powder and mix well.
Add in tomatoes and cook that till oil separate from the mix.
Now add in water and bring it to a boil.Simmer this till oil separates.
Now add in boiled peeled quail eggs and simmer for 5 more mins.Add in coriander leaves and mix well. Serve
Ingredients
20 காடை முட்டை
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் சீரகம்
1 வெங்காயம் நறுக்கியது
கறிவேப்பிலை சிறிது
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
2 தக்காளி அரைத்தது
2 பச்சை மிளகாய் நீளமாக கீறியது
உப்பு தேவையானஅளவு
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
தண்ணீர் தேவையான அளவு
கொத்தமல்லி சிறிது
Instructions
முதலில் காடை முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு. மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி!!!