தினமும் பாடவேண்டிய பதிகம் - அனைத்து தீவினைகள்-விளக்கமும் பாடலும் - முனைவர் . கோ. ப. நல்லசிவம்

  Рет қаралды 15,893

Gsengottaiyan Guruamy

Gsengottaiyan Guruamy

Күн бұрын

Пікірлер: 49
@vijayakumar-kr7qq
@vijayakumar-kr7qq 9 ай бұрын
பிணி நீக்கி கறை நீக்கி சிவன் வந்து கூட்டிச் செல்லும் பேறுகாண்போம்.
@selvamg7144
@selvamg7144 4 жыл бұрын
நமச்சிவாய, திருநிலகண்ட பதிகத்தின் சிறப்புகளைப் பதிவிட்ட தங்களுக்கும் அரிய தகவல்களை சொன்ன நல்லசிவம் அய்யா அவர்களும், இதனை காண கருணை புரிந்து சிவப் பெருமானுக்கும் இந்த சிறியேனின் நன்றி. *திரு சிற்றம்பலம்*
@VisalakshiR-r2t
@VisalakshiR-r2t 4 ай бұрын
சிவ சிவ திருச்சிற்றம்பலம் ஐயா அவர்கள் திருவடியை வணங்கிக் கொள்கிறேன்
@JancySJancy-ew7sn
@JancySJancy-ew7sn 10 ай бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@pushpamchairmadurai1774
@pushpamchairmadurai1774 9 ай бұрын
சிவாயநம வணக்கம்ஐயா விவரம்அறிந்து பலன்புரிந்துபாட அருள்செய்தமைக்கு மனமார நன்றிகள் பல அனைவரும் படித்து இன்புற வேண்டும் பணிகின்றேன்ஐயா ஓம். நமசிவாய
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
அருமையான விளக்கம், நான் தினமும் இநத பதிகம் ( நீங்கள் பாடுவது கேட்டு பின் பற்றி) பாடுகிறேன், திருச்சிற்றம்பலம்
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
திருநீலகண்டம். திருநீலகண்டம். திருநீலகண்டம். திருச்சிற்றம்பலம்.. திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருவடிகள் போற்றி.
@sampooranamsivaji2587
@sampooranamsivaji2587 9 ай бұрын
Kalathai veenaga pokkivitten ayya.ullam uruguthey ayya.om sivaya nama.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
அரோகரா ...அரோகரா... அரோ கரா.....💧🔱🔥🙌🙏
@srikalyanakaleeswarisithar2033
@srikalyanakaleeswarisithar2033 Жыл бұрын
ஓம்...சிவாய...ஓம்..
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 3 жыл бұрын
ஓம் நமசிவாய. திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி. அருமையான பதிவு ஐயா . ஒலிப்பதிவு தெளிவாக உள்ளது. மிக்க நன்றி. வணக்கம்.
@sushelasushela5542
@sushelasushela5542 3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க குருவடி சரணம்ஐயா திருவடிசரணம்🙏🙏
@Ramalakashimi
@Ramalakashimi Ай бұрын
கோடி கொடுப்பினும் கிடைக்காதது.
@ponnusamy1577
@ponnusamy1577 2 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 அன்பே சிவம் 🙏
@vimalav4077
@vimalav4077 3 жыл бұрын
விமலா வேணுகோபால் மிக அருமை. தங்கள் சிவபணி தொடர வாழ்த்துகிறோம்.
@narayananveerabadran6397
@narayananveerabadran6397 2 жыл бұрын
சிவாயநம
@annapooranik1967
@annapooranik1967 2 жыл бұрын
அருமை ஸார் அருமை
@murgeshan3161
@murgeshan3161 3 жыл бұрын
அருமை அய்யா. சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ திருச்சிற்றம்பலம்
@seriousfunnydudeman
@seriousfunnydudeman 2 жыл бұрын
Namaivaya
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🥀💐சிவயசிவ🌹திருச்சிற்றம்பலம் 🌿🌼🌻🙏
@rajasekarannarasimhan6644
@rajasekarannarasimhan6644 Жыл бұрын
ThiruchitrMbalam
@KalyMutu
@KalyMutu 7 ай бұрын
Om namasivaya
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 3 жыл бұрын
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
@rasammahmnramasamy1371
@rasammahmnramasamy1371 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா சிவ சிவ🙏🙏🙏🙏
@maharajanmala7047
@maharajanmala7047 3 ай бұрын
🎉🎉
@geetham4969
@geetham4969 3 жыл бұрын
சிவாயநம, அருமை
@thenmozhiyaljayaraj
@thenmozhiyaljayaraj 2 жыл бұрын
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.116 - பொது - “திருநீலகண்டம்” ( பண் - வியாழக்குறிஞ்சி ) பாடல் எண் : 1 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 2 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 3 முலைத்தட மூழ்கிய போகங் களுமற் றெவையுமெல்லாம் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 4 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 5 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 6 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப் பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 7 ****** This verse is lost ****** பாடல் எண் : 8 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 9 நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாதுசெய்து தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 10 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 11 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண் திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார் நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
@samynathan8785
@samynathan8785 Жыл бұрын
வாழ்க உமது சேவை
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
மிக்க நன்றி.
@Ramalakashimi
@Ramalakashimi Ай бұрын
பிறவி பயன் இதுவே.
@sivakumarvelusamy1894
@sivakumarvelusamy1894 3 жыл бұрын
நன்றிகள் ஓம் நமசிவாய
@vaidi865
@vaidi865 4 жыл бұрын
Nice sir.very very good.video
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 2 жыл бұрын
Siva siva
@shanthiramachandiran3075
@shanthiramachandiran3075 Жыл бұрын
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா
@lavanyaprabhu5067
@lavanyaprabhu5067 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@maheshwari521
@maheshwari521 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@vaidi865
@vaidi865 4 жыл бұрын
Padalaya text podunga sir.
@sudarvizhi6054
@sudarvizhi6054 4 жыл бұрын
Ama padala text panuga ayya
@sundararajana352
@sundararajana352 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.116 பொது - “திருநீலகண்டம்” ( பண் - வியாழக்குறிஞ்சி ) தலம் - கொடிமாட செங்குன்றூர் "அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1" "காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 2" "முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 3 " "விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 4" "மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 5"
@sundararajana352
@sundararajana352 4 жыл бұрын
"மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப் பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 6" இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் கிடைக்கப்பெறவில்லை. இறையருள் மறைத்தது. "கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 8 " "நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 9 " "சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 10 "🌿 "கடைக்காப்பு" "பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண் திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே." சொல் பதம் - நன்கு பதிகத்தை புரிந்து கொள்ள உதவும். 🌷/“அவ் வினைக்கு இவ் வினை ஆம்” என்று சொல்லும் அஃது அறிவீர்! உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே? கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்; செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!/ /காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால், “ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று, இருபொழுதும், பூவினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்; தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!/ /முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம், விலைத்தலையா வண்ணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்! இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்! சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!/ /விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும், “புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே! கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!/ /மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்! கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ? சொற்றுனை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்; செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!/ /மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி, பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம், பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்; சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!/ /கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்; செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே! திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!/ /நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து, தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்! தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்; சீற்ற அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!/ /சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும், பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்; பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்; தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!/ /பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான், இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண் திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே./ பதிகம் நிறைவு. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
@thirunavukkarasuchennai1829
@thirunavukkarasuchennai1829 3 жыл бұрын
மிகவும் அருமையான பொருள் விளக்கம் ஐயா. அருமை 🙏 திருச்சிற்றம்பலம் 🙇‍♂️
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 2 жыл бұрын
Thank u ayya Siva siva
@sampooranamsivaji2587
@sampooranamsivaji2587 9 ай бұрын
😂❤
@letswatchletswatch6425
@letswatchletswatch6425 2 жыл бұрын
🙏சிவ சிவா திருச்சிற்றம்பலம்🙏
@balamuruganp3248
@balamuruganp3248 2 жыл бұрын
சிவாயநம
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SJR_1M
@SJR_1M Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@iraivan010
@iraivan010 4 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
ஆன்மிக சந்தேகம் தெளிதல் நிகழ்ச்சி பாகம்-1, 5-1-2025
28:37
Atma Vidyalayam ஆத்ம வித்யாலயம்
Рет қаралды 3,7 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН