திருமுருகாற்றுப்படை | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram

  Рет қаралды 6,461

“Isaimani” Sirkazhi Govindarajan Family

“Isaimani” Sirkazhi Govindarajan Family

Күн бұрын

திருமுருகாற்றுப்படை
அ௫ளியவர் : நக்கீரதேவ நாயனார்
பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இதுகடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. “ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.

Пікірлер: 25
@sivalingam2176
@sivalingam2176 9 ай бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🙏🙏 " உலகம் வாழ்க' 🙏🙏🙏 "ஓம் சரவணபவாய நமோ நம! உலகம் உவப்ப! 🙏🙏🙏 " திருமுருகாற்றுப்படை! 🎉 👌 சூப்பர் அருமையான பாடல்🎶🎤🎵🎉🎉 "வாழ்த்துக்கள்🎉🎊 " நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
@JayaKumar-yp6by
@JayaKumar-yp6by 2 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@shyamalam811
@shyamalam811 9 ай бұрын
சொன்ன படி செய்தமைக்கு மிக்க நன்றி ! இதே போல் சிவசிதம்பரம் ஐயா பாடிய திருவெம்பாவையையும் மார்கழி மாதம் தொடங்கியதும் முழுமையாகப் பதிவிடுங்கள்!
@srk8360
@srk8360 9 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 மிகவும் அருமை. இனிய பதிவிற்கு நன்றி நன்றி ஐயா.🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@durgasekaran
@durgasekaran 3 ай бұрын
நன்றி - ஐயா.
@viswamc4741
@viswamc4741 3 ай бұрын
முருகா
@natarajang1628
@natarajang1628 9 ай бұрын
அருஞ்செயல் முடிக்கும் ஆற்றல் வாய்ந்த ஐயா வாழ்க
@santhakumarabiramam5805
@santhakumarabiramam5805 9 ай бұрын
❤❤❤❤❤அற்புதம் அருமை
@jaisankar1976
@jaisankar1976 9 ай бұрын
தனித்துவமான தொகுப்பு 2015 சிடியில் இறக்கிய பாடல்கள் முடிந்தால் 4000 திவிய பிரபந்த பாடல்களை பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கவும்
@user-bu9ht9eg3g
@user-bu9ht9eg3g 9 ай бұрын
அமுது அமுது முருகா ஆற்று படை❤❤
@user-kk5of5zv3t
@user-kk5of5zv3t 6 ай бұрын
Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva Kodanukodi nandrigal.I was searching this voice for so many days . Thank you Universe
@kannans7661
@kannans7661 9 ай бұрын
OM MURUGA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@kalidossashok2838
@kalidossashok2838 9 ай бұрын
கம்பீரத் தமிழ்..முருகா முருகா
@MorsingDheenadhayalu
@MorsingDheenadhayalu 9 ай бұрын
முருகசரணம் மெய்விடா தீரன்கைவேல்
@punniavathisundaram6484
@punniavathisundaram6484 5 ай бұрын
❤👃👣👃
@srinivasan-papa
@srinivasan-papa 9 ай бұрын
Super Anna
@murugesanmuthamperumalpill8323
@murugesanmuthamperumalpill8323 8 ай бұрын
மிக அருமை. நன்றி.
@nagarasan
@nagarasan 9 ай бұрын
சிறப்பான முன்னெடுப்பு நன்றிகள் பல
@pvammaiyar5552
@pvammaiyar5552 9 ай бұрын
🙏🙏🙏
@KarthigaiOndru
@KarthigaiOndru 6 ай бұрын
நல்லது நன்றி
@MorsingDheenadhayalu
@MorsingDheenadhayalu 9 ай бұрын
வெற்றி தரும்முருகன் கைவேல்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 9 ай бұрын
Welcome to Our Channel
@maheswarisamayal6510
@maheswarisamayal6510 5 ай бұрын
ஓம் சரவணபவ 🙏
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 9 ай бұрын
ஓம் சரவணபவ.
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 38 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
Saktheeyum budhiyuum Sirkazhi Govindarajan
5:00
Ramesh Duraisamy
Рет қаралды 32 М.
Kandar Anubhoothi | Lyrics | “Padmashri” Dr. Sirkali G. Siva Chidambaram
46:10
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 65 М.
Vasi Thirave Kaasu
6:16
Dharmapuram P Swaminathan - Topic
Рет қаралды 239 М.
Shanmuga Kavasam | Lyrical Explanation Video Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan
22:20
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 23 М.
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44