திருவெண்பாக்கம் | பூண்டி நீர் தேக்கத்திற்குள் சுந்தரரால் தேவார பாடல் பெற்ற பழமையான கோயில்

  Рет қаралды 1,239

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Күн бұрын

திருச்சிற்றம்பலம்
திருவெண்பாக்கம் -உளோம்போகிர்
பூண்டி - திருவள்ளூர் மாவட்டம்
சிவமயம்
தமிழகத்தின் ஆன்மீக வரலாறு பல சுவாரசியங்களை கொண்டது. நமக்கு கிடைத்த மூவர் பாடிய தேவாரங்களை வைத்து 276 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களை ஆதாரமாக வைத்து நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதில் 274 ஸ்தலங்களும் தேவார ஆசிரியர்கள் சென்ற அதே இடத்தில் அதே கோயிலாக உள்ளது. ஆனால் இரண்டு ஸ்தலங்கள் மட்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. ஒன்று வெஞ்சமாங்கூடலூர் அமராவதி ஆற்றின் கிளை நதியான குடகனாற்றின் கரையில் உள்ளது இந்த கோயில். சுமார் 80 வருடங்களுக்கு முன்பு மொத்த கோயிலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது பின்பு அதே கற்களை வைத்து சற்று தூரம் கரையின் மேல் புது கோயிலாக எழுப்பப்பட்டு தற்போது அதே மூர்த்தங்கள் வைத்து வழிபாடு நடைபெறுகிறது. அதேபோல இரண்டாவது ஸ்தலம் இந்த திருவெண்பாக்கம் இரண்டும் சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் தான். கொற்றவை என்று சொல்லப்படுகின்ற குசஸ்தலை ஆறும் விருத்தஷீரா என்ற ஆறும் சங்கமிக்கும் இடம் இது. (தற்போது கிருஷ்ணாவும் இணைந்து முக்கூடலாய் உள்ளது) இந்த நதிக்கரையில் இருந்த இந்த ஸ்தலம் மக்களின் நீர் தேவைக்காக நீர் தேக்கமாக மாற்றி அமைக்கும் பொழுது இந்த கோயிலும் இடம் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுதும் இந்த நீர்த்தேக்கத்திற்குள் பழைய கோயில் உள்ளது. நீர் வற்றுபோது தரையில் நின்று காணலாம். ஆனால் அருகில் சென்று தரிசிப்பது என்று இயலாத காரியம் சிவனடியார்களுக்கு இந்த கோயிலை அருகில் சென்று பார்ப்பது ஒரு கனவு தான். அனேகமா இன்னும் சில ஆண்டுகளில் இந்த கோயிலும் சிதிலம் அடைய வாய்ப்பு இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் நீர் வரத்து பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் எப்படியும் சென்று தரிசித்து விட வேண்டும் என்று ஆர்வத்துடன் பயணித்தேன். பயணம் சற்று கடினமாக தான் இருந்தது . ஏற்கனவே இது போன்ற அனுபவங்கள் இருந்ததால் என்னால் பயணிக்க முடிந்தது. என்னுடன் பயணித்த எனது நண்பர் இடுப்பு அளவு சேற்றில் விழுந்து எழுந்து தான் வந்தார்.கிட்டத்தட்ட ஆறு ஏழு கிலோமீட்டர் நீர் தேக்கத்திற்குள் நாம் பயணிக்க வேண்டும். எதையும் சந்திக்க துணிவு இருக்கும் அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் பயணிக்கும் நாட்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்து இருந்தால் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
திருச்சிற்றம்பலம்
thiruvenpakkam
• ஊன்றீஸ்வரர் கோயில் | த...
I will meet again an another old temple....
Thank u
Thedikandukonden
ganesh mani
WhatsApp - 8056179430
cont us : ganeshrm80@gmail.come

Пікірлер: 21
@Ayshwariya
@Ayshwariya 3 ай бұрын
🙏🙏🙏
@ramkumarm884
@ramkumarm884 3 ай бұрын
OM NAMAH SHIVAYA
@chandrakumar7761
@chandrakumar7761 3 ай бұрын
இந்த உண்மையான பாடல் பெற்ற சிவத்தலத்தை தங்கள் மூலம் தரிசனம் செய்தமைக்கு மிக்க நன்றி. சிவனருளால் நீண்ட ஆரோக்கியத்துடன் தங்கள் சிவத்தொண்டு சிறக்கட்டும்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 ай бұрын
தங்களைப் போன்றவர்களின் அன்பான வாழ்த்துக்களே அடியேனை வாழ வைக்கிறது சிவாய நம திருச்சிற்றம்பலம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 ай бұрын
🙏🌿🌺சிவ சிவ🍀❤❤❤❤❤
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@ஆரோக்கியவாழ்வு-ய8ம
@ஆரோக்கியவாழ்வு-ய8ம 3 ай бұрын
அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 ай бұрын
மிக்க நன்றி சிவாய நம
@senthils7322
@senthils7322 3 ай бұрын
Super
@vijis2786
@vijis2786 3 ай бұрын
அருமையான பதிவு 🙏🏻
@gokulraj7682
@gokulraj7682 3 ай бұрын
பதிவு அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி ஹா ஹா என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே🎉🎉
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@vijayas1618
@vijayas1618 3 ай бұрын
சிவாயநம ஐயா🎉
@ManiManirajagopal-cg1go
@ManiManirajagopal-cg1go 3 ай бұрын
அடியேன் வெகு சீக்கிரத்தில் இந்த ஆலயத்தை தரிசிப்பேன் ❤
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 ай бұрын
விண்ணப்பம் வைத்துக் கொண்டே இருங்கள் நிச்சயம் இறைவனின் அழைப்பு இருக்கும்
@venkybe24
@venkybe24 2 ай бұрын
சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம்
@suresh-7220
@suresh-7220 3 ай бұрын
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டதுக்கு வாங்க, நிறைய பழைய சிவன் கோவில்கள் இருக்கு.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 ай бұрын
நிச்சயமாக ஐயா இனிவரும் காலங்களில் மற்ற மாவட்டங்களையும் பயணிக்க திட்டம் வைத்துள்ளேன்
@vijis2786
@vijis2786 3 ай бұрын
அருமையான பதிவு 🙏🏻🙏🏻
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН