மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்களுக்கும், சங்கர சரவணன் ஐயா அவர்களுக்கும், வெற்றி பெற்ற அணியினருக்கும், வெற்றியை நலுவவிட்ட அணியினர்க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்........
@amudhavallibalasubramanian92182 күн бұрын
நம் தினசரி வாழ்வில், அலுவல்களில் நம்மை அறியாமலே திருக்குறளின் தாக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது. கருத்துக்களை நடைமுறை படுத்தி வந்து இருக்கிறோம் என்பது திருக்குறள் போட்டிக்காக படிக்கும் போது நம்மை உணர முடிந்தது. வெற்றி பெறவில்லை என்றாலும் நம் வாழ்வின் எல்லா தருணங்களுக்கும் திருக்குறள் வழிகாட்டியாக இருப்பதை உணரமுடிந்தது மன நிறைவினையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மனமகிழ்ந்து சென்று இருப்பர். அனைவரின் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் காரணமாக அமைந்த த.நா. அரசு மற்றும் சிறப்பாக அதனை செயலாக்கம் செய்த விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.வாழ்க தமிழ்.வெல்லுக வள்ளுவம்.
@ganeshrajan2432 күн бұрын
மதுரையைச் சேர்ந்த இரண்டு அணிகள் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து மதுரைக்குப் பெருமை சேர்த்தன. வாழ்த்துகள் 🎉🎉
@leningovindarajan3523 күн бұрын
✨🙏🏻 கன்னியாகுமரியில் உலகப் பேரறிவின் அடையாளமாக அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்வாக... அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 28-12-2024 அன்று நடைபெற்ற *மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா* போட்டியில் பங்கேற்ற திருக்குறள் ஆர்வலர்கள் சுமார் 450 பேருக்கும்... 💫வாழ்த்து மற்றும் வரவேற்பு மடல் 💫திருவள்ளுவர் வெண்கலச் சிலை 💫 பரிமேலழகர் உரையுடனான திருக்குறள் நூல் 💫 நாள் குறிப்பேடு(Diary) 💫2025 ஆம் ஆண்டு நாள்காட்டி 💫 திருக்குறள் வினாடி வினா போட்டியின் நினைவைக் குறிக்கும் சிறப்பான தண்ணீர் புட்டி (steel Water Bottle), 💫 விருதுநகர் பகுதி சிறப்புத் தயாரிப்பு இனிப்பு கார வகைகள் 💫 திருக்குறளுடன் கூடிய பேனா 💫 இவை அனைத்தையும் உள்ளடக்கும் துணிப்பை 💫 சிறப்பான பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை 💫 காலை, மாலை சிற்றுண்டி 💫 சைவ, அசைவ மதிய உணவு 💫 தாய்த் தமிழின் சிறப்பைப் போற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவைகளை வாரி வழங்கி மன நிறைவாக அனைவரையும் பார்த்துப் பார்த்துக் கவனித்து வழியனுப்பிய... தமிழ்நாடு அரசு- தமிழ் வளர்ச்சித் துறை சார்பிலான இந்நிகழ்வைத் திறம்பட நடத்தி வரலாற்றில் வளம் பெற்ற *விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் உயர்திரு வீ.ப. ஜெயசீலன் IAS* ஐயா அவர்களின் தலைமையிலான *விருதுநகர் மாவட்ட நிர்வாகம்* மற்றும் உறுதுணையாய் இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்... பங்கேற்பாளர்கள் அனைவரின் சார்பிலும் *நன்றிகள் பல..* ✨🙏🏻🙏🏻🙏🏻🎁🥧💐🌷
@pon.arunachalapandian40172 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்
@gsaravana872 күн бұрын
மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
@sakthisurya51093 күн бұрын
Hats off to the Collector of Virudhunagar
@stanleyvictor29633 күн бұрын
மதுரை அணிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤
@vijayanappusamy672119 сағат бұрын
❤❤
@kanchanasendhil2 күн бұрын
Congratulations tiruppur team
@meenachisundari92833 күн бұрын
அருமையான நிகழ்வு
@katheejabanu4733 күн бұрын
நிகரற்ற நிகழ்வு 🎉🎉
@jeyachandran66633 күн бұрын
Super
@josephinerajesh79393 күн бұрын
🎉
@Thee_Thamizha3 күн бұрын
அன்பு மிக்க தமிழ்ச் சான்றோர்கள் அனைவருக்கும் வணக்கம். நேற்று நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் போட்டியில் பங்கேற்று நல்ல ஒரு அனுபவத்தைப் பெற்றோம். திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் உச்சம். தமிழரின் பன்நோக்குப் பார்வையிலிருந்து பெற்ற ஒரு பொதுமைப் பார்வை. காலம், இடம், இனம், மொழி, சமயம் கடந்து எல்லா மனித சமூக அமைப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய (மிகச்சிறிய அளவில் முரண்கள் இருந்தாலும்) மானுட நெறியைப் பயிற்றுவிக்கும் மிகச்சிறந்த அற நூல். "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு " என்னும் திருக்குறளே சொல்லும் கருத்திற் கேற்ப திருக்குறளை பயிலும் போதெல்லாம் புதிய புதிய சிந்தனைகளை, மொழிப் புலத்தை வளர்க்கும். எண்ணி எண்ணி மகிழத்தகுந்த, தமிழின் பெருமையை, தமிழரின் சிந்தனைச் செழுமையைக் கண்டு வியக்கத்தகுந்த உன்னத இலக்கிய நூல். எனவே உள்ளும் தோறும் உவப்பைத் தருகின்ற திருக்குறளுக்கான மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டதே நம் வாழ்வின் தருணங்களை மகிழ்ச்சியாகக் கூடியதாகும். விருது நகர் மாவட்ட நிர்வாகமும், தமிழ் மிகு மாவட்ட ஆட்சியர் அவர்களும் நன்கு திட்டமிட்டு எந்த வகையிலும் சிறிதும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் இன்னும் சொல்லப்போனால் சீக்கிரம் நிகழ்ச்சி முடிந்துவிடக் கூடாது என்று மகிழ்வூட்டும் வகையில் நிகழ்வை வடிவமைத்திருந்தனர். அவர்களுக்கு நம் மனம் நெகிழும் நன்றியை வணக்கங்களைச் சொல்வோம். எனவே கலந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம்! 🦚🌹🌺🌺🌸🌸🌹🦚
@sathyasiva47282 күн бұрын
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்