நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் நன்றியப்பா இயேசப்பா இமைப்பொழுதும் என்னை நீர் கைவிடவில்லை- நிமிடம் தோறும் விசாரித்து நடத்துகிறீர்- என் நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர் உலகம் என்னைத் தூற்றும்போது தேற்றினீரைய்யா- உறவெல்லாம் வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே நண்பன் என்னைப் பகைத்தப்போது நண்பனானீரே- உண்மையில்லா என்னையும் நீர் தேடி வந்தீரே பாவசேற்றில் இருந்த என்னை தூக்கியெடுத்தீரே- நாற்றமெல்லாம் கழுவி என்னை மார்பில் அணைத்தீரே அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே நன்மைகள் செய்தவரே நன்றியுள்ள ஆராதனை உமக்கே செலுத்துகிறேன் உயிருள்ள நாளெல்லாம்