No video

தொல்காப்பியச் சிறப்புகள் - முதுமுனைவர் இரா. இளங்குமரனாருடன் சிறப்பு நேர்காணல்

  Рет қаралды 56,337

VAYALVELI THIRAIKKALAM

VAYALVELI THIRAIKKALAM

Күн бұрын

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், காப்பிய நூல்கள் உள்ளிட்ட தமிழ் நூல்களில் பெரும்புலமை பெற்றவர். வாழும் வள்ளுவராக நம் காலத்தில் விளங்கும் இப்பெருமகனாரின் தொடர்பு சற்றொப்ப இருபத்தேழு ஆண்டுகளாக எனக்கு உண்டு. யான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது(1993-97) புலவர் அவர்களின் அல்லூர் திருக்குறள் தவச்சாலையில் அமைந்திருந்த பாவாணர் நூலகத்தை நன்கு பயன்படுத்தியுள்ளேன். நேரிலும், பொழிவுகளிலும் இவர்களிடம் யான் பெற்ற தமிழ்ச்செல்வம் வரம்பிட்டுச் சொல்ல இயலாது.
“தனக்குவமை இல்லாத தனிப்பெரு நூல்” என்ற தலைப்பில் தொல்காப்பியம் பற்றி இவர் வரைந்துள்ள நூல் தமிழ் உணர்வாளர்களுக்குப் படைக்கருவியாகும். தொல்காப்பியம் சார்ந்து நிறைய நூல்களை வரைந்த முதுமுனைவர் இரா. இளங்குமரனாரை 21.03.2017 இல் மதுரை, நான்காம் தமிழ்ச்சங்க நிகழ்வொன்றில் கண்டு உரையாடினேன். பெரும்புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் தம் முதுமைக் காலத்திலும் தொல்காப்பியச் சிறப்பினை எடுத்துரைத்த பாங்கினை வியந்து கேட்டேன். தொல்காப்பியத்திற்கும் திருக்குறளுக்கும் அமைந்துள்ள உறவுகளை நம் ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக எடுத்து விளக்கினார்கள். “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் நோக்கில் புலவர்பெருமானின் அரிய உரையினை ஒளிப்பதிவாக்கி, உலகத் தமிழர்களின் பெருஞ்சொத்தாக இக்காணொளியைப் படைப்பதில் பேருவகை அடைகின்றேன்.
முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின்மேல் அன்புகொண்ட தமிழ்த் தொண்டர்கள் இக்காணொளியை வரவேற்றுப் போற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். உண்மைத் தமிழ் உணர்வாளர்கள் இதனைக் கேட்டு, என் முயற்சியை ஊக்கப்படுத்துவார்கள் என்பதும் என் நம்பிக்கை. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வழிவகைகளைச் செய்வோம். இணையப் பெருவெளியில் தமிழ்வளங்களைக் கொண்டுசேர்ப்போம்! வாரீர்!

Пікірлер: 175
@jaiii8959
@jaiii8959 5 жыл бұрын
எனது மீதமுள்ள வாழ்நாளும் இவர் பெற்றிடவேண்டும், தமிழன்னைக்கு தொடர்ந்து தொண்டாற்றிடவேண்டும்
@originality3936
@originality3936 3 жыл бұрын
உங்களின் நல்லெண்ணத்திற்கு எனது பனிவான வணக்கங்கள்.
@sambandamgurukkal
@sambandamgurukkal 3 жыл бұрын
அருமையான வாய்ப்பு எனக்கு .நன்றி ஐயா
@kidzeworld5578
@kidzeworld5578 3 жыл бұрын
ungal kuralil Thiruppugal Paattu kettu makilum anbanban nanri iyya
@user-lf8jm8pb8r
@user-lf8jm8pb8r 6 жыл бұрын
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதும் நன்றே ....! கேளுங்களேன் ...!! என்று தாங்கள் மேற்கொள்ளும் பணியும் மிகமிக நன்றே ...!!!
@visurevathi8987
@visurevathi8987 4 жыл бұрын
நேரடியாக கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 4 жыл бұрын
அருமையான மிகச்சிறந்த ஆய்வுரை வணங்குகிறேன் அய்யா
@arumugamm6040
@arumugamm6040 4 жыл бұрын
தமிழிலே மூழ்கி இவர் பேசுவதை காணும்பொழுது நம்மையும் மெய்மறக்க செய்துவிடுகிறார்.
@srivaisnavy3851
@srivaisnavy3851 6 жыл бұрын
உடல் பொருள் ஆவி எல்லாம் சிலிர்க்கிறது...
@r8e2cnjp
@r8e2cnjp 3 жыл бұрын
இணையப் பெருவழியில் தமிழின் அருமை பெருமைகளை உலகுக்குக் கொண்டுசேர்க்கும் இளங்கோ அவர்கள் தமிழ் உள்ள அளவும் புகழ்பெற்று விளங்குவார் அவரைப் பாராட்டச் சொற்கள் இல்லை
@a.k.p.5319
@a.k.p.5319 2 жыл бұрын
Tholkaapiyam one of Our Ancestors great job.
@tamilchelviraja8717
@tamilchelviraja8717 3 жыл бұрын
தொல்காப்பியத்துளி அன்று நீர் தெளித்தது. ஆலம் விதையினுள் பெருமரம் மறைந்துள்ளதை எமக்குக் காட்டிவிட்டீர்.உம் வழியில் தொல்காப்பிய வேரினை உலகிற்கு காட்டுவதே என் முதற் பணி.அமைப்பாளர் ஐயாவிற்கு வணக்கம்.
@vinayagasundarampappiah2773
@vinayagasundarampappiah2773 8 ай бұрын
உரிப்பொருளுக்குத் தந்த உரிமைப் பொருள்,பிறப்பினால் பெற்ற உரிமைப் பொருள் என்ற விளக்கம் அருமை.எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.தேடினால் கிட்டும்.அரியதொரு நேர்காணலைப் பதிவிட்டு இணையத்தில் ஏற்றியுள்ள திரு.மு.இளங்கோவனாருடைய பணி இணையற்றது.நன்றி
@aravamuthanr8203
@aravamuthanr8203 4 жыл бұрын
ஐயாவின் இந்த நேர்முகத்தை ஏற்பாடு செய்ததற்கு நன்றி். ஐயா அவர்கள் இருட்டிலும் அழகாக எழுதும் பயிற்சி பெற்றுள்ளார். ஐயாவின் குரலில் தமிழ் கேட்க நாம் கொடுத்து வைத்தவர்கள்.
@manivelan9672
@manivelan9672 5 жыл бұрын
இப்பேர்பட்ட மூதறிஞர் வாய்மொழி வாயிலாக தொல்காப்பியம், தமிழ் மொழி பயின்றவர் என்ன பேறு பெற்றனரோ? மூப்பு நிலையிலும் இவ்வளவு சிறப்பாகப் பேசுகிறார்.. 🙏🙏🙏
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 5 жыл бұрын
இவரின் மாணவர்தான் சு.வெங்கடேசன் சாகித்தய அகடம் விருது பெற்றவர்
@ratheskumar4746
@ratheskumar4746 3 жыл бұрын
ஆற்றல் தமிழ் தான் தருகிறது உயிர் மொழி ஆயிற்றே தமிழே அமுதே
@rathinarajah1968
@rathinarajah1968 4 жыл бұрын
ஐயா, வணங்குகிறேன் 🙏🙏🙏
@servanson246
@servanson246 6 жыл бұрын
தொல்காப்பிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அய்யாவின் பெரும்புலமையை தக்கவைக்க பெருமுயற்ச்சி எடுத்துள்ள முனைவர் இளங்கோ முயற்ச்சி வெற்றி பெற ஆழ்ந்த வாழ்த்துகள். இதுபோன்ற அறிவுக்களஞ்சியங்களை உபயோகப்படுத்தவேண்டியது நம்தமிழ் மக்கள் அனைவரின் தலையாய கடமை. மிக்க நன்றி!
@seenupooma7612
@seenupooma7612 5 жыл бұрын
தொல் காப்பு இயம் வணங்குகிறேன்
@venkatesana8621
@venkatesana8621 3 жыл бұрын
Welcome sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rctamil018dr.d.indirakumar3
@rctamil018dr.d.indirakumar3 6 жыл бұрын
அருமையான உரை. ஐயா அவர்களது கருத்துகள் நிச்சயமாக பலருக்குத் தமிழுணர்வை ஏற்படுத்தும்.
@SathivelKandhanSamy
@SathivelKandhanSamy 2 жыл бұрын
'கற்றலின் கேட்டலே நன்று[' - பழமொழி நானூறு - பாடலின் பொருளை திருமிகு இளங்குமரனாரின் உரையைக் கேட்க விளங்கியது. - 'கற்றது கைமண் அளவு' (தமிழை) - பகிர்ந்தளித்த உயர்திரு. இளங்கோவன் அவர்களுக்கு நன்றி.
@peterfrancis7164
@peterfrancis7164 6 жыл бұрын
தமிழும் தமிழ் உணர்வும் வாழ்க.
@user-vv6it3to7c
@user-vv6it3to7c 3 жыл бұрын
ஒரே சொல்..... சிறப்பு.. மாற்று சொல் சொல்ல மதி இழந்து இருந்தேன்
@r8e2cnjp
@r8e2cnjp 3 жыл бұрын
ஐயா இளங்குமரனாரின் குரல்வளம் மெய்சிலிர்க்க வைக்கிறது அன்னாரின் தமிழ்வேட்கை உயிர்கலந்து ஊன்கலந்து உவட்டாமல் இனிக்கிறது
@user-gy4wy2gw9d
@user-gy4wy2gw9d 3 жыл бұрын
நம் தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அஃது அகத்திலும் புறத்திலும் அறத்தின்வழி வாழ்ச்செய்யும் தலைமை ஆசிரியர்..
@captal6187
@captal6187 4 жыл бұрын
கனம் பொருந்திய அருமை ஐயா: தங்கள் பேச்சை செவிமடுக்கும் போது தொப்புளில் ஏதோ செய்கிறது! நீடூழி வாழ்க!!
@nandhidas2588
@nandhidas2588 Жыл бұрын
மாமனிதர்... தமிழுக்கு கிடைத்த புதையல்.... தமிழினத்தின் உண்மையான வழிகாட்டி... நலமோடு நீடு வாழ பிரார்த்திக்கிறேன்!
@karthikm3279
@karthikm3279 5 жыл бұрын
உலகின் மூத்த மொழி தமிழ்தான் வணக்கம் நன்றி
@rajamr966
@rajamr966 4 жыл бұрын
Arumai
@write2bright
@write2bright 5 жыл бұрын
சிரம் தாழ்ந்து வணங்குவதற்கு உரிய தமிழ்க் களஞ்சியம் , அய்யா அவர்கள்..
@suthamathikarthikeyan9984
@suthamathikarthikeyan9984 4 жыл бұрын
'ஐயா' என்பதே சரி.
@abiramisenthilkumar1497
@abiramisenthilkumar1497 5 жыл бұрын
ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@bharathibrn6767
@bharathibrn6767 9 ай бұрын
அருமை❤❤ செவிச்செல்வமும், விழிச்செல்வமும், விழிக்கச் செய்தது.... ஐயாவின் உரை கேட்டு மகிழ்ந்தேன்... தோழர் இளங்கோவன் அவர்களின் சேவைக்கு நன்றி....❤
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
அருமை அய்யா...!
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 5 жыл бұрын
தமிழ் மொழியின் ஆளுமை தன்மையை எளிமையாக தொல்காப்பியம் வாயிலாக பகிர்ந்தமைக்கு பல கோடி நன்றிகள், அய்யா! வாழ்க உங்கள் தமிழ் தொண்டு, எளிய நூல்கள் வாயிலாக தமிழ் மொழியை நம் இளந் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம், நன்றி, வணக்கம்! :)
@praj6761
@praj6761 3 жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன்.... அய்யா
@gvtthirumani2639
@gvtthirumani2639 4 жыл бұрын
தொலைத்து விட்டோம் தொல்காப்பியம் இவன் வேண்டாம் என்று தொலைந்துவிட்ட தொல்காப்பியம் துணை நிற்கும் தமிழனுக்கு ஏன் மறந்தாய் தமிழாய் என்னை பிரிந்தாய் இனியும் ஒரு காலம் உணர்வாய் மணி தா
@sinnathambysivarooban7175
@sinnathambysivarooban7175 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nageswaranthushanth6393
@nageswaranthushanth6393 4 жыл бұрын
நான் தமிழில் படித்தேன், அதனால் அவர் என்ன பேசுகிறார் என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் என் மகன் ஆங்கிலத்தில் படிக்கிறான், அதனால் இவை எதுவும் புரியாது என்று பயப்படுகிறேன்.
@ilangovanNTK
@ilangovanNTK 6 жыл бұрын
அருமையான பதிவு சகோதரே வாழ்க பல்லாண்டு காலம் நீயும் தமிழும்
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha 4 жыл бұрын
சிறப்பு அய்யா வாழ்க பல்லாண்டு இப்பிறவியில் யானும் பெற்றேன் இன்பம்❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@naliguru
@naliguru 4 жыл бұрын
Amazing speech. The 👍👍❤❤🙏🙏🙏🙏👏👏👏He had found the Tholkapium book at Tamil Ellam Jaffna. So proud to hear that. Despite Sinhala Politician burned the Tamil library . Because of tried to destroy our ancient history. 💔💔😥😥
@lakshminarayanan8894
@lakshminarayanan8894 5 жыл бұрын
Romba nandri iyya ...... Very useful for us .....
@ThamizhElangoNatarajan
@ThamizhElangoNatarajan 6 жыл бұрын
ஐயா அவர்களின் நிலம் காலத்தின் விளக்கம் மிக அருமை. இப்பணியைச் செய்யும் மு.இளங்கோவனாருக்கு எனது வாழ்த்துகள்.
@yogiraja3126
@yogiraja3126 3 жыл бұрын
ஐயா ! உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 4 жыл бұрын
ஐயாவின் திருவடிகளை மனம் மொழி மெய் களால் வணங்குகிறேன் 🙏🙏🙏
@RamGopal-fj9sy
@RamGopal-fj9sy Жыл бұрын
😁😁
@sivanjali4857
@sivanjali4857 2 жыл бұрын
ஐயா 🙏🙏🙏
@kothaisankaran6467
@kothaisankaran6467 5 жыл бұрын
இளங்குமரனார் ஐயா அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இந்தக் காணொளியைப் போல மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்
@usha6445
@usha6445 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏
@sukanyavivekananthan6629
@sukanyavivekananthan6629 4 жыл бұрын
மிக சிறப்பான உரை
@paramankumaresan2678
@paramankumaresan2678 4 жыл бұрын
வணங்குகிறோம் ஐயா.
@kabalieswaran6009
@kabalieswaran6009 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா! கேட்கக் கேட்க இனிமை உணர்வு இயங்கிடுதே!
@kadampeswarannavaratnam4337
@kadampeswarannavaratnam4337 4 жыл бұрын
நும்பணி தொடர வாழ்த்துக்கள். --வாழ்க வளர்க தமிழ் உள்ளம்--
@SundaravadivelB
@SundaravadivelB 6 жыл бұрын
Munaivar Mu. E. Thank you for documenting Aiya's wisdom on Tholkapiyam.
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
ஐயனே ! அருந்தமிழ் கற்க அருள் செய்ய வேண்டும் !
@muhammadshahabudeen5793
@muhammadshahabudeen5793 4 жыл бұрын
[30:22] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பும், மேலும் உங்களுடைய மொழிகளிலும் உங்களுடைய நிறங்களிலும் உள்ள வேறுபாடுகளும் அவருடைய(கடவுளின்) சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன. - இறுதி வேதம்-
@manimaranamarnath5103
@manimaranamarnath5103 4 жыл бұрын
Do not know how to thank you for your service to tamil. Thank you sir. And thank you for the young team who arranged wonderful interview.
@user-gy4wy2gw9d
@user-gy4wy2gw9d 3 жыл бұрын
தேவநேயப்பாவாணரும் சொல்லாராய்ச்சியில் வியந்து பாராட்டிய பெருமகனார் தமிழ்த்திரு.இளங்குமரனார் அய்யா அவர்கள்.
@vv12777
@vv12777 3 ай бұрын
வணக்கம் ஐயா....உங்களைப் போன்ற சான்றோர்களிடம் கல்வி கற்க இயலவில்லை என்று நினைக்கும் போது மனம் மிக வேதனை அடைகிறது....இருப்பினும் இந்த காணொளியை காணும் பேறு பெற்றமையை நினைத்து பெருமை அடைகிறேன் ஐயா....இந்த காணொளியை கொடுத்த ஐயாவிற்கு நன்றி நன்றி....🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍
@silambarasankutti992
@silambarasankutti992 3 жыл бұрын
அருமை அற்புதம்
@Dhillipraja
@Dhillipraja 6 жыл бұрын
Awesome .. Congrats for your great work.. Tamil will live long ..
@rajasekarmass3859
@rajasekarmass3859 5 жыл бұрын
அருமையான உரை. ஐயா
@kaviwincy1213
@kaviwincy1213 2 жыл бұрын
உண்மை தமிழன்,2022 இல் பார்க்கிறேன்
@gomathim8202
@gomathim8202 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@elavarasans6545
@elavarasans6545 Жыл бұрын
நீவிர் பல்லூழி வாழி.
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 3 жыл бұрын
Long live Thamizh Periar Ilangkumaranar
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
தமிழ்ப் பெரியார் இளங்குமரனார் நீண்ட நெடுங்காலம் வாழ்க !
@asarerebird8480
@asarerebird8480 4 жыл бұрын
I was thiru murugaratnavel' s student felt the thamizh breeze
@jayakumar7684
@jayakumar7684 3 жыл бұрын
Om Namasivayam
@yogawareness
@yogawareness 4 жыл бұрын
தெய்த்தமிழே வேட்டிச் சட்டையணிந்து உய்வித்தருளு நல்தொல்காப்பியத்தை எடுத்து இயம்பக்கண்டேன்.
@VNMRGSN
@VNMRGSN 3 жыл бұрын
A GREAT TAMIL SCHOLAR THOLKAPPIYAM IS THE BASE FOR OUR TAMIL
@banuchandar7027
@banuchandar7027 5 жыл бұрын
மிக்க நன்றிகள் பல
@svenkatesan7032
@svenkatesan7032 4 жыл бұрын
சிறந்த ஒப்பீடு ஐயா
@user-sj9oy1om9q
@user-sj9oy1om9q 4 жыл бұрын
வணங்குகிறேன் அய்யா
@dhakshinnavi7224
@dhakshinnavi7224 4 жыл бұрын
வள்ளலார் பற்றி தாத்தா அழும்போது கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது பள்ளி குழைந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் அண்ணா
@dhanalakshmilakshmi9843
@dhanalakshmilakshmi9843 3 жыл бұрын
நீங்க நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுகிறேன். உங்கள் இயம்புதல் மிகவும் அருமை
@factcheck2204
@factcheck2204 4 жыл бұрын
Ayya God Bless you, you are our heritage
@tamilmagal6525
@tamilmagal6525 4 жыл бұрын
உங்கலை வணங்குகிறேன் அய்யா
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
"உங்கலை" மாற்றிச் சொல்க உங்களை என்று.
@nadarasanithivasan7390
@nadarasanithivasan7390 3 жыл бұрын
அருமை💗
@visurevathi8987
@visurevathi8987 4 жыл бұрын
93வயது இளைஞர் இவர்
@senthilvelavan6289
@senthilvelavan6289 2 жыл бұрын
இதனைக் கேட்டமையால் நான் சற்றுக் கொடுத்துவைத்தவனாகிறேன்
@jananibalaji6992
@jananibalaji6992 5 жыл бұрын
What a man!
@niranjanpaul2176
@niranjanpaul2176 3 жыл бұрын
He amazes . He's no ordinary human
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
தமிழுணர்ந்த தாய் போலும் பேராசான்.
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
@@niranjanpaul2176 தமிழை மனதில் எண்ணி எண்ணி அதன் இடங்களையும் எண்ணி எண்ணி கற்றவர் இளங்குமரனார்.
@prakashdurairajan7972
@prakashdurairajan7972 2 жыл бұрын
இவருடைய மரணம் மிகப்பெரிய பேரிழப்பு தமிழ் மக்களுக்கு ... 😭😭😭
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
ஐயா, மீண்டும் பிறப்பார் தமிழகத்தே ! உடலை மாற்றுகின்றார் அவ்வளவுதான்; வருவார் ! வருவார் ! வருவாரே !
@Theglobalpeace
@Theglobalpeace Жыл бұрын
ஐயா பேசியதை கேட்டு மகிழ்ச்சி . நன்றி.
@BCHSuryaPrabhaD
@BCHSuryaPrabhaD Жыл бұрын
ஐயா மெய் சிலிர்த்து விட்டது.
@kumaraguruparanramakrishna7066
@kumaraguruparanramakrishna7066 4 жыл бұрын
தமிழறிஞர் முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களின் அருமையான, செறிவான, நெகிழ வைத்த உரை! பதிவுசெய்து தமிழ்மக்களின் ஆவணமாக்கிய முனைவர் இளங்கோவனாருக்கு நன்றி. உயிர்களின் தோற்றம் (பரிணாம வளர்ச்சிக்கோட்பாடு), இடம்- பொழுது உள்ளிட்ட நிலவியல் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் குறித்து நாமே அறியாமல் பல வளங்களை இழந்துநிற்பதையும், வள்ளலாரின் மனக்குறையையும் மிகவும் அழகாக எடுத்துரைத்த பாங்கு சிறப்பு!👌👍 நன்றி ஐயா.
@rajamr966
@rajamr966 4 жыл бұрын
Miga..Miga..arumai
@SureshKumar-ln1mc
@SureshKumar-ln1mc Жыл бұрын
ஐயாவுக்கு மனதார நன்றி
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 2 жыл бұрын
வெறுமனே தமிழ்பற்று இருந்தென்ன பயன். தமிழ் படித் தேன்;அதைப் பருகத்தான் தமிழ் படித்தேன்.என்ற பாரதிதாசனின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இன்று ஆங்கில மோகம் தமிழ் மக்களை எப்படி சீரழித்து விட்டது. தமிழ் வழிக்கல்வி புத்துயிர் பெற வேண்டும். என்னுயிர் தமிழே நீ எழுச்சியுற வேண்டும். இன்றைய தமிழ் இளைஞர்கள் தமிழை இழந்து கொண்டிருக்கிறார்கள். இதயம் வலிக்கிறது.
@chandrakantharumugam447
@chandrakantharumugam447 5 жыл бұрын
salute iyya
@uyartamil
@uyartamil 3 жыл бұрын
பள்ளி பருவத்தில் எனக்கு பரிசுகள் தந்துள்ளார் திருமிகு இளங்குமரனார் ஐயா
@jbbritto223
@jbbritto223 3 жыл бұрын
Aiya vanagam vanagam vanagam
@manivannanadvocate8055
@manivannanadvocate8055 3 жыл бұрын
Excellent aiya..
@antonywinslows7038
@antonywinslows7038 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤அருமை அருமை ஐயா
@dhanapandiyanviswanathan5986
@dhanapandiyanviswanathan5986 5 жыл бұрын
iyya ennai manniungal tamilil eazuthathaku en irru karam koopi siram thaizthi vanangugiren
@VaiyaiThamilSangam
@VaiyaiThamilSangam Жыл бұрын
எமது ஆசானுக்கு வாழ்த்துகள்
@Ashokkumar_Chennai
@Ashokkumar_Chennai 2 жыл бұрын
Long live our classical Tamil language
@moorthy8189
@moorthy8189 2 жыл бұрын
நன்றி அய்யா ‌தொல்காப்பியம் விளக்க உரை எங்கே கிடைக்கும்...
@vasanthraja1984
@vasanthraja1984 3 жыл бұрын
Nice 👍
@user-dd5bh9dx1n
@user-dd5bh9dx1n 2 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா!👍👍🙏🙏🙏🙏🙏🙏
@anandhiv5641
@anandhiv5641 3 жыл бұрын
தென்றலுக்கு சீதனமாக தெய்வம் தந்தது தமிழைதான் என்று கண்ணதாசன் கூறியுள்ளார் இளைஞர்கள் தமிழை எழுதி படித்து பேசி உயிர்ப்புடன் வைத்து இருக்கவும் தொன்மையான நம்தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு பொக்கிஷமாய் தரவேண்டும்
@rajiselvaraj1779
@rajiselvaraj1779 3 жыл бұрын
அருமை
@dineshanandm4415
@dineshanandm4415 2 жыл бұрын
அருமை, உள்ளம் சிலிர்க்கிறது. ஐயா போன்றவர்களால் தான் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது. எவ்வளவு ஈடுபாடு , அவர் பேச்சில் எத்தனை தெளிவு , எத்தனை ஏக்கம். நிச்சயம் தொல்காப்பியம் படிக்கிறேன். உங்கள் சேவைக்கு நன்றி....
@sharmadapraveen
@sharmadapraveen 3 жыл бұрын
🙏❤❤
@thejswaroop5230
@thejswaroop5230 7 ай бұрын
சீராய் பேசினீர்கள் ஐயா
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 2 жыл бұрын
Arumai ayya
@Jana1987.
@Jana1987. 5 жыл бұрын
Ivangalalam paadhu kaathu vaikanum... Namma sotthu Ivar...
@aathan
@aathan 4 жыл бұрын
தமிழுக்கு இழுக்கு நேரும் போது இங்கே மனித இனமே இருக்க போவதில்லை. இந்த மூடர்கள் கூட்டம் முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. இது தான் உணமை. தமிழ் என்பது உண்மையில் ஒரு அதிசயம்.
@murthyk5405
@murthyk5405 10 ай бұрын
Om namasivaya
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
தொல்காப்பியம் - தொடர்பொழிவு
1:09:06
VAYALVELI THIRAIKKALAM
Рет қаралды 24 М.
தொல்காப்பியம் - அறிமுகம் | ஓம்தமிழ்
45:52
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН