நேரில் தரிசனம் செய்தது போன்று உள்ளது. அருமையான பதிவு பாராட்டுக்கள்.❤❤❤
@k.venkatachalamk.venkatach59243 ай бұрын
நான் இந்த ஆலயம் பலமுறை சென்றிருக்கிறேன் முருகனை தரிசித்து விட்டு வரும் பொழுது அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு சிரமப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்த பாக்கியலட்சுமி என்னும் பாட்டி இருப்பார் அவரைப் பார்த்து விட்டு தான் வருவோம் தனது ஏழு வயதில் வந்த அவர் கிட்டத்தட்ட 70 வருடம் என்னப்பன் முருகனுக்கே சேவகம் செய்து கொண்டிருந்தார்... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🌹
@svikasnatarajan2 ай бұрын
Wow.. , ஓம் முருகா
@saravananslm947918 күн бұрын
🦚முருகா சரணம் முருகா சரணம் 🦚
@bestiesaravanaraj67943 ай бұрын
அருமையான ரசனையான தெய்வீகமான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரா
படைவீடு படைவீடு என்பது ஒரு அரசனானவன், பகைவரை அழிக்கும் பொருட்டு புறப்பட்டு செல்கையில் அங்காங்கே தங்கும் இடமாகும். அவ்வகையில் முருக பெருமானுக்கு ஆறுபடைவீடு உள்ளதாக கூறப்படுகிறது. முருகு என்பது சிவபெருமானின் ஒட்டு மொத்த சக்தியின் வடிவம் ஆகும். சிவன் வேறு முருகு வேறு இல்லை. அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் என்பதின் கருத்தும் இதுவாகும். அஞ்சு முகம் என்பது சிவபெருமானின் ஐந்து முகமாகும். இங்கு அஞ்சுதல் என்னும் அச்சம் பொருள்படாது. ஆறுபடைவீடு என்பதின் நோக்கம் முன்பே பலகாலம் இருந்த முருகு, சூரபத்மன் என்னும் அசுரனை வதைக்க, பூமியில் வந்து தங்கிய ஆறு படைதலங்களாகும். நம்மிள் பெரும்பாலானோர் நினைப்பது, ஒரு முருக அவதாரத்தில் தான் இத்தனை திருவிளையாடலும் நடந்து , பூமியில் பல முருகபதிகள் உருவாகி உள்ளது என்பன. காலங்களுக்கு ஏற்ப பல முருக அவதாரங்கள் பூமியில் நடந்து கொண்டே இருந்துள்ளது. தற்போதும் கூட ஏதோ ஒரு உருவத்தில் நம்மோடு அவதாரம் இருக்கலாம். அதனை உணரும் பக்குவத்தை நாம் யாரும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. சூர பத்மன் வதைக்கப்பட வேண்டிய காரணத்தால் கையிலாயம் விட்டு நீங்கிய முருகன் முதலாவதாக தங்கிய இடம் திரு ஏரகம் என்னும் தலம். இந்த தலம் ஒரு மனதாக சுவாமிமலை என கடந்த நூற்றாண்டு காலங்களில் வரையறை செய்யப்பட்ட ஒன்று. ஆயினும் இது உண்மையில் சுவாமிமலையாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏரகம் என்பது கொங்கில் கீகரை பூந்துறை நாட்டின் பெரிய ஷேத்திரமாக இருக்கும் திருச்செங்கோடே ஆகும். இவ்வூரையே இலக்கியம், செப்பேடுகள், கல்வெட்டுக்களில் ஏரகம் என குறித்துள்ளனர். இரண்டாவது குன்று தோறாடல். இது குன்று தோறும் எழுந்து அருளல் என பொருள் படும். ஒரு ஊரின் பெயர் அல்ல. இதனை எப்படி கண்டறிவது என்றால் , கொங்கில் மேகரை பூந்துறை சேர்ந்த சென்னிமலையை சுற்றியுள்ள குன்றுகளும் சென்னிமலை தலவரலாறும். சென்னிமலையை சுற்றி தங்கிய முருகனே , இந்த அவதாரத்தின் முன்பே தான் எழுந்து அருளியுள்ள சென்னிமலை ஆண்டவர் என்னும் மூர்த்தியை பூஜித்தது. முருகன் தன்னை தானே பூஜித்த ஒரு தலம் சென்னிமலை மட்டுமே ஆகும். மூன்றாவது தலம் திரு ஆவினன் குடி. இது சங்க காலத்தில் ஆவியர் நாடு என வழங்கப்பட்டதும், பின் வையாபுரி நாடு என வழங்கப்பட்டதுமான கொங்கு நாட்டு தென் எல்லையாக குறிக்கப்படும் பழனி மலை சூழ்ந்த இடம். படைவீடு என்னும் வரிசைபடி அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன் குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலும் அதன் அருகே சிறிது தொலைவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுமே ஆகும். மலைகோவில் போகரால் உருவாக்கபட்ட சித்தனாத மூர்த்தி தலம். நான்காவது தலம் திருசீரலைவாய் என்னும் செந்தூர். இத்தலமே சூரனை வதைத்து சேவலாகவும் மயிலாகவும் சூரனுக்கு அருளிய தலம். ஐந்தாவது திருப்பரங்குன்றமும் ஆறாவது பழமுதிர்சோலையும். இதுபோக ஏழாவது படைவீடு ஒன்றும் உண்டு. அது அவரவர் இருப்பிடத்தின் அருகே உள்ள முருக பெருமானின் மலைக்கோயில். ஆறுபடை பயணம் செல்வோர் எப்போதும் ஏழாவது படையாக தங்கள் அருகிலுள்ள மலை கோவிலுக்கு சென்றுவிட்டு தான் வீடு திரும்ப வேண்டும் என்பது சில வருடம் முன்பு வரை இருந்த ஐதீகம். கடந்த நூற்றாண்டில் ஏற்படுத்த பட்ட குழப்பத்தால் ஆறுபடை தலங்களை மாற்றி அமைத்தனர். ஏரகம் என்பதை சுவாமிமலை எனவும், குன்றுதோறாடலை வள்ளிமலை அல்லது திருத்தணி என விவாதித்து திருத்தணியாக முடிவு செய்து கொண்டனர். 16ம் நூற்றாண்டின் பழனிமலை தான செப்பேடு ஒன்றில் முருகனின் முக்கிய ஆறு பதி என திருவேரகம், குன்றுதோறாடல், திருஆவினன்குடி, திருசீரலைவாய், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என குறிப்பிட்டும், அடுத்த திருத்தணி, திருவேங்கடம் முதலான சிறப்பு பெற்ற கோவில்களையும் வரிசைபடுத்தி குறித்துள்ளது. அதாவது திருத்தணி வேறு குன்றுதோறாடல் வேறு என குறிக்கப் பெருகிறது. அந்த செப்பேடு வாசகங்கள் பின்னூட்டத்தில் ( Comments ) சேர்த்துள்ளேன். தற்போது புதிதான ஆறுபடைவீடு வரிசை முறையை பக்தர்களால் கடைபிடிக்கபட்டு வருகிறது. முருக ஷேத்திரங்களாக கருதி இந்த புதிய வரிசை முறையை பின்பற்றலாமே தவிர தற்போதைய முறை ஆறுபடை வழிபாடு என்பது பிழையானது. _______________________________________________ காரணாமூர்த்தியின் அருள் பரிபூரணமாக பரவட்டும்!! சென்னியும் சேமலையும் சேர்ந்து பழனியாகட்டும் என்னும் கொங்குபகுதி பழமொழி நிலைபெறுக!!.
@MohanchinnappanMohanchinnappan2 ай бұрын
Bro shivenmalai erukka
@svikasnatarajan2 ай бұрын
@@MohanchinnappanMohanchinnappan சென்னிமலை குன்றுகளில் சிவன்மலையும் அடங்கும் னு கேள்வி பட்டு இருக்கேன் ங்க
@MohanchinnappanMohanchinnappan2 ай бұрын
அண்ணா நீங்க ஊதியூர் மலைக்கு பொங்க
@svikasnatarajan2 ай бұрын
Sure nga... Nanum nenachitu than iruken nga
@vikrambharat773 ай бұрын
Can you also try to take video on vayalur temple and shivapuri murugan temple
@svikasnatarajan2 ай бұрын
Vayalur murugan Kovil video already in my channel nga... I will try to put siruvapuri Murugan Kovil video soon nga