அய்யாவழி அகிலத்திரட்டு காட்டிய உணவு முறை/Ayyavazhi/Ayyavaikundasami

  Рет қаралды 10,885

Ayya Vaikundasami

Ayya Vaikundasami

3 жыл бұрын

#Ayyavazhi# #Vaikundar# #god# #ayyavali#
1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது.
கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல்,முப்பொருளும் ஒன்றாய் விளங்கும் அய்யா நாராயணருக்கும் மகரச்சிலையாய் திருச்செந்தூர் கடலுள் நின்றிலங்கிய அன்னை மகாலட்சுமிக்கும் மகவாக அய்யா வைகுண்டர் கடலிலிருந்து திருமாலிடம் கலியழிக்கும் விஞ்சைகள் பெற்று அரூபியாக வெளிப்படுகிறார். வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவம்
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"
மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.
தீய சக்திகளை ஒடுக்குதல்
அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.
"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது
வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்
இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்
பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"
அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.
சிறை வாசத்துக்குப் பின்பு
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார்.
வைகுண்டம் போதல்
பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.
வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார்.

Пікірлер: 47
@perumalnadar8321
@perumalnadar8321 3 жыл бұрын
நான் முன்பு அசைவ உணவு சாப்பிட்டு வந்தேன். சைவ உணவிற்கு மாறியபின் முன்பைவிட ஆரோக்கியமாக இருக்கிறேன்.
@siva7843
@siva7843 3 жыл бұрын
நானுமீ தான்
@dineshr520
@dineshr520 2 жыл бұрын
நானும் தான் 1 வருடம் ஆகிறது
@murugeshkumar9997
@murugeshkumar9997 3 жыл бұрын
அனைவரும் பின்பற்ற வேண்டிய அருமையான விளக்கம்.
@AYYAVAIKUNDASAMY
@AYYAVAIKUNDASAMY 3 жыл бұрын
அய்யா உண்டு
@ramelan9110
@ramelan9110 3 жыл бұрын
அருமை அய்யா
@PrabhusDiary
@PrabhusDiary 3 жыл бұрын
அய்யா உண்டு
@seelancrazy7279
@seelancrazy7279 3 ай бұрын
❤❤❤
@harivengadesh3182
@harivengadesh3182 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் அய்யா அய்யாஉண்டு👌👌🙏
@AYYAVAIKUNDASAMY
@AYYAVAIKUNDASAMY 3 жыл бұрын
அய்யா உண்டு
@perumalnadar8321
@perumalnadar8321 3 жыл бұрын
அருமை. அய்யா துணை. அய்யா உண்டு.
@kulasaidasara2023
@kulasaidasara2023 3 жыл бұрын
அருமையான பேச்சு அய்யா
@AYYAVAIKUNDASAMY
@AYYAVAIKUNDASAMY 3 жыл бұрын
அய்யா உண்டு
@user-hh5kc9sr7x
@user-hh5kc9sr7x 3 жыл бұрын
அருமை அய்யா.🙏🌹🌷அய்யா துணை
@chandrabose2150
@chandrabose2150 3 жыл бұрын
Ayya undu
@emannadurai4246
@emannadurai4246 2 жыл бұрын
அய்யா உண்டு 🙏👍
@SudhaSudha-sc6zh
@SudhaSudha-sc6zh 3 жыл бұрын
Ayya undu 🙏🙏🙏
@kalkithangavel1326
@kalkithangavel1326 Жыл бұрын
Omsanthi brother Ayyaa unndu Ayyaa thunnai 🙏
@karupsamysiva1651
@karupsamysiva1651 3 жыл бұрын
ஓம் சாந்தி பிரதர்
@siva7843
@siva7843 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🙏சிவசிவ ஹர ஹர
@mangammalshankarpandyan4657
@mangammalshankarpandyan4657 3 жыл бұрын
Ayya undu🙏🙏🙏
@AaAa-qi1ej
@AaAa-qi1ej 2 жыл бұрын
அய்யா 🙏துணை
@t_s_raja_kalakala5952
@t_s_raja_kalakala5952 3 жыл бұрын
Ayya undu 🙏🙏🙏🙏🙏🙏🙏
@murughananthamm1560
@murughananthamm1560 2 жыл бұрын
Thankyou sir very good message
@Rajesh-wu6uo
@Rajesh-wu6uo 2 жыл бұрын
Very correct explanation🙏. I changed when I completely understood Akhilathirattu ammanai, since then eating only vegetables . My advice is to everyone that eat only vegetables. Don't eat even egg and fish. Reduce your anger as much as possible
@tamilentertainment7522
@tamilentertainment7522 3 жыл бұрын
Sivayumargal pathi oru videove podunga bro
@b.krishnamaniappukutti4530
@b.krishnamaniappukutti4530 3 жыл бұрын
சரி அய்யா
@tamilentertainment7522
@tamilentertainment7522 3 жыл бұрын
@@b.krishnamaniappukutti4530 thanks ayya
@tharmlingamlingam7004
@tharmlingamlingam7004 2 жыл бұрын
ஐயா உங்கள் வீடியோ பார்த்தேன் எனக்கு சாமி தோப்பு தான் நானும் ஐயாவை மட்டும் தான் நம்புவேன் ஐயா நல்லவர் அய்யா வழிகாரர்கள் அப்படியல்ல ஐயா கிட்ட எந்த தவறும் கிடையாது அய்யா வழி மக்களிடம் எல்லா தப்பும் இருக்கு அதற்கு என்ன செய்ய வேண்டும் நீங்க சொல்லுங்க ஐயா துணை ஐயா துணை அய்யா துணை ஐயா சிவ சிவ அரகரா வைகுண்ட காப்பாத்துங்க எல்லா உயிர்களும்
@tharmlingamlingam7004
@tharmlingamlingam7004 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vasahancholvilangum6493
@vasahancholvilangum6493 2 жыл бұрын
அய்யா சைவ உணவு உண்டு வாழ்ந்தார். கத்தரிக்காய் (ஆகாயம்) பூசணி (பூமி) வெள்ளரி (நீர்) வாழைக்காய் (வாயு) மிளகாய் (நெருப்பு) மட்டுமே சமையலில் ‌பயன்படுத்தினார்.
@AYYAVAIKUNDASAMY
@AYYAVAIKUNDASAMY 2 жыл бұрын
அய்யா உண்டு
@needhitharasu9540
@needhitharasu9540 3 жыл бұрын
Mandhanin Seyalpadukal Anathirkkum Avan unnum unavukalil irundudhan varukiradu
@parthibanvijayan2784
@parthibanvijayan2784 2 жыл бұрын
6 வருடங்கள் ஆகின்றன ஐயா. சன்மார்க்கம் நெறிமுறை பின்பற்றிய பின். தமிழ் மார்க்க நெறிகள் எப்போதும் உயர்ந்தாத இருக்கின்றது.
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 2 жыл бұрын
அய்யாவழி க்கும் அம்மண்வழிக்கும் என்ன வித்தியாசம்.. முஸ்லீம் மதத்திர்க்கும் அய்யாவழி க்கும் உள்ள ஒற்றமை என்ன கிறிஸ்தவ மதத்திர்க்கும் அய்யாவழிக்கும் உள்ள ஒற்றுமை என்ன. இந்து மதத்திர்க்கும் மதம் இல்லாத அய்யாவழி க்கும் உள்ள வித்தியாசம் என்ன
@pravin1923
@pravin1923 2 ай бұрын
அய்யா வழி என்பது ஒரு துறவியின் போதனை முறை தானே தவிர அது மதம் இல்லை. சர்வவல்லமையுள்ள தேவன் ஈசனே . சைவம் அனைத்து சமயங்களிலும் மூத்தது. இதை சொல்லவே அய்யா வைகுண்டர் வந்தாரே தவிர தனி மதம் உண்டாக்க இல்லை. யார் வந்தாலும் அவர் நல்ல கருத்துக்களை சொன்னாலும் அவரை கடவுள் என்று வணங்குவது. அவருக்கு புராணங்கள் எழுதி விடுவது 😂😂அய்யா வைகுண்டர் ஒரு சித்தர் மட்டுமே
@duraibalan2606
@duraibalan2606 3 жыл бұрын
அய்யா உண்டு
@AYYAVAIKUNDASAMY
@AYYAVAIKUNDASAMY 3 жыл бұрын
அய்யா உண்டு
@ramarram2305
@ramarram2305 3 жыл бұрын
அருமை அய்யா
@tamilentertainment7522
@tamilentertainment7522 3 жыл бұрын
Ayya undu
@paulsinghnadar9364
@paulsinghnadar9364 2 жыл бұрын
அய்யா உண்டு 🙏👍
@HariRam-wu2pw
@HariRam-wu2pw 2 жыл бұрын
அய்யா உண்டு
@dharmalingam3415
@dharmalingam3415 2 ай бұрын
அய்யா உண்டு
@dharmalingam3415
@dharmalingam3415 2 ай бұрын
அய்யா உண்டு
@jlingaduraj1605
@jlingaduraj1605 Жыл бұрын
அய்யா உண்டு
@jeyanadar8482
@jeyanadar8482 Жыл бұрын
Ayya undu
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 524 М.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 53 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 3,5 МЛН
எப்போது உண்மையை உணர்வாரோ பால.ஜனாதிபதி
27:25
Namathu Ayya நமது அய்யா
Рет қаралды 2,1 М.
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 524 М.