Blissfully Divine voice, feeling blessed on hearing this every time
@saravanakumars7339 Жыл бұрын
சரஸ்வதி தாயேபோற்றி
@mouthoukoumarane87632 жыл бұрын
அனைவரும் உள்ளத்தில் உள்ளே இருப்பவளே ஸ்ரீசரஸ்வதி தேவி கல்வி கடவுளே தாயே போற்றி போற்றி. ஸ்ரீ சரஸ்வதி அந்தாதி பாடல் பாம்பே சாரதாராகவ் குரலில் கேட்க ஆனந்தமாக இருக்கிறது. Sister உங்கள் பக்தி சேவை மகத்தானது நன்றி மிக்க நன்றி sister.. இனிய சரஸ்வதி பூஜை
@cheramannan Жыл бұрын
Kavi Chakravathi Kamban's forgotten piece rendered so beautifully. Excellent.
@MaduraiKasiKumaran2 жыл бұрын
கலையரசியை போற்றி தீந்தமிழில் பாடிய கம்பனின் கற்கண்டுக் கவிமாலையை. இசையோடு தமிழ்ராகத்தில் பாடி அம்மை சரஸ்வதியை பிரார்த்தனையாய் வந்த 30 பாடல்கள் மிக அருமை. தங்களின் இறைத்தொண்டு மென்மேலும் சிறந்தோங்க மகாபாரதி அருள்புரியட்டும். வாழ்வில் உற்ற சாரதியாய் துணையாய் தொடரட்டும்.
@jeyak6045 Жыл бұрын
Arumai
@kokulkl2 ай бұрын
Sarasvathi Thai portti.kalaimagal pottri.very good devotional kavasam.
@user-sa79ba782 жыл бұрын
கல்லும் சொல்லாதே கவி என்ற அவ் வார்த்தையை கேட்டவுடன் என் மனதிற்கு இவ்வாறு தோன்றியது கல்லும் சொல்லுமே பல கவியே கலைமகள் உன் அருள் இருந்து விட்டால் சொல்லும் சொல் எலாம் வென்றிடுமே சொல்லின் செல்வி உன் அருள் இருந்தால் கவி அரசி இ இசையரசி இ இ வெல்லும் சொல்லின் பேரரசி இ இ இ இவ்வாறு எழுதினேன் நான் கலைமகள் அருளால் இன்று வரை 600 பாடல்கள்களை எழுதி உள்ளேன் அந்தாதி நன்றாக பாடி இருந்தீர்கள் நன்று
@sabaricrr63622 жыл бұрын
Arumai
@shihara-dk3zv11 ай бұрын
You tube il podunga please
@SivananthagowryKanagalin-ut5we Жыл бұрын
அம்பிகை யைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்.❤❤❤❤❤❤❤❤❤
@muthukumaranganesan87392 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@sharun3735 Жыл бұрын
Amma saraswati thayee en pillaigaluku nal arivum kalvium thaarum ammaiye. 12 th board exam and Neet la nala padi thi nal mathipen petru vayathul vala nin thunai venum amma... ❤
@madhavsugumar48672 ай бұрын
கேட்க..கேட்க..கண் கலங்கி...
@songslyricswriterinyoutube Жыл бұрын
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே யிருப்பளிங்கு வாரா திடர். படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும் அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால் கல்லுஞ்சொல் லாதோ கவி. ஸ்படிகம் போன்ற வெண்ணிறமும், பவளம் போன்ற சிவந்த இதழ்களும், தாமரை கரங்களும், உடுக்கை போன்ற சிறுத்த இடையை கொண்ட சரஸ்வதி தேவியை இடைவிடாது அல்லும் பகலும் துதித்தால் கல் நெஞ்சம் படைத்தவனும் மனம் கணிந்து கவிபாடும் வரத்தை அன்னை தருவாள். சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற் றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருகமே பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1 வெள்ளை தாமரைப்பூவில் அமர்ந்து அருளும் சரஸ்வதிதேவியே! அடுக்கடுக்காக நல்ல சொற்களை சொல்லும் திறனை கொடுத்தவளே. என் மனமாகிய தாமரைப்பூவில் இருப்பவளே. தாமரை மலரில் இருந்து இந்த உலகை சிருஷ்டி செய்யும் நாதன் பிரம்மன் பாடும் வேதத்தில் ஒளிர்பவளே. பிரகாசமான உன் தாமரை பாதங்களை நான் வணங்குகிறேன்(1) வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற் சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால் உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. 2 வளைந்த வில் போன்ற நெற்றியும், மூங்கில் போன்ற தோள்களும், தேமல் அழகூட்டும் மார்பகமும், வெண்ணிலா போன்ற மேனி அழகும், காந்தியும், காதில் அணிந்த குண்டலங்களோடு தொட்டு விளையாடும் அகன்ற கருவிழிகளையும் கண்டு அன்பால் பிரம்மன் குழையும் அழகியே. நான்கு வேதங்களாக விளங்குபவளே(2) உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித் தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. 3 உலகில் பேசப்படும் எல்லா கலைகளையும் இந்த பூமியில் அளிக்க வல்லவர் வேறு யார் இருக்கிறார்கள் தாயே. உன் அருள் சுரந்த பாலை எனக்கு அளித்து எனக்கு வாழ்வளித்த மாமயிலே. வாசமிக்க மலர்களை கூந்தலில் அணிந்தவளே. வெண்தாமரையில் அமர்ந்த பிரம்மனது தேவியே(3) இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும் செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே. 4 இயல்தமிழால் உன்னுடைய திருநாமங்களை சொல்லி துதிப்பதற்கு முயன்றேன் அம்மா. ஆனால் முடியவில்லை தாயே. உன் செயலால் இந்த மூவுலகங்களும் இயங்குகின்றன. கலைமகளே உன் திருவருள் பெற முடியாதபடி புறம் தள்ளிவிடாமல் என்னையும் அன்புடன் ஆட்கொள்வாய் அம்மா(4) அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும் திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான் இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே. 5 சூரியன் உதிக்கின்ற வேளையிலும் சந்திரவொளி போல் குளிர்ந்த அழகுடன் பிரகாசிக்கும் பொலிவு உடையவளே நான்கு திசைகளிலும் முகங்கள் உடையவரும் சதா வேதங்கள் ஓதும் பிரம்மனுடன் இனிது மகிழ்ந்து உறையும் புது மலர் போன்றவளே. என்னை ஆட்கொள்ளும் மயில் போன்ற சாயல் உடையவளே(5)
@songslyricswriterinyoutube Жыл бұрын
மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர் வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம் பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. 6 மயிலே! அழகிய பெண்யானை போன்ற நடையழகி! இளமானே! குயிலே! பச்சை வண்ண கிளியே! அன்னமே! மனதில் உள்ள இருள் அகற்றும் ஒளிச்சுடரே! நிலவொளி வீசும் மின்னல் போன்றவளே! நான் உன்னுடைய பொற்பாதங்களை வணங்குவது அல்லால் வேறு தவம் செய்வதற்கு இல்லையே அம்மா(6) பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும் வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ் சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. 7 உன்னுடைய பாதங்களில் அன்புடன் பணிபவர்களுக்கு பல கலைகளையும் வேதாந்த முக்தியும் தருபவளே பாரதி. வெண்மையான இதழ்களை உடைய தாமரை மலரிலும் என் சிந்தையுள்ளும் விளங்குபவள். உன் அருள் மட்டும் இருந்துவிட்டால் இந்த உலகில் எனக்கு செயற்தரிய செயல்கள் என்று எதுவுமேயில்லை. எல்லாமே எளிதாகும்(7) இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக் கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன் றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப் பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே. 8 உன்னை துதித்து உன்னை என்னுள் உணர்கிறேன் அம்மா. எண்ணென்(8*8=64) கலைகளாக விளங்குபவளே. கோவை கனிபோல் சிவந்த இதழ் கொண்ட வெண்ணிற பாவையே. தாமரைமலர் உறை பிரம்மனின் நாயகியே. இந்த அகிலாண்டத்தையும் படைத்தவளே. மணமுள்ள வெண்தாமரையில் உறையும் வேத ஸ்வரூபினி(8) பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப் பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. 9 செய்யுளில் உள்ள உறுப்புகள் 6 வகைப்படும். அவை எழுத்து(பா), அசை, சீர், அடி, தலை, தொடை ஆகியவை ஆகும். இவை யாப்பு இலக்கணம் எனப்படும். இவையெல்லாம் அருள்பவள் கலைவாணி. அவள் எங்கெல்லாம் உறைகிறாள்? வயதில் முதிர்ந்த பிரம்மாவின் நாவிலும், நான்கு வேதங்களிலும், வாசமிக்க வெண்தாமரை மலரிலும் உள்ளாள். அதோடு மலர் போன்ற அன்னையின் பாதத்தை பதித்தவர் மனதிலும்தான் சரஸ்வதி வசிக்கிறாள்(9) புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர் சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. 10 தாயே! உன்னை நான் புத்தியில் உள்ள அறியாமை என்னும் இருளை போக்கும் நிலவு என்பதா? மாலைவேளையில் ஒளிரும் சுடர்விளக்கு என்பதா? வேதம் ஓதும் பெரியோர்கள் மத்தியில் பிரகாசிக்கும் ஞானசூரியன் என்பதா? ஒளிவீசும் மணிமாலை என்பதா? திருமாலின் உந்தி கமலத்து உதித்த பிரமனது தேவியே! உன்னை எப்படியெல்லாம் புகழ்வது?(10)
@songslyricswriterinyoutube Жыл бұрын
ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய் கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம் திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. 11 நீ ஒருத்தி! ஒன்றுமே தெரியாத என் மனதில் வந்து குடிகொண்டவள். வெண்தாமரையில் விளங்குபவள். 8*8=64 கலைகளாக கருத்தில் இருப்பவள். என்னுடைய ஐம்புலன்களும் கட்டுக்கடங்காமல் அலையவிடாமல் என்னை திருத்தியவளே. நான்முகனான பிரம்மனது நாயகியே! உன்னை நான் என்றென்றும் மறக்கவே மாட்டேன் தாயே(11) தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும் யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. 12 தேவரும், ஈஸ்வரனும், வேதம் ஓதும் மூவரும், அரக்கர் முதலான அனைத்து பேர்களும் , முனிவர் கணங்கள் எல்லோரும் ஏனைய எல்லா உயிர்களும் வெண்மையான இதழ்கள் கொண்ட தாமரை மலரில் விளங்கும் தேவியாகிய உன்னுடைய அருளினால் தான் ஞானம் பெறுகிறார்கள். அனைத்து உயிர்களிலும் உணரும் அறிவாக விளங்குபவள் நீயே அன்றோ தாயே!(12) புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத் தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே. 13 ஞானம் என்னும் புரிந்துகொள்ளும் சக்தி என்ன செய்கிறது என்றால் சிந்தையில் புகுந்து புகுந்து அறியாமையை போக்குகிறது. ஆராய்ந்து ஆராய்ந்து எல்லாவற்றின் உட்பொருளையும் உணரச்செய்து அதனால் ஏற்படும் ஆனந்தம் தேனாக ஊறி மனம் தெளிவடைகிறது. அறிவு இன்னும் விசாலமாக விரிகிறது. எல்லாம் 64 கலைகளாக வேத ஸ்வரூபமாக விளங்கும் உன் அருளால் தானம்மா(13) வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம் பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும் போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. 14 வேதமும் வேத முடிவும் அதன் முடிவில் விளங்கும் உண்மையான மெய்பொருளான பிரம்மஞானமும் அதனை பிரித்து அறியும் வழியில் பேரறிவின் உருவும் அதன் தத்துவங்களின் மூலப்பொருளாகவும் விளங்குபவளே. இசைபாடும் வண்டுகள் ஆர்க்கும் வெண்தாமரையில் உறைகின்ற தேவியே! சரஸ்வதி (14) நாயக மான மலரக மாவதுஞான வின்பச் சேயக மான மலரக மாவதுந் தீவினையா லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந் தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. 15 மனமாகிய மலரின் நடுவில் ஞானமாகிய இன்பம் உறைவதும் உண்டு. அதே மனம் தீவினையால் வஞ்சகமாக நிலை மாறுவதும் உண்டு. ஆனால் எல்லா உயிர்களுக்கும் நலமே வாழும் அருளை தருவது மகரந்தம் பொருந்திய ஹ்ருதய கமலமாகிய வெண்தாமரையும் அதில் அமர்ந்துள்ள சரஸ்வதி தேவியும்தான்(15)
@songslyricswriterinyoutube Жыл бұрын
சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும் உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற் சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும் ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. 16 தாயே! சரஸ்வதி! தாமரை மலரே உன் திருக்கோயிலும். இரு கைகளும் இரு பாதங்களும் இரு தொடைகளும் உனது உந்தியும் காரிருள் போன்ற கருங்கூந்தல் சூழ்ந்த முகமும் நோக்குகின்ற விழிகளும் சிவந்த இதழ்களும் உன்னை காணும் ஒவ்வொரு யுகமும் ஒரு கனப்பொழுதாகும் புகழ் உள்ளவளே!(16) கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள் அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத் தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற் பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. 17 கண்ணாகிய தாமரைமலர் கருந்தாமரை. உன்னுடைய இரு தாழ்களும் அரிய செந்தாமரை. மான் போன்றவளே! உன்னை மொத்தத்தில் உன்னை மனம் வீசுகின்ற தாமரை கூட்டமாகவே காண்கிறேன் அம்மா(17) தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன் எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான் கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. 18 பழமையான வேதம் உன் பாத கமலங்கள் தன்னுள் பொதிந்திருக்கும் ஒளி என்று சொல்லும். பிரம்மா அவைகள் நான் தாங்கும் மகுடம் என்கிறார். தேவர்கள் மனத்துயரம் மாற்றும் மருந்து ஞானஸ்வரூபியின் பாதங்கள் என்பர். ஆனால் அடர்ந்த கூந்தல் அமைந்த கலைமங்கையின் பாதங்கள் தலையில் சூடுகின்ற மலர்கள் என்பேன் நான்(18) கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக் கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக் கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார் கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. 19 வெள்ளை தாமரையில் அமர்ந்திருக்கும் கலைவாணி! மனம் விரும்பிய அனைத்து தேவர்களும் கைகளை குவித்து வணங்கும் மென்மையான மலர் போன்றவள். கண்களில் மலர்ந்து அருளும் கருணையினால் அவளை கண்டு தன் மனதினில் வைப்பவர் வினை தீர்ப்பவள் வேத ஸ்வரூபிணி சரஸ்வதி தேவி(19) காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும் நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும் ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. 20 தேவி! சரஸ்வதி! சிவனின் பாதியான மலைமங்கையும் நாரணின் மார்பில் உறையும் திருமகளும் நான்கு தந்தங்களை உடைய யானைகளை கொண்ட ஐராவதத்தை கொண்ட தேவேந்திரனின் மனைவியாகிய இந்திராணியும் மற்றும் உள்ள தேவலோக மங்கைகளும் உன்னுடைய சொற்களை ஏற்கும் அடியவர்களாகவே இருக்கிறார்கள் அம்மா(20)
@songslyricswriterinyoutube Жыл бұрын
அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின் விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. 21 புகழ் மணம் வீசும் வேதத்தின் ஆதியும் நீ அந்தமும் நீ. வெண்தாமரையில் விளங்கும் ஒளியே! எல்லையில்லாத ரத்தின வடிவானவளே! உன்னை மகிழ்ந்து பணிபவர் மன இருள் மயக்கத்தையும் குழப்பத்தையும் போக்கும் விடிவெள்ளியே. என்னை புரிந்துக்கொண்டு ஆண்டு அருள்புரிபவர்.உன்னை அல்லால் யார் உள்ளார் தாயே.(21) வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர் கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர் மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற் சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. 22 உன்னை தவிர கதி எனக்கு வேறு இல்லை என்பதை உன் அடியார்கள் இடையே இன்னார் என்று கூறாவிட்டாலும் நான் அதை குறிப்பால் உணர்ந்துகொண்டேன். என்னுடைய ஐம்புலன்களும் என்னை தீய வழிகளில் போகவிடாமல் நல்வழி நன்நெறியில் சேரும் வழியை எனக்கு அருள்வாய் வெண்தாமரை வாணியே(22) சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும் சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. 23 வாணி சரஸ்வதியின் பொற்றாமரை பாதங்களில் சரண் அடைந்தவர்களுக்கு வாக்கு விலாசம், நாவன்மை தன்னால் உண்டாகும். அதனால் பலவிதமான தற்கமார்கங்களால் எவர் எதிர்த்தாலும் அவர்களை வெட்டி பேசலாம். கேள்வி கணைகளால் பணிய வைக்கலாம்.தன் கருத்தை ஒத்துக்கொள்ள வைக்கலாம். சாதிக்கலாம். அதுமட்டுமன்றி முக்தியையும் அடையலாம்(23) அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும் உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப் படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும் தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. 24 நாம் வணங்க வேண்டிய அன்னையின் திருவுருவ அடையாளங்கள் எவை என்றால் : வெள்ளை தாமரை பூவில் இருப்பாள், கரங்களில் ஓடும் மரியாதையும் வைத்திருப்பாள், மிகவும் நுண்ணிய கொடி போன்ற இடையினை உள்ளவள், வேத சார்பாக இருப்பவள். எல்லா உயிர்களையும் படைக்கும் தேவி. வெண்தாமரை மலர்களால் ஆன மாலையை அணிந்திருப்பாள். அவளை அல்லாமல் வேறு யாரை தொழுவது(24) தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து விழுவார் அருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித் தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. 25 சொல்லின் செல்வியான சரஸ்வதி தேவி மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள் இரு கை கூப்பி தொழுது கூப்பிடுவார்கள். ப்ரதக்ஷனம் செய்வார்கள். போற்றி குதித்து தன்னை மறந்து விழுவார்கள். வேதத்தின் உண்மை பொருளை உணர்வார்கள். மெய் சிலிர்த்து அழுவார்கள் என்றால் கண்ணீர் சொரியும் என் நிலைமை என்ன? (25)
@songslyricswriterinyoutube Жыл бұрын
வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும் பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின் மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும் உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. - 26 ஒருவன் வாழ்வில் சேர்த்து வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைக்கு உண்டான செல்வமும் பொருளும் மற்ற பொருட்கள் அனைத்தும் நிலையானவை அல்ல. இந்த உலகில் பெருமைமிக்க செல்வம் அழியாத செல்வம் மேன்மையான செல்வம் சேமிக்கும் செல்வம் எதுவென்றால் கலைமாது ஆகிய சரஸ்வதி அருள்கின்ற ஞானம் தான்(26) பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித் தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக் கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. - 27 செல்வத்தால் எல்லாம் பெறலாம் என்று நினைப்பது உண்மையில்லை. செல்வமாய் அருளாய் புரிந்து கொண்டவர்களுக்கு பேர் ஒளியாய் அறியாதவர்க்கு இருளாய் இருப்பவள் சரஸ்வதி என்னும் அழகிய உருவம் கொண்ட அன்னை(27) இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர் மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல் கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. - 28 சரஸ்வதி தேவியை மனதில் வைத்து ஆராதிப்பவர்க்கு முகத்தில் தேஜஸ் பொலிவு உண்டாகும் மேனி சிலிர்க்கும்.கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகும். சொல்லுகின்ற வாக்கு பலிக்கும். மனம் மிகவும் தெளிவாகும். மகிழ்ச்சி பெருக்கால் முகத்தில் புன்னகை மலரும். மனம் சுழல்கின்ற ஆற்றை போல் கலங்கினால் தன்னால் தெளிவடையும். இத்தனையும் அன்னை அருளால்தான்(28) கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும் புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும் பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. - 29 மிகப்பெரிய செல்வமான ஞானரூபிணி கருங்கூந்தலும் கார் விழிகளும் சிவந்த கரங்களும் பாதங்களும் செவ்விதழ்களும் வெண்ணிறமான வாசம் மிக்க தாமரை திருமேணியும் பூண்ட நகைகள் ஆடைகள் அனைத்தும் அந்த அழகும் என் மனதை விட்டு அகலாது என் நெஞ்சில் மட்டுமல்ல நாவிலும் உன் நாமமே விளங்கும் அம்மா(29) பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில் இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லாவுயிர்க்கும் பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந் திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. - 30 பெரும் செல்வமும் எதிலும் வெற்றியும் அருளும் தேவியும் ஆகி என் நெஞ்சில் குடிக்கொண்டு விளங்கும் சொல்லின் செல்வியை போற்றி பணிகின்ற எல்லா உயிர்களுக்கும் என்னவெல்லாம் கிட்டும்: நிலையான ஞானம் கிட்டும், உயர் வேதத்தின் சாரம் கிட்டும், நல்ல செல்வ வளமும் சேரும், அழியாத முக்தி நிலையை தரும் என்பது கம்பரின் சத்திய வாக்கு(30)
@theconnectassociatess1152 жыл бұрын
உங்களின் முயற்சிக்கு நன்றி மதிப்பற்ற புதையல்
@rajamathangi56952 жыл бұрын
Hi my name IAM rajamathangi saravarthi song is super very noice positive engry Durga mahalakshmi saravarthi song. Is very powerful. Only voice is super song is very wounderful
@jeyabalann-zg8yf Жыл бұрын
Thank you rasakalaivani saradha raaghav super voice