Рет қаралды 64,185
அனைவருக்கும் வணக்கம்,
இன்றைய நாள் இனிய நாள் ,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததியில் அட்சய ராசியை எப்படி கணக்கிடுவது?
லக்கனம் பத்து வருடத்திற்கு மாறும்.
அட்சய ராசி என்பது தசா புத்திகளின் நகர்வுகள்.
பிறக்கும் பொழுது ஒருவருக்கும் சந்திரனுடைய நட்சத்திரம்,குருதிசை நடப்பில் அதனுடைய நட்சத்திரம் அட்சய ராசி என்று குறிப்பிடுகிறோம்.
நம்முடைய ஜென்ம நட்சத்திரம் பிறப்பு திசையாக குறிக்கப்படுகிறது.
பிறப்பு திசையில் இருந்து ஒவ்வொரு திசையாக மாறி வரும்.சந்திரனுக்கு அடுத்து செவ்வாய் தசை,செவ்வாய்க்கு அடுத்த ராகு தசை,ராகுக்கு அடுத்து குருமகாதசை நடப்பில் வரும்.ஒவ்வொரு தசையாக நகர்ந்து வரக்கூடிய திசைகளே அட்சய ராசி என்கிறோம்.அட்சய ராசியை கணக்கீடு செய்வது எப்படி?
ஒரு ராசியுடைய தசா வருடத்தை நான்காக பிரிக்க வேண்டும்.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம்.
அட்சய லக்கனத்தை ஒரு லக்கனத்திற்கு 9 பாகங்களாக பிரித்தோம்.
நட்சத்திரத்தில் சந்திரன் செல்லக்கூடியது அட்சய ராசி என்கிறோம்.
நட்சத்திரத்தின் அளவு என்ன என்பது தசாபுத்தி வருடங்கள்.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம்.
உதாரணத்திற்கு முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் அது அவர்களுடைய ஜென்ம ராசி.
அஸ்வினி நட்சத்திரம் ஜென்ம ராசியாக இயங்கும் பொழுது அதனுடைய அதிபதி கேது பகவான்,
கேது பகவானுடைய தசை தான் உங்களுக்கு ஜெனன கால தசையாகும்.
*கேது உடைய திசை வருஷங்கள் 7 வருடம்,இந்த 7 வருடத்தை 4 பாகங்களுக்கு பங்கீடு செய்ய வேண்டும்.
கேது உடைய பாதங்களை நான்காக பிரித்தால் ஒரு பாதத்தின் அளவு 21 ஆக வரும்.
7 வருடங்களை மாதங்களாக மாற்றி 4ல் வகுத்தால் 21 மாதம் ஒரு நட்சத்திர பாகத்திற்கு வரும்.
இதுதான் அட்சய ராசியுடைய அளவீடு முறைகள்.
அட்சய லக்ன பத்ததி இரண்டாவது நூலில் அட்சய ராசியுடைய அளவீடுகள் பற்றி கொடுத்திருக்கோம்.
அட்சய ராசியை எப்படி கணக்கிடுவது என்பது பற்றியும் இதில் குறிப்பிட்டுள்ளோம்.
அட்சய லக்ன பத்ததியின் இரண்டாவது பாகத்தில் 90 ஆவது பக்கத்தில் அளவீடுகளை குறிப்பிட்டுள்ளோம்.
ஒரு திசை, தசையினுடைய வருடத்தை நான்காக பிரித்து ஒரு பாதத்திற்கு இத்தனை மாதங்கள் குறிப்பிட்டுள்ளோம்.
*கேது தசை 7 வருடம்,ஒரு வருடம் 9 மாதம்,ஒரு வருடம் 12 மாதங்கள் 9 மாதம் ,12 +9 =21 மாதங்கள்.
*சுக்கிரனுடைய தசை 20 வருடம்,
இதை நான்காக பிரிக்கிறோம்.பரணி 1, 2, 3, 4, பிரிக்கும்பொழுது 20 வருடத்தை பங்கீடு செய்யும் பொழுது ஒரு நட்சத்திர பாதத்திற்கு 5 வருடம் ஆகும்.
ஐந்து வருடத்தை மாதங்களாக மாற்றும்போது ஒரு நட்சத்திர பாதத்தினுடைய அளவு 60 மாதங்கள்.
இது சுக்கிரதசைனுடைய பங்கீடு.
*சூரியனுடைய தசை 6 வருடம்,
அதை நான்காகப் பிரிக்கும்பொழுது ஒரு வருடம் ஆறு மாதம்,ஒன்றரை வருடத்தில்
12 மாதம் இருக்கும் பொழுது 12 + 6 =18, சூரியனுடைய பங்கீடு 18.
சூரியனுடைய நட்சத்திரத்திரம் ஒரு பாதம் மட்டும் செல்லக்கூடிய அளவு 18 மாதங்கள்.
*அடுத்து சந்திரனுடைய தசை 10 வருடங்கள்.
10 வருடங்களை நான்காகப் பிரிக்கும்பொழுது இரண்டரை வருடம் ஒரு பாதத்திற்கு,
30 மாதங்கள் சந்திரனுடைய ஒரு பாதத்திற்கான அளவீடு.
*அடுத்து செவ்வாய் உடைய தசை 7 வருடம், அதை ஒரு நட்சத்திர பாதமாக பிரிக்கும்பொழுது 21 மாதங்கள்.
*அடுத்து ராகு உடைய தசை 18 வருடம்.
ராகு உடைய நட்சத்திரங்களான
திருவாதிரை, சதயம், சுவாதி நான்காக பங்கீடு செய்யும்பொழுது 4 வருடம் 6 மாதங்கள் ஒரு நட்சத்திர பாதத்திற்கு 54 மாதங்கள்,
*அடுத்து குரு மகா தசை 16 வருடம்,
இதை நான்காக பங்கீடு செய்யும் பொழுது,
ஒரு நட்சத்திர பாதத்திற்கு 48 மாதங்கள் ஆகும்.
*அடுத்து சனி மகா தசை 19 வருடம்,
அதில் ஒரு நட்சத்திர பாதத்தினுடைய அளவு 57 மாதங்கள்.
*அடுத்து புதன் மகா தசை 17 வருடம்,ஒரு நட்சத்திரத்தின் உடைய பாதஅளவு 51 மாதம்.
இந்த முறைகளில் தான் அட்சய ராசி பிரிக்கப்படுகிறது.
ஒரு நட்சத்திரத்திற்கான பாதஅளவு எப்படி பிரிக்கப்படுகிறது என்பதை கூறுவதுதான் அட்சய ராசி.
உடல் என்பது அட்சய லக்கனம்,மனம் என்பது அட்சய ராசி,உடல் வலிமையாக இருந்து மனம் சரியாக இல்லை என்றாலும்,
மனம் வலிமையாக இருந்து உடல் சரியாக இல்லை என்றாலும் ,ஜாதகர் இயங்க முடியாது.
அட்சய ராசியும் ,அட்சய லக்கனம்மும் சிறப்பாக செயல்பட்டால் நமக்கு வாழ்வில் நன்மைகள் கிடைக்கும்.
அட்ச ராசியை எப்படி நகர்த்துவது?
சந்திரனுடைய திசையில் மூன்று நட்சத்திரங்கள்
ரோகிணி ,ஹஸ்தம்,திருவோணம்,
இதில் அட்சய ராசி இயங்குவதை பார்ப்போம்.
ஜாதகருக்கு சந்திரனுடைய தசை நடப்பில் இருக்குனா அவருடைய அட்சய ராசி என்ன என்பதை அவருடைய ஜெனன ராசி மூலம் கண்டுபிடிக்கலாம்.
ஜென்ம நட்சத்திரம் அஸ்வினியில் பிறந்த ஒருவருக்கு சந்திரனுடைய தசை நடப்பில் இருக்குமானால் அவருக்கு ரோகிணி நட்சத்திரத்திரத்தின் சந்திரன் தசையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருக்கு சந்திரனுடைய தசை நடப்பில் இருக்குமானால் அவருக்கு ஹஸ்தம் நட்சத்திரம் சந்திரனுடைய தசையாக இயங்கும்.
நம்முடைய ஜெனன நட்சத்திரங்கள் அடுத்தடுத்த தசையாக சந்திரனில் இயங்கும்.
இது அட்சய ராசி நகரும் விதம்.
மென்பொருளில் அட்சய ராசி கண்டறியும் விதம்.
இந்த உதாரண ஜாதகத்தில் அவருடைய நட்சத்திரத்தை பஞ்சாங்கத்தில் பார்க்கலாம்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்திருக்காங்க. இன்றைக்கு அட்சய ராசி உடைய நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திரம் ,குரு திசையில்,செவ்வாய் புத்தி, பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்கிறது.
அட்சய லக்ன பத்ததி மென்பொருளில் உள்ள ARP என்பது அட்சய ராசி.
ஜாதகருடைய அட்சயராசி மீன ராசியில் உள்ளது.
குரு உடைய தசா வருடத்தை நான்கு பாகங்களாக பிரிக்கும்பொழுது 4 ம் பாதத்தில்,குரு மகா திசை முடியக்கூடிய காலகட்டத்தில் உள்ளது.
அடுத்து உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி மகாதிசை ஆரமிக்கும்
ஜென்ம ராசி என்பது நாம் பூமியில் பிறந்த பொழுது பதிவு செய்யப்பட்ட ராசி.
அட்சய ராசி என்பது நம்முடைய
எண்ண ஓட்டங்களை அந்த நட்சத்திரத்தில் இருந்து இயக்குவது.
நம்முடைய நிலையை சொல்லக்கூடியது தான் அட்சய ராசி.
நன்றி.