Рет қаралды 31,767
Moochu Payirchi in Tamil, உடலை சுத்தி செய்யும் முறை, மூச்சு சுழற்சிப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி யோகா, பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி, பிராணாயாம மூச்சுப் பயிற்சி.
பாடல் #727: மூன்றாம் தந்திரம்
அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே!
உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் வெளிக்காட்டும் மந்திர மையாக இருக்கும் மூச்சு மூச்சு சுழற்சிப் பயிற்சியை சூரியன் மறையும் மாலை நேரத்தில் செய்தால் கபம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் உச்சியிலிருக்கும் மதிய நேரத்தில் செய்தால் வாதம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் தோன்றும் காலை நேரத்தில் செய்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். உடலில் விஷமாக இருக்கும் மூன்று விதமான வியாதிகளையும் நீக்கும் வழியாகவே இந்த பயிற்சியை அருளினோம். இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் முடிகள் நரைக்காமல், உடல் முதுமையடையாமல் இளமையாகவே எப்போதும் நிலைத்து நிற்கும் என்கிறார் திருமூலர் சித்தர்.
#aalayamselveer #thirumanthiram