Рет қаралды 90,934
Moochu Payirchi in Tamil, உடலை சுத்தி செய்யும் முறை, மூச்சு சுழற்சிப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி யோகா, பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி, பிராணாயாம மூச்சுப் பயிற்சி
பாடல் #726: மூன்றாம் தந்திரம்:
சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும்
சுழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே
பாடலின் விளக்கத்தை பார்க்கும் முன்னர், முதலில் இடகலை மற்றும் பிங்கலை என்றால் என்ன என்று பார்ப்போம், மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது.
பிராண வாயுவை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளில் மாறி மாறி இழுத்து வாங்கியும், சுழலும்படி உள் இருத்தி மூச்சு சுழற்சிப் பயிற்சி செய்து விட்டால் நாடிகள் சுத்தமாகும். அசுத்தம் கழிந்துவிடும். இவ்வாறு அசுத்தத்தை நீக்கி, தூய்மையான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அதன் வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியின் உள்ளும் அதை சென்று உலவும்படி செய்யும் மூச்சு சுழற்சிப் பயிற்சி முறையை அறிந்த வல்லவர்களுக்கு உடல் நெருப்பினால் சுட்டாலும் அழியாமல் இருந்து, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் வெளிக்காட்டும் மந்திர மையாக மூச்சு பயிற்சி அமையும் என்கிறார் திருமூலர் சித்தர்.
#aalayamselveer #thirumanthiram